இடைவேளையின் பின்னர்…6.

Map_Jaffna_Pt-Pedro_Sinhala_Villages-2

இடைவேளையின் பின்னர்…6.

உறவினர் யாழ் செல்வதாக அறிந்து நானும் அவர்களுடன் செல்லலாம் என்று திடீரென 3 மணி நேரத்தில் முடிவெடுத்து வெள்ளவத்தையில் இரவுப் பேருந்தில் 8.30 (20.30) யாழ்ப்பாணம் புறப்பட்டோம். பேருந்தில் வசதி குறைவாகவே இருந்தது. ஆயினும் சமாளித்தோம். அதிகாலை 5.30 மணிக்கு தெல்லிப்பளையில் இறங்கினோம்.

யாழ்ப்பாணம் மாங்காய் வடிவ இலங்கைத் தீவின் வட பகுதி, தலைப்பகுதியாகும்.
கொழும்பிலிருந்து 363 கிலோ மீட்டர் தூரம்.
தெல்லிப்பளை அருள்மிகு சிறீ காசி விநாயகர் தேவஸ்தானம் புனருத்தாரண மகா கும்பாபிசேகம். இதன் காரணமாகவே தெல்லிப்பளை சென்றோம். தங்கிய வீட்டிலிருந்து ஜந்து நிமிட நடையில் கோயில்.
cey6th-24th-march14 172

போனதும் தலையில் குளித்து கோயிலுக்குப் போனோம். அன்று எண்ணெய்க் காப்பு. இதுவே முதற் தடவையாக நான் பங்கு பற்றினேன். மிக மகிழ்வும், திருப்தியாகவும் இருந்தது.

தங்கை கூறி அனுப்பினார் கவனம் தரையில் எண்ணெய் வழுக்கும் கவனமாக செய்ய வேண்டும் என்று. நாம் காலை 9 மணிக்கே (தரையிலும் எண்ணெய் சிந்த முதல்) சென்றதால் மக்கள் கூட்டம் இல்லை. வடிவாக ஆறுதலாகச் செய்து வந்தோம்.
cey6th-24th-march14 145

எனது ஊர் கோப்பாய். (தெல்லிப்பளையிலிருந்து 6-7 கி.மீ தூரமிருக்கும்)
அமரரான எனது இன்னொரு தங்கை மகன் அங்கு இருக்கிறார். அவருக்கு முதலிலேயே தொலைபேசியில் கூறியிருந்தேன். அவர் யாழ் சென்ரல் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். பாடசாலை முடிய மாலையில் என்னைக் காண வருவதாகக் கூறினார்.

மாலை 4.30 மணிக்கு அவரும், மனைவியும் குட்டி மகனும் முச்சக்கர வண்டியில் வந்தனர். இருந்து பேசி என்னையும் தங்களுடன் கூட்டிப் போனார்கள்.

கோப்பாய் ஊரில் பெரியவர்களான இருவரை அவர்கள் வீட்டில் சென்று சந்தித்தோம். மொத்தம் ஏழு உறவினர் வீடுகளிற்கு, (சிறுப்பிட்டி எனும் ஊரிலும் எனது பெரியம்மாவின் மகளும் இருந்தார்) விஜயம் செய்தோம் தங்கை மகனும் நானுமாக. (எல்லாம் அவரின் மோட்டார் சைக்கிளின் கைங்கரியம்; தான்)

தங்கை மகன் என்னை இரவு 8 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் தெல்லிப்பளையில் கொண்டு வந்து விட்டார்.

இத்துடன் எனது கோப்பாய் விஜயம் முடிந்தது.
ஆறுதலாகக் கோப்பாய் வீதியில் நடக்கவில்லை என்று மிக மனவருத்தம் தான். எனது பயணத் திட்டத்தில் யாழ் விஜயம் முதலில் இருக்கவே இல்லை.

அடுத்த நாள் தெல்லிப்பளை கோயிலில் கும்பாபிசேகம். இதுவும் எனது முதல் அனுபவம். நன்கு அனுபவித்தேன்.
cey6th-24th-march14 177
cey6th-24th-march14 166
அதிகாலை 6.30 மணிக்கு அனுராதபுரம் நோக்கி காரில் பயணமானோம்.

கொழும்பில் உள்ள என் தங்கை மகளின் கணவர் அநுராதபுரத்தில் வைத்தியராக, வைத்திய ஆலோசகராகக் கடமை புரிபவர். அவரது வாகனத்தில் அவர், அவரது தாயார் நானுமாகப் பயணமானோம்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
11-4-2014

11 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கவிஞா் கி. பாரதிதாசன்
  ஏப் 11, 2014 @ 21:42:39

  வணக்கம்!

  கண்ணுள் கமழ்கின்ற காட்சிகளை ஒவ்வொன்றாய்
  எண்ணிப் படைத்தீா் இனித்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 12, 2014 @ 01:47:12

  பயணத்தை தொடர்கிறோம் சகோதரி…

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  ஏப் 12, 2014 @ 11:19:58

  மிக மகிழ்வும், திருப்தியாகவும் இருந்த ஆலய தரிசனப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  மறுமொழி

 4. yarlpavanan
  ஏப் 12, 2014 @ 13:38:56

  அந்தக் கால யாழ்ப்பாணம்
  இந்தக் கால யாழ்ப்பாணம்
  வேறுபாடுகள் அதிகம் தான்
  ஆயினும்
  பசுமை நிறைந்த நினைவுகள்
  உள்ளத்தில் உருளுமே!

  மறுமொழி

 5. iniya
  ஏப் 15, 2014 @ 04:37:42

  ஆஹா அருமையான ஆனந்தமான பயணம் தெல்லிப்பளையில் ஆலய தரிசனம் வேறு அமர்க்களம் தான் மிக்க மகிழ்ச்சி படங்கள் காண மனம் நெகிழ்கிறது.பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் . இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி….!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: