4. இடைவேளையின் பின்பு 4…..

1460110_10202637350034607_547321136_n
(பாலன் தனது தாயாருடன்.
தயார் மாமி (மனோன்மணி) இன்னும் உயிருடன் உள்ளார்.
எத்தனை வயதானும் பிள்ளை பிள்ளை தானே!
இது தாய்மை உணர்வு. அவரது வேதனை சொல்லில் அடங்காது. என்னை வைத்து என் பிள்ளையை எடுத்து விட்டாயே எனக் கலங்கும் தாய். )

இடைவேளையின் பின்பு 4…..

புதிய தெருக்கள் அமைப்பது பற்றியும்…அதனால் என்ன பயன்!!…வாழ்வு முறை என்று மாறும்!… என்று ஆதங்கப்பட்டேன் கடந்த பகுதியில்.
பயண விபரங்கள் தொடர முதல்….
நான் 23ம் திகதி இரவு 9.20க்கு இலங்கையில் விமானம் ஏறினேன் டென்மார்க் வர. 22ம் திகதி பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு மைத்துனர் (என் தங்கையின் கணவரின் தம்பி) உடற் பயிற்ச்சிக்காக நடப்பதற்கு அதிகாலை ஜந்தரை மணிக்கு வெளியே போனவர் இன்னும் வீடு வரவில்லை என்று எல்லோரும் தேடினர். இறுதியாக பொலிசில் சென்று ஆளைக் காணவில்லை எனப் புகார் கொடுத்த போது பொலீசார் தாங்கள் காணக் கூடியதாக ஒரு வீதி விபத்து நடந்தது என்றனர். வைத்தியசாலை சென்று பார்த்தால் பிண அறையில் அவர் உடல் இருந்தது.

பாலன் எனும் இவர் மஞ்சள் கோட்டில் தெருவைக் கடக்கும் போது வேகமாக வந்த ஒரு வான் அவரை அடிக்க கால் முறிந்து வாகனத்தின் மேல் அவர் தூக்கி எறியப் பட்டு அந்த இடத்திலேயே தலையில் அடிபட்டதால் இறந்திட்டார்.

தமிழ் சாரதி அடித்திட்டு ஓடி விட்டார். அவரது வாகன இலக்கத் தகடு கீழே விழுந்திருந்ததால் அவரைப் பின்பு பிடித்தனர். மீதி வழமை முறைகள் அங்கு தொடர்கிறது.
எல்லோரையும் கதி கலக்கிய இது ஒரு திடுக்கிடும் சாவு.

இப்படித் தான் நடக்கிறது.

தம்பி வீட்டிற்கு நான் போனால் மறுபடி திரும்பிப் போகும் போது ” கவனம் அக்கா! பார்த்துத் தெருவைக் கடக்க வேண்டும!”… என்பார் ஒவ்வோரு தடவையும்.
ஒரு தடவை தனது சின்ன மகனை அனுப்பி என்னைத் தெருவைக் கடந்து விட்டிட்டு மகன் சென்றார்.
நானும் தம்பியும் மஞ்சள் கோட்டில் தெருவைக் கடந்தால் தனது கையை வாகனச் சாரதிக்குக் காட்டி கொஞ்சம் பொறுங்கள் நாம் கடக்கிறோம் என்று கடக்கும் வரை கையைக் காட்டியபடி நடப்பார். இதை நான் இங்குள்ள வீதிச் சட்டத்தைக் கூறி இது என்ன அநியாயமப்பா என்பேன்.

இப்படி உள்ளது

பாலனின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கும் அமைதி கிட்டட்டும்.

இனிமுகநூல் நண்பர் லோகநாதன் பிஎஸ் வீட்டிற்கு தம்பியுடன் செல்ல ஒழுங்கு பண்ணி சென்றோம். நீண்ட நேரம் இருந்து பேசினோம். கதை கதையாம் காரணமாம் என்று ”..நொண் ஸ்ரோப்பாக..” கதை நடந்தது. இனிமையான அன்பான பொழுதாக கழிந்தது. இவர் அருமையான ஒரு வீட்டு ஏரியாவில் இருந்தார். மிக மிகப் பிடித்திருந்துது அந்த ஏரியாவின் சூழல்.
சமீபமாகவே கங்காராம விகாரையும் உள்ளது. வீட்டில் மனைவியார், ஒரு மகனும் இருந்தனர். அவரது மகனும் எனது தம்பியின் மூத்த மகனும் (இலண்டனில் இருப்பவர்) நண்பர்கள். இவருக்கும் எனது இரண்டு புத்தகங்கள் கொடுத்தேன். அவரும் எனக்கு இரண்டு புத்தகங்கள் தந்தார். எங்களை அவரது மகனார் (அருண்) தனது காரில் கொண்டு வந்து விட்டு தம்பி வீட்டிற்கும் விஜயம் செய்து சென்றார்.

சந்திப்பிற்கும் மிக மகிழ்வடைந்தேன்….லோகநாதன் அவர்களே.

புத்தகத்திற்கும் மிக்க நன்றி.
cey6th-24th-march14 048
cey6th-24th-march14 062

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
3-4-2014.

anjali-2

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  ஏப் 05, 2014 @ 02:36:28

  பாலன் அவர்களின் பிரிவு மனதைக் கனக்கச் செய்கிறது
  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் சகோதரியாரே

  மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  ஏப் 07, 2014 @ 06:32:15

  பாலனின் ஆத்மா சாந்தியடையட்டும்.
  அவரது குடும்பத்தினருக்கும் அமைதி கிட்டட்டும்

  மறுமொழி

 3. இரவின் புன்னகை- வெற்றிவேல்
  ஏப் 07, 2014 @ 18:39:19

  பாலனின் ஆன்மா அமைதியடையட்டும்…

  ஒவ்வொருவரும் சாலையைக் கடக்கும் போது நிச்சயம் கவனத்துடன் செயல் பட வேண்டும்….

  மறுமொழி

 4. ஸ்ரீராம்
  ஏப் 10, 2014 @ 07:23:58

  திடீர் மரணங்கள் நம்மை நிலைகுலையச் செய்துவிடும். பாலன் ஆன்மா சாந்தி அடையட்டும்.

  மறுமொழி

 5. yarlpavanan
  ஏப் 10, 2014 @ 22:15:05

  பலருக்கு வழிகாட்டும் சிறந்த பதிவு

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: