313. சிலிர்த்து வரட்டும் சித்திரை!…..2014

imagescadgnv171

சிலிர்த்து வரட்டும் சித்திரை!…2014..

ஆதபக் கதிர் பரந்து அணைக்க
ஆதரித்துப் பால் சோறாக்கி இணைக்க
கீதமிசைக்கும் இன்பம் மனதை நனைக்க
சாதகமாய்ப் புத்தாண்டை இனிது இணைப்போம்.

சிற்றலகால் சிறுகச்சிறுகக் கொத்தி வெளிப்படும்
குற்றமற்ற புத்தம்புதுக் குஞ்சாய் வெளியாகவும்
பற்றற்ற அந்தகார இருட்டிலொரு ஒளியாகவும்
அற்றம் அழித்து சுந்தர ஒளியாயுதிக்கட்டும்.

ஞாபக வீதியில் எப்போதும் புத்தொளியாய்
ஞான முத்திரை பதிக்கப் பிறக்கட்டும்!
ஞான சூன்யமாக்கியது ஓரின மனிதநேயத்தை
ஞாயம் தர இம்முறையாவது பிறக்கட்டும் புத்தாண்டு!

சிறக்கட்டும் சிலிர்த்து வரும் சித்திரை!
இறக்கட்டும் செந்தமிழர் துன்பம்!
நிறக்கட்டும் மனம் இன்ப வானவில்லாக!
பிறக்கட்டும் புத்தாண்டு தொல்லைகள் அழிக்க!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
13-4-2014

T- 22-4-2014.

pongallarge

23 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 14, 2014 @ 00:24:58

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 2. kumuthini
  ஏப் 14, 2014 @ 01:27:39

  பிறக்கட்டும் புத்தாண்டு தொல்லைகள் அழிக்க!

  மறுமொழி

 3. ramani
  ஏப் 14, 2014 @ 01:56:50

  சிறக்கட்டும் சிலிர்த்து வரும் சித்திரை!
  இறக்கட்டும் செந்தமிழர் துன்பம்!
  நிறக்கட்டும் மனம் இன்ப வானவில்லாக!
  பிறக்கட்டும் புத்தாண்டு தொல்லைகள் அழிக்க!/

  புத்தாண்டு சிறப்புக் கவிதை
  வெகு சிறப்பு
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்/

  மறுமொழி

 4. Rajarajeswari jaghamani
  ஏப் 14, 2014 @ 02:16:04

  ஜய வருட – இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்..

  மறுமொழி

 5. தி தமிழ் இளங்கோ
  ஏப் 14, 2014 @ 03:28:23

  சகோதரி அவர்களுக்கு எனது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 6. Bagawanjee KA
  ஏப் 14, 2014 @ 04:56:54

  பிறக்கின்ற ஜய வருடம் தமிழனுக்கு ஜெயத்தைத் தரட்டும் !

  மறுமொழி

 7. karanthaijayakumar
  ஏப் 14, 2014 @ 06:14:34

  உளங் கனிந்த சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 8. Dr.M.K.Muruganandan
  ஏப் 17, 2014 @ 01:50:03

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 9. கீதமஞ்சரி
  ஏப் 19, 2014 @ 05:08:53

  நாவினிக்கும் தமிழால் நல்லதொரு புத்தாண்டை வரவேற்கும் இனிய வாழ்த்துப்பா… படைத்த தங்களுக்குப் பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 10. கோமதி அரசு
  ஏப் 24, 2014 @ 09:41:50

  புத்தாண்டு கவிதை மிக அருமை.
  பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 11. கோவை கவி
  ஏப் 14, 2018 @ 10:13:25

  Seeralan Vee :- இன்னிசை வாழ்த்தில் இயம்புகின்ற நற்கவியில்
  வன்கவியாள் தந்த விருந்து

  இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  N.Rathna Vel :- வாழ்த்துகள்.
  2014
  Verona Sharmila :- இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இன்றய பொழுது உங்களுக்கும் , குடும்பத்துக்கும் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் நிறைவாக வழங்கிட வாழ்த்துக்கள்…
  2014
  Sujatha Anton :- இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.!!!!!!Vetha.
  2014
  Gowry Sivapalan :- இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  2014
  சிறீ சிறீஸ்கந்தராஜா:- இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!! வாழ்க வளமோடு!!
  2014
  Kalaimahan Fairooz //ஞான சூன்யமாக்கியது ஓரின மனிதநேயத்தை
  ஞாயம் தர இம்முறையாவது பிறக்கட்டும் புத்தாண்டு!
  சிறக்கட்டும் சிலிர்த்து வரும் சித்திரை!
  இறக்கட்டும் செந்தமிழர் துன்பம்!//
  2014
  வசந்தா சந்திரன் :- புத்தாண்டு வாழ்த்துக்கள்..))
  2014
  Jeevalingam Kasirajalingam :- இனிய சித்திரைத் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
  2014

  மறுமொழி

 12. கோவை கவி
  ஏப் 14, 2018 @ 10:15:02

  Selvi Guna இனிய சித்திரைத் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
  2014
  Sivanes Chandra Jeyamohan :- இனிய சித்திரைத் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
  2014
  Sakthi Sakthithasan:- அனைவருக்கும் இனிய தமிழ் சித்திரை ஜயவருட புத்தாண்டு வாழ்த்துக்கள். அனைத்துக் காரியங்களிலும் ஜெயமடைந்திட வாழ்த்துக்கள்
  2015

  மறுமொழி

 13. கோவை கவி
  ஏப் 14, 2018 @ 10:15:39

  Nagalingham Gajendiran ” பொற்றடை ” புத்தாண்டு வாழ்த்துகள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: