இடைவேளையின் பின்னர்… 5

cey6th-24th-march14 122

இடைவேளையின் பின்னர்… 5

என்றுமில்லாத மாதிரி கொழும்பு போய் இறங்கியதும் என் காது நன்றாக அடைத்து விட்டது.
கணவரும் பகிடி பண்ணினார் ”…என்ன!… காது கேட்கவில்லையா!”.. என்று.
கதைக்கும் போது டாக்டர் முருகானந்தத்திடம் இதைக் கூற
1. மூக்கை இறுகப் பொத்தியபடி வாயால் காற்றை எடுத்து கையை எடுங்கள் காற்று காதாலும் வெளி வரும்.
2. விமானம் இறங்கும் போதும், ஏறும் போதும் சுவீங்கம் சப்பலாம்
என்று 2 டிப்ஸ் தந்தார். வரும் போது இதைக் கடைப் பிடித்தேன் பலன் அளித்தது. மிக்க நன்றி டாக்டர். இதுவே அவரின் 3 புத்தகங்கள்.
dr -1 dr -2 dr -3

நானும் தம்பியும் கொச்சிக்கடை பொன்னம்பலவாணேசர் கோவிலுக்குச் சென்றோம். அன்று தேர் திருவிழாவாகவும் இருந்தது. நாங்கள் பேருந்தில் போனதால் நேரமாகிவிட்டது. தேர் இருப்பிடத்திற்கு வந்து விட்டது. நன்றாகச் சுற்றிக் கும்பிட்டு வந்தோம். 3 தேர்கள் படத்தில் காண்கிறீர்கள்.
cey6th-24th-march14 117

இந்தக் கோவிலை சேர் பொன்னம்பலம் இராமநாதரின் தந்தை பொன்னம்பல முதலியார் 1957ல் குடமுழுக்குச் செய்வித்தார். பின்னர் 1907ல் இதை கருங்கல்லில் கட்டுவித்து இராமநாதன் அவர்கள் 1912ல் குடமுழுக்குச் செய்வித்தாராம்.
cey6th-24th-march14 115

இந்திய விஜயநகரக் கட்டிடக்கலையைத் தழுவி இது கட்டப்பட்டது. தூண், சிற்பங்கள், கூரைகள் கருங்கற்களில் செதுக்கப் பட்டது. சில கருங்கற்கள் இந்தியாவிலிருந்தும் தருவிக்கப் பட்டது.
cey6th-24th-march14 129

சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கை தேசியத் தலைவர். சட்டம் பயின்ற உயர் நீதிமன்ற வழக்கறிஞர். சொலிசிஸ்டர் ஜெனரலாகவும் பதவி வகித்தவர். இலங்கையின் முழுமையான தேசியவாதியென தங்கப் பதக்கம் பெற்ற கெனரவமுடையவர்.

ஒரு தடவை கொழும்பு செட்டித் தெருவினூடாகப் போனோம்.
colombo
செட்டித் தெரு தான் தங்க நகைக் கடை வீதி. மிகவும் அமைதியாகக் காட்சி தந்தது.
முன்பென்றால் எப்போது போனாலும் ஒரே கலகலப்பாக ஜே! ..ஜே!…என்று நடைபாதைக் கடைக்காரர் கூவிக் கூவி விற்பார்கள்.
இந்த அமைதி ஏமாற்றமாக இருந்தது.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
9-4-2014.

images 2356

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. sujatha
  ஏப் 09, 2014 @ 22:35:16

  பயணத்தின் மறுபக்கம் தகவல்களும் அறியமுடிகின்றது. கோயில்
  கட்டியெழுப்பிய தகவலையும் கட்டுரையில் எழுதியமை சிறப்பானது.

  மறுமொழி

 2. A . Carunairuban
  ஏப் 09, 2014 @ 22:43:08

  2006 இல், சிவராத்திரியின்போது பொன்னம்பலவானேஸ்வரத்தில் கண் விழித்ததன் பிற்பாடு இன்னும் அங்கு செல்ல சந்தர்ப்பம் அமையவில்லை….புகைப்படங்கள் அருமையாக உள்ளன.

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 21, 2014 @ 19:32:13

   மிக நன்றியுடன் மகிழ்வும் கொண்டேன்.
   எங்கிருந்து எழுதினீர் என்றும் தெரியவில்லை.
   வாசித்தது மகிழ்வாக உள்ளது.
   மீண்டும் நன்றி..நன்றி.

   மறுமொழி

 3. karanthaijayakumar
  ஏப் 10, 2014 @ 01:35:51

  கோயில் படங்கள் அருமை சகோதரியாரே
  கோயிலின் உட்பிரகாரம் படம், இராமேசுவரம் கோயிலை
  நினைவுபடுத்துகிறது
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 4. Dindigul Dhanabalan (DD)
  ஏப் 10, 2014 @ 02:27:34

  படங்கள் அனைத்தும் அருமை… நாங்களும் பயணப்பட்டோம் சகோதரி…

  மறுமொழி

 5. Bagawanjee KA
  ஏப் 10, 2014 @ 03:38:42

  டாகடர் முருகானந்தம் கொடுத்த டிப்ஸ் அனைவருக்கும் பயன் தரக்கூடியது !

  மறுமொழி

 6. Rajarajeswari jaghamani
  ஏப் 10, 2014 @ 05:29:55

  பொன்னம்பலவாணேசர் கோவில் தேர் திருவிழா படங்கள்
  பகிர்வுகள் அருமை..பாராட்டுக்கள்.!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: