67. கவிதை பாருங்கள்(photo,poem)

RoseTag2-hh

(அலட்சியப் போக்குத் தராது
இலட்சிய வாழ்வின் அர்த்தம்.
நிர்மூலமாகப் போகிறது உடல்!
அர்த்தம் நிறைந்த வாழ்விற்கு
கர்வத்தை விட்டொழித்து அன்பின்
பர்வதம் எறுவதில் தயக்கமென்ன!
சொர்க்கம் உன்கையில்!)

line3

315. வலைப்பூக்கள்

decorative_letter_set_v_clip_art_20307
imagesCAGB2VXW

வலைப்பூக்கள்

வலைப்பூக்கள் குமிழும் எண்ண
அலைப்பூக்கள், கருத்துக் குவியும்
கலைப்பூக்கள், கற்பூர ஒளிப்பூக்கள்.
மலைப்புடன் வியக்கும் பதிவு வலைகள்.

தினவெடுக்கும் எண்ணங்களை வரிவரியாய்
வனப்போடு வளைத்துச் சொற்சரம்
கனதியாகத் தூவும் களம்.
நனவும், கனவும் அரங்கேறும் தளம்.

கிறுக்கர், கில்லாடிகளின் அறுவைகளும்
அறுபொருளுடை அறிவு வரிகளும்
இறும்பூதடையும் அரும் செய்திகளும்
அறுவடைக்கும் (அறுவடை செய்யும்) இனிய வயல்.

பலருக்கு இதம் தரும்.
சிலருக்கு எரிச்சல் தரும்.
அலப்படை பகிரங்க வலைப்பூக்கள்.
அவலங்களும் நிறைவேறும் வலைப்பூக்கள்.

(அரும் பொருள் – ஐயமற்ற பொருள்.
இறும்பூதடையும் – வியப்பு அடையும்.
அலப்படை – கலப்பை, ஆயுதம்.)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22-4-2014.

T -29-4-2014.

reflection-swirl-2

இடைவேளையின் பின்னர் 10

6987793472_2ce6b72b85_z

இடைவேளையின் பின்னர் 10

சிம மலாக்கா தியான மண்டபத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி புதிதாக உல்லாப் பயணிகளை ஈர்க்க ஒரு பாலம் (2004 என்று உள்ளது…) கட்டியுள்ளனர். 1.2 மீட்டர் நடை தூரம்.
cey6th-24th-march14 263

அக்கரை சிறு தீவு போல கூடாரம் அமைத்து, மரங்களின் கீழ் இருக்கைகள் கட்டியுள்ளனர்.
cey6th-24th-march14 259

புல்லிலும் அமர்ந்திருந்து நீரின், நகரின் அழகை ரசிக்கலாம். நாம் போன போது பெரும்பாலும் காதலர்களாகவே சோடி சோடியாக இருந்தனர்.
4272-31117

அன்ன உருவில் நீர்ப் படகுகள் உண்டு நீரில் உலாச் செல்லலாம்.
cey6th-24th-march14 262

சிம மலாக்காவுக்கும் நீண்ட நடைப் பாலத்திற்கும் நடுவில் 200 மீட்டர் இடைவெளியாக இருக்கும்
நாம் போன போது இந்த இடைவெளியில் மலைப்பாம்பு ஒன்றை வைத்து ஒருவன் வித்தை காட்டினான். அத்தனை வெள்ளையர், நேபாளத்தாரும் பாம்பைத் தொட்டு கழுத்தில் போட்டும் புகைப்படம் எடுத்தபடி இருந்தனர். (அவனுக்கு அன்று நல்ல பண விருந்தாக இருந்திருக்கும்) எமக்கு அந்த ஆசை (அதைத் தொடவோ, படம் எடுக்கவோ) வரவில்லை. ” வா அக்கா!..” என்று தம்பி இழுத்துக் கொண்டே போய் விட்டார். எனக்கும் அருவருப்பாகவே இருந்தது அதைப் பார்க்க.
cey6th-24th-march14 258
இப் படங்களைப் பார்த்த என் மகள் ” அம்மா காட்சிகள் எல்லாம் வெளிநாட்டில் எடுத்த படங்கள் போலல்லவா உள்ளது!..” என்று வியந்தாள்.

இக்கரையில் தெருவோரம் இருந்த ஒரு மரம் எம்மை மிகவும் கவர்ந்தது.
cey6th-24th-march14 266

இதைப் படத்தில் பாருங்கள். சுமார் 100 வயதிருக்கலாம்…. தெரியவில்லை.
cey6th-24th-march14 268
தம்பி நிறையப் படம் எடுத்தார். இங்கு ஒன்றிரண்டு மட்டும் தருகிறேன்.
cey6th-24th-march14 267

கங்காராம தரைப்பக்க விகாரையில் ஒரு போதி மரம் உள்ளது. கிளை அனுராதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டு நாட்டப்பட்டதாகத் தகவல் உள்ளது.
ஒரு தடைவ பேருந்திற்காக கொழும்பு லேக்கவுஸ் அருகில் நின்று ஏறினோம்.
cey6th-24th-march14 136
இப்படத்தில் தூரத்தில் லேக்கவுஸ் தெரிகிறது.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
26-4-2014.

Big Blue Divider

இடைவேளையின் பின்னர் 9

52194068

இடைவேளையின் பின்னா 9

கங்காராம விகாரைக்கு அருகில் உள்ள பேற லேக்கின் (Beira lake) சிம மலாக்கா) (Simma malakaya) தியான மண்டபம் பார்க்கக் கிளம்பினோம். விகாரை நிலப்பக்கமாகவும் சிம மலாக்கா தியான மண்டபம் நீர்ப் பகுதியிலும் அமைத்துள்ளது. போய்க் கொண்டிருக்கிறோம் தூரத்தில் தெரிகிறது…
cey6th-24th-march14 249

ஆதியில் 19ம் நூற்றாண்டில் கட்டிய மண்டபம் நீரில் அமுங்க 1979ல் கியோப்ஃறி பவா (Geoffry Bawa) என்பவர் இதை மறு வடிவமைத்தாராம். இதிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் தான் (நிலப் பகுதியில்) கங்காராம விகாரை உள்ளது.
முன்பே இத் தியான மண்டபம் (சிம மலாக்கா) அன்பளிப்புகளால் உருவாக்கப் பட்டது என்று குறிப்பிட்டிருந்தேன்.

மண்டப வாயிலில் புத்தர் படுத்திருக்கும் உருவம் உள்ளது.
1609-40033 (Google Photo)
இரு பக்கமும் இரு மண்டபம் நடுவில் தியான மண்டபம். முழுவதும் நல்ல மர வேலைப்பாட்டினால் ஆகிய மண்டபமாகும்.
imagesCACMUAAB (Google Photo)

வெசாக் போன்ற திருவிழாக் காலத்தில் மிக அழகாக மின்சார அலங்கரிப்பு இருக்குமாம்.
1%20copy (Google Photo)

நீருக்குள் கட்டப்பட்ட சிம மலாக்கா ஸ்றெயின் க்கு மரப்பாதையில் நடந்து செல்ல வேண்டும்
பல புத்த உருவங்கள் செய்து அடுக்கியுள்ளனர்.
cey6th-24th-march14 254
cey6th-24th-march14 255

தியானம் செய்யும் அமைதி இடமாகவே இருக்கிறது.

நேபாள நாட்டுக் குழுவினர் நாம் போன போது குழுமியிருந்தனர். இந்தத் தியான மண்டபமும் கங்காராம விகாரையுடன் சேர்ந்ததே.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
23-4-2014

1653344_615174351888104_825373005_n

இடைவேளையின் பின்னர்…8.

dr -2

இடைவேளையின் பின்னர்…8.

எமது முகநூல் நண்பர் வதிரி ரவீந்திரன் அவர்களைச் சந்திப்பதும் எனது நிகழ்ச்சித் திட்டத்தில் ஒன்று. முதலில் தொலைபேசியில் அவருடன் பேசினேன். அவருடன் பேசும் போது யாழ் போகும் திட்டம் எனக்கு இருக்கவில்லை. யாழ் போகத் திட்டமிட்டதும் தங்கை தம்பியிடம் கூறி சகோதரர் ரவீந்திரன் தொலை பேசியில் அழைத்தால் யாழ் விஐயம் முடிய அவரைச் சந்திப்பதைத் தெரியப் படுத்தக் கேட்டிருந்தேன்.

அதன்படி வந்ததும் அவரோடு பேசி தங்கை வீட்டிற்கு அழைத்தேன் வருவதாக ஒப்புக் கொண்டு வந்தார். பேசினோம்.
cey6th-24th-march14 225
அனுபவங்களையும் பேசினார். சந்திப்பையிட்டு மிக மகிழ்வடைந்தேன். அவர் என்னிடம் வந்ததற்கு நான் தான் நன்றி கூற வேண்டும். நானும் எனது இரு புத்தகங்களை அவரிற்குக் கொடுத்தேன். அவரும் தனது நூலை எனக்குத் தந்தார்.
cey6th-24th-march14 226

அவரது நூல் ”மீண்டு வந்த நாட்கள்”;. 104 பக்கங்கள் கொண்ட கவிதை நூல்.

அவருக்கு மனமார்ந்த நன்றி. நாமெடுத்த படங்கள் திறமாக வரவில்லையாயினும் எனது நினைவிற்கு அது உதவும்.

அடுத்து கங்காராம விகாரையைப் பார்ப்பது (வணங்க அல்ல) என்று நானும் தம்பியும் போனோம்.
thalatha
கங்காராம விகார கொழும்பின் மிகப் பெரிய புத்த வணக்கத்தலம். டொன் பஸ்ரியன் எனும் கப்பல் வியாபாரி 19ம் நூற்றாண்டில் இடம் தேடி இதை உருவாக்கினான். கண்டி தலதாமாளிகையின் சாயல் இருப்பதாகப் பேசினார்கள். இது பேற லேக்கினுள் இருப்பதல்ல தரைப்பகுதியில் உள்ள புத்த கோயில்.
cey6th-24th-march14 270cey6th-24th-march14 272

தாய்லாந்து, இந்திய, சீன கட்டிடக்கலைகளைத் தழுவி அமைக்கப் பட்டுள்ளது. மியூசியம், வாசிகசாலை, புத்தமதப் பாடசாலை, தியான இடம் என்பவையும் இதனுடன் சேர்ந்து உள்ளது.
thalatha-2

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
20-4-2014.

Divider_Pink_Heart_001

இடைவேளையின் பின்னர்…7

UKKGRedOq0H1dAUd1wI09alHH-aeTaAWixZiuoElOKAWVJucxRlMAm0n4NQpn5YBITcXKYjWDnrXpu2ahwMUOZf4ik2zhSOge1ZUxcBGgGcjWrp929IVOCUvMlxAptZn7fhSrI&h=256&w=256&scale=1

இடைவேளையின் பின்னர்…7

அதி காலை 6.30 அளவில் அனுராதபுரம் பயணமானோம். யாழிலிருந்து அனுராதபுரம் 156 கி.மீ தூரம் என ஒரு தகவல் கூறுகிறது. cey6th-24th-march14 212cey6th-24th-march14 213

அங்கு போய்ச் சேர கிட்டத்தட்ட 4 மணி நேரம் எடுத்தது.

இலங்கையின் வடமத்திய மாகாணத் தலை நகர் நகரம். ஒரு காலத்தில் ஆயிரம் வருடம் தலைநகராக இருந்ததாம். இராஐரட்டை எனும் தொகுதியின் முதல் தலை நகராக இது இருந்துள்ளது. கொழும்பிலிருந்து 205கி.மீட்டர் தூரமாக உள்ளது.

சிங்கள வரலாற்று நூலான மகாவம்சத்தின் படி இந்தியாவிலிருந்து விஐயனுடன் வந்த 700 தோழர்களில் ஒருவனான அனுராத என்பவன் உருவாக்கிய கிராமமாக இது இருந்தது. பாண்டுகபய எனும் அரசன் இதை அனுராதபுரமாக மாற்றி தலைநகர் ஆக்கினானாம்.

இந்திய அசோகச்சக்கரவர்த்தியின் மகள் புத்தபிக்குணி சங்கமித்தை இந்தியாவிலிருந்து கொண்டு வந்த வெள்ளரச மரக்கிளை இங்கு தான் நாட்டப்பட்டது.
240px-Anuradhapura_district_svg

இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றான இங்கு 7 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. 694 கிராமசேவையாளர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள். (தகவல் விக்கி பீடியா)
வாகனத்திலேயே காலையுணவுப் பொதியை சாப்பிட்டோம்.

ஒரு மணி நேரத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முருகண்டிப் பிள்ளையார் கோயிலை அடைந்தோம்.
cey6th-24th-march14 216cey6th-24th-march14 215
ஏ9 பெருந்தெருவோடு உள்ள கோயில் இது. அந்தத் தெருவோடு போகும் அத்தனை வாகனங்களும் நிறுத்தி வழிபட்டுப் போவார்கள்.
நாங்களும் இங்கு இறங்கி இறைவனை வணங்கிச் சென்றோம்.

10 மணியளவில் அனுராதபுரம் சென்றோம். எங்கும் உலாத்தவில்லை. தேநீர் ஒன்று குடித்துவிட்டு கொழும்பு செல்லும் பேருந்து தேடி உதவினார் உறவினர். நானும் அவரது தாயாரும் கொழும்பு பயணமானோம். இப்போது இருக்கை நல்ல வசதியாக அமைந்தது. 4.00 மணியளவில் பெட்டா பேருந்து நிலையம் வந்திறங்கினோம்.அங்கிருந்து தங்கை வீட்டிற்கு முச்சக்கர வண்டியில் சென்றோம்.

துளசி இலை, குறிஞ்சா இலை, கெய்யாக்காய், நெல்லிக்காய், விளாம்பழம், பப்பாளிப்பழம், வல்லாரைச் சம்பல், முருங்கைக்கீi, அகத்திக்கீரை இப்படிப் பல சுவைக்கும் வாய்ப்புக் கிடைத்தது இலங்கையில்.

இவைகளில் சில இங்கு கிடைப்பதில்லை.

வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
17-4-2014.

16161859-ab

314. புத்தாண்டு மலரட்டும்!

10155971_766736123376575_4122510915186254518_n

முகநூல் குழு ” கவிதை சங்கமம் ” 2015 சித்தரை வருடக் கவிதைப் போட்டியில்
முதலிடம் பெற்ற கவிதை. அனைவருக்கும் மிகுந்த நன்றி
இவ் அங்கீகாரத்திற்கு.

புத்தாண்டு மலரட்டும்!

காலமெனும் மந்திரவாதியின் கோல் சுழன்றசைந்தது.
காட்சியாகிறது புத்தாண்டு. நீட்சியாகட்டும் பேரானந்தம்.
மதிய வெயில் ஒளியெனப் பெயர்
பதிய வரட்டும் நல்வரவு! நல்வரவு!

எப்படி அமையும் புதிய காலப்படி!
ஆர்வப்படி வினாக்கள் வரிசைப்படி
வெற்றிப் படிகளே முற்றும் நிறைந்தபடி
சுற்றி வா புத்தாண்டே பலராசைப்படி!

பிறையாக மிளிரும் புத்தாண்டே! புத்தாண்டே!
குறை தீரவா! கொற்றவையாக வா!
உறைவிடம் தொலைத்த மக்களிற்கு நல்
உறையுள் கொண்டு உறவாக வா!

தன்னைப் புதுப்பித்த காலக் கொத்து
அன்னை உருவாக ஊனங்கள் அழித்து
முன்னைப் பெருமைகள் அள்ளிச் சேர்க்கட்டும்!
கருண்ய ஆண்டாக புத்தாண்டு மலரட்டும்!

கானம், ஞானம், கவிதைச் சுடர்
கலந்து, கவிந்து காசினி வீதியில்
கவின் பெறட்டும் தமிழ் ஜோதி
கம்பன் பாரதி சாதனையாகட்டும்!

பா ஆக்கம் வேதா.இலங்காதிலகம்.
டென்மார்க்.
8-4-2014.

pongallarge

313. சிலிர்த்து வரட்டும் சித்திரை!…..2014

imagescadgnv171

சிலிர்த்து வரட்டும் சித்திரை!…2014..

ஆதபக் கதிர் பரந்து அணைக்க
ஆதரித்துப் பால் சோறாக்கி இணைக்க
கீதமிசைக்கும் இன்பம் மனதை நனைக்க
சாதகமாய்ப் புத்தாண்டை இனிது இணைப்போம்.

சிற்றலகால் சிறுகச்சிறுகக் கொத்தி வெளிப்படும்
குற்றமற்ற புத்தம்புதுக் குஞ்சாய் வெளியாகவும்
பற்றற்ற அந்தகார இருட்டிலொரு ஒளியாகவும்
அற்றம் அழித்து சுந்தர ஒளியாயுதிக்கட்டும்.

ஞாபக வீதியில் எப்போதும் புத்தொளியாய்
ஞான முத்திரை பதிக்கப் பிறக்கட்டும்!
ஞான சூன்யமாக்கியது ஓரின மனிதநேயத்தை
ஞாயம் தர இம்முறையாவது பிறக்கட்டும் புத்தாண்டு!

சிறக்கட்டும் சிலிர்த்து வரும் சித்திரை!
இறக்கட்டும் செந்தமிழர் துன்பம்!
நிறக்கட்டும் மனம் இன்ப வானவில்லாக!
பிறக்கட்டும் புத்தாண்டு தொல்லைகள் அழிக்க!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
13-4-2014

T- 22-4-2014.

pongallarge

இடைவேளையின் பின்னர்…6.

Map_Jaffna_Pt-Pedro_Sinhala_Villages-2

இடைவேளையின் பின்னர்…6.

உறவினர் யாழ் செல்வதாக அறிந்து நானும் அவர்களுடன் செல்லலாம் என்று திடீரென 3 மணி நேரத்தில் முடிவெடுத்து வெள்ளவத்தையில் இரவுப் பேருந்தில் 8.30 (20.30) யாழ்ப்பாணம் புறப்பட்டோம். பேருந்தில் வசதி குறைவாகவே இருந்தது. ஆயினும் சமாளித்தோம். அதிகாலை 5.30 மணிக்கு தெல்லிப்பளையில் இறங்கினோம்.

யாழ்ப்பாணம் மாங்காய் வடிவ இலங்கைத் தீவின் வட பகுதி, தலைப்பகுதியாகும்.
கொழும்பிலிருந்து 363 கிலோ மீட்டர் தூரம்.
தெல்லிப்பளை அருள்மிகு சிறீ காசி விநாயகர் தேவஸ்தானம் புனருத்தாரண மகா கும்பாபிசேகம். இதன் காரணமாகவே தெல்லிப்பளை சென்றோம். தங்கிய வீட்டிலிருந்து ஜந்து நிமிட நடையில் கோயில்.
cey6th-24th-march14 172

போனதும் தலையில் குளித்து கோயிலுக்குப் போனோம். அன்று எண்ணெய்க் காப்பு. இதுவே முதற் தடவையாக நான் பங்கு பற்றினேன். மிக மகிழ்வும், திருப்தியாகவும் இருந்தது.

தங்கை கூறி அனுப்பினார் கவனம் தரையில் எண்ணெய் வழுக்கும் கவனமாக செய்ய வேண்டும் என்று. நாம் காலை 9 மணிக்கே (தரையிலும் எண்ணெய் சிந்த முதல்) சென்றதால் மக்கள் கூட்டம் இல்லை. வடிவாக ஆறுதலாகச் செய்து வந்தோம்.
cey6th-24th-march14 145

எனது ஊர் கோப்பாய். (தெல்லிப்பளையிலிருந்து 6-7 கி.மீ தூரமிருக்கும்)
அமரரான எனது இன்னொரு தங்கை மகன் அங்கு இருக்கிறார். அவருக்கு முதலிலேயே தொலைபேசியில் கூறியிருந்தேன். அவர் யாழ் சென்ரல் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். பாடசாலை முடிய மாலையில் என்னைக் காண வருவதாகக் கூறினார்.

மாலை 4.30 மணிக்கு அவரும், மனைவியும் குட்டி மகனும் முச்சக்கர வண்டியில் வந்தனர். இருந்து பேசி என்னையும் தங்களுடன் கூட்டிப் போனார்கள்.

கோப்பாய் ஊரில் பெரியவர்களான இருவரை அவர்கள் வீட்டில் சென்று சந்தித்தோம். மொத்தம் ஏழு உறவினர் வீடுகளிற்கு, (சிறுப்பிட்டி எனும் ஊரிலும் எனது பெரியம்மாவின் மகளும் இருந்தார்) விஜயம் செய்தோம் தங்கை மகனும் நானுமாக. (எல்லாம் அவரின் மோட்டார் சைக்கிளின் கைங்கரியம்; தான்)

தங்கை மகன் என்னை இரவு 8 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் தெல்லிப்பளையில் கொண்டு வந்து விட்டார்.

இத்துடன் எனது கோப்பாய் விஜயம் முடிந்தது.
ஆறுதலாகக் கோப்பாய் வீதியில் நடக்கவில்லை என்று மிக மனவருத்தம் தான். எனது பயணத் திட்டத்தில் யாழ் விஜயம் முதலில் இருக்கவே இல்லை.

அடுத்த நாள் தெல்லிப்பளை கோயிலில் கும்பாபிசேகம். இதுவும் எனது முதல் அனுபவம். நன்கு அனுபவித்தேன்.
cey6th-24th-march14 177
cey6th-24th-march14 166
அதிகாலை 6.30 மணிக்கு அனுராதபுரம் நோக்கி காரில் பயணமானோம்.

கொழும்பில் உள்ள என் தங்கை மகளின் கணவர் அநுராதபுரத்தில் வைத்தியராக, வைத்திய ஆலோசகராகக் கடமை புரிபவர். அவரது வாகனத்தில் அவர், அவரது தாயார் நானுமாகப் பயணமானோம்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
11-4-2014

இடைவேளையின் பின்னர்… 5

cey6th-24th-march14 122

இடைவேளையின் பின்னர்… 5

என்றுமில்லாத மாதிரி கொழும்பு போய் இறங்கியதும் என் காது நன்றாக அடைத்து விட்டது.
கணவரும் பகிடி பண்ணினார் ”…என்ன!… காது கேட்கவில்லையா!”.. என்று.
கதைக்கும் போது டாக்டர் முருகானந்தத்திடம் இதைக் கூற
1. மூக்கை இறுகப் பொத்தியபடி வாயால் காற்றை எடுத்து கையை எடுங்கள் காற்று காதாலும் வெளி வரும்.
2. விமானம் இறங்கும் போதும், ஏறும் போதும் சுவீங்கம் சப்பலாம்
என்று 2 டிப்ஸ் தந்தார். வரும் போது இதைக் கடைப் பிடித்தேன் பலன் அளித்தது. மிக்க நன்றி டாக்டர். இதுவே அவரின் 3 புத்தகங்கள்.
dr -1 dr -2 dr -3

நானும் தம்பியும் கொச்சிக்கடை பொன்னம்பலவாணேசர் கோவிலுக்குச் சென்றோம். அன்று தேர் திருவிழாவாகவும் இருந்தது. நாங்கள் பேருந்தில் போனதால் நேரமாகிவிட்டது. தேர் இருப்பிடத்திற்கு வந்து விட்டது. நன்றாகச் சுற்றிக் கும்பிட்டு வந்தோம். 3 தேர்கள் படத்தில் காண்கிறீர்கள்.
cey6th-24th-march14 117

இந்தக் கோவிலை சேர் பொன்னம்பலம் இராமநாதரின் தந்தை பொன்னம்பல முதலியார் 1957ல் குடமுழுக்குச் செய்வித்தார். பின்னர் 1907ல் இதை கருங்கல்லில் கட்டுவித்து இராமநாதன் அவர்கள் 1912ல் குடமுழுக்குச் செய்வித்தாராம்.
cey6th-24th-march14 115

இந்திய விஜயநகரக் கட்டிடக்கலையைத் தழுவி இது கட்டப்பட்டது. தூண், சிற்பங்கள், கூரைகள் கருங்கற்களில் செதுக்கப் பட்டது. சில கருங்கற்கள் இந்தியாவிலிருந்தும் தருவிக்கப் பட்டது.
cey6th-24th-march14 129

சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கை தேசியத் தலைவர். சட்டம் பயின்ற உயர் நீதிமன்ற வழக்கறிஞர். சொலிசிஸ்டர் ஜெனரலாகவும் பதவி வகித்தவர். இலங்கையின் முழுமையான தேசியவாதியென தங்கப் பதக்கம் பெற்ற கெனரவமுடையவர்.

ஒரு தடவை கொழும்பு செட்டித் தெருவினூடாகப் போனோம்.
colombo
செட்டித் தெரு தான் தங்க நகைக் கடை வீதி. மிகவும் அமைதியாகக் காட்சி தந்தது.
முன்பென்றால் எப்போது போனாலும் ஒரே கலகலப்பாக ஜே! ..ஜே!…என்று நடைபாதைக் கடைக்காரர் கூவிக் கூவி விற்பார்கள்.
இந்த அமைதி ஏமாற்றமாக இருந்தது.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
9-4-2014.

images 2356

Previous Older Entries