3. இடைவேளையின் பின்பு 3.

இடைவேளையின் பின்பு 3.

இலங்கையில் பிறந்து எவ்வளவோ காலம் வளர்ந்து, வாழ்ந்து 26 வருட டென்மார்க் வாழ்வின் பின் 2-3 கிழமை அங்கு போய் நிற்பது, வியர்வையில் குளிப்பாட்டுவது போல ஏன் இருக்கிறது! புரியவில்லை! அத்துடன் இமிற்றேசன் (போலி) கழுத்தணி, கையணிகள் வியர்வையுடன் புரண்டு எரிச்சலைத் தந்தன. தங்க நகைகள் பெரும் பாலும் பலர் அணிவதில்லை.

தம்பி வீட்டிற்கும் தங்கை வீட்டிற்கும் ஆறுதலாக நடக்க 15 நிமிட 20 நிமிட நேர இடைவெளி வரும். தெருவை இரு பக்கமும் கிண்டி பாதையை விரிவு படுத்தும் வேலையால் இன்னும் நேரமெடுக்கும்.
இதை விட தெருவைக் கடப்புதும், தெருவோரம் நடந்து செல்வதும் உயிரைக் கையில் பிடித்தபடி நடப்பது போலாகும். குடை பிடித்தபடி (வெயில் தானே கொளுத்துதே!) நடந்து போய் கால்களை உயரே வைத்தபடி விசிறிக் கொண்டு அமர்ந்திடுவேன்.
cey6th-24th-march14 070 cey6th-24th-march14 071 cey6th-24th-march14 063

நீண்ட தூரங்களை பேருந்திலும் குறுகிய தூரங்களை முச்சக்கர வண்டியிலும் பயணித்தோம்.

பாதையில் நடப்பது படு பயங்கரம். எல்லோரும் படு சுய நலம்..!!!!

முச்சக்கர வண்டி – தான் முண்டியடித்து சந்து பொந்தில் புகுந்து ஓடவேணும். பேருந்துகளும் அப்படியே.
கராட்டி – குங்பூ படித்துத் தான் இதில் ஏற வேண்டும். நீர் கடைசி ஆளா? இறங்க முதல் பேருந்தை இழுப்பான். இது கண்டக்டரின் அவசரம்.

ஒரு தடவை நான் ஓடிய பேருந்தால் இறங்கினேன்.
நல்ல வேளை விழவில்லை.
அதை விட 15 வருடத்திற்கும் மேலாக முதுகு நோவெனும் பிரச்சனையுள்ளவள் நினைத்துப் பாருங்கள்..!!!!!
இறங்கியதும் பேருந்தில் அடித்து (தட்டி) ” மொக்கத கரண்ணே?..” (என்ன செய்கிறாய்?..) என்று அவனை எரிப்பது போலக் கேட்டேன்.
வயசு போனதுகள் வாழ்பவர்கள் என்று எண்ணமே இல்லை சுயநலம்!…சுயநலம்!….
அதன் பின்பு இறுதியாக நான் இறங்கும் போது ”..பொட்டக் இண்ட…..பையினவா.” (கொஞ்சம் பொறு! இறங்குகிறேன் ) என்று கூறியபடியே இறங்கினேன்.
பேருந்தினுள் இறங்குபவர், ஏறுபவர் என்று ஒழுங்கு முறையே இல்லை. இடித்துத் தள்ளி, நெரித்து, தலைமயிர், கைப்பை எதுவானாலும் கடாசி, இழுபட்டு இறங்குவார்கள்…சுயநலம்!…சுயநலம்!….
மற்றவனைப் பற்றிய எந்தச் சிந்தனையுமே இல்லை! துளியளவும் இல்லை. பேருந்தில் ஏறியதும் இருக்க இடம் கிடைத்தால் அவர் அதிஷ்ட்டம் செய்தவரே.
இது என் மனக் கொதிப்பே.
நாட்டில் பாதைகள் சரிக்கட்டுகிறார்கள்.
மிக மிக நல்லது. 20 நிமிடத்தில் விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்குள் வந்து விடலாம். ஆம்சரடாம் தெரு போல அழகாக உள்ளது. நன்று.
என்ன பயன்! வாழ்வு முறை என்று மாறும்!!!! மனிதராக என்று வாழுவோம்.!!!

இது என் ஆதங்கம்……

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
1-4-2014

48176-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Border-Of-Rainbow-Lines

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pkandaswamy
  ஏப் 01, 2014 @ 22:08:30

  வாழ்க்கையின் போராட்டத்தில் மனிதப் பண்புகள் மறைந்து போயின சகோதரி.

  மறுமொழி

 2. karanthaijayakumar
  ஏப் 02, 2014 @ 00:02:33

  ஆம் சகோதரியாரே சுயநலம் மிகுந்துதான் போய்விட்டது.

  மறுமொழி

 3. கோமதி அரசு
  ஏப் 02, 2014 @ 01:03:24

  எல்லோரும் அவசரம், அவசரம் வேகம், வேகம் என்று ஓடிக் கொண்டு இருக்கிறார்கள் அதனால் நின்று நிதானித்து போக நேரம் இல்லை.

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 02, 2014 @ 03:23:40

  இன்றைய நிலை அப்படித்தான் ஆகி விட்டது…

  மறுமொழி

 5. கிரேஸ்
  ஏப் 02, 2014 @ 03:38:10

  இங்கும் அதே நிலைமைதான்..//வாழ்வு முறை என்று மாறும்!!!! மனிதராக என்று வாழுவோம்.!!!// உண்மைதான்…

  மறுமொழி

 6. Rajarajeswari jaghamani
  ஏப் 02, 2014 @ 03:57:29

  ! வாழ்வு முறை என்று மாறும்!!!! மனிதராக என்று வாழுவோம்.!!!

  இது அனைவரின் ஆதங்கம் கூட……

  மறுமொழி

 7. bagawanjee
  ஏப் 02, 2014 @ 08:15:22

  சொல்ல கஷ்டமாகத்தான் இருக்கிறது ,யாருடைய சுயநலமும் மாறவே மாறாது,சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்வது நல்லது என்று படுகிறது !

  மறுமொழி

 8. Dr.M.K.Muruganandan
  ஏப் 02, 2014 @ 10:23:42

  ஆம் சுயநலம் மேலோங்கிவிட்டது.
  என்ன செய்வது இதில்தான் நம் வாழ்வு ஓடுகிறது.
  நாளாந்த போராட்டங்களுடன்

  மறுமொழி

 9. sujatha
  ஏப் 03, 2014 @ 06:12:02

  இன்று பணப்புழக்கம் இருக்கலாம் இல்லை வேலைப்பழு அதிகமாக இருக்கலாம். ஆனால் ஆசிய நாட்டை பொறுத்தமட்டில்
  ஒழுங்குமுறை, விதிமுறைகள் கடைப்பிடிக்க தவறிவிட்டார்கள்.
  இது தான். உண்மை. இதனால் மனிதன் முந்தியடித்து பெற வேண்டியதை பெறுகின்றான். ஆனாலும் கட்டுரையில் இன்றும்
  இலங்கையில் ஒடிக்கொண்டிருக்கும் நிலவரத்தை வெளிப்படுத்தியமை அருமை.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: