314. புத்தாண்டு மலரட்டும்!

10155971_766736123376575_4122510915186254518_n

முகநூல் குழு ” கவிதை சங்கமம் ” 2015 சித்தரை வருடக் கவிதைப் போட்டியில்
முதலிடம் பெற்ற கவிதை. அனைவருக்கும் மிகுந்த நன்றி
இவ் அங்கீகாரத்திற்கு.

புத்தாண்டு மலரட்டும்!

காலமெனும் மந்திரவாதியின் கோல் சுழன்றசைந்தது.
காட்சியாகிறது புத்தாண்டு. நீட்சியாகட்டும் பேரானந்தம்.
மதிய வெயில் ஒளியெனப் பெயர்
பதிய வரட்டும் நல்வரவு! நல்வரவு!

எப்படி அமையும் புதிய காலப்படி!
ஆர்வப்படி வினாக்கள் வரிசைப்படி
வெற்றிப் படிகளே முற்றும் நிறைந்தபடி
சுற்றி வா புத்தாண்டே பலராசைப்படி!

பிறையாக மிளிரும் புத்தாண்டே! புத்தாண்டே!
குறை தீரவா! கொற்றவையாக வா!
உறைவிடம் தொலைத்த மக்களிற்கு நல்
உறையுள் கொண்டு உறவாக வா!

தன்னைப் புதுப்பித்த காலக் கொத்து
அன்னை உருவாக ஊனங்கள் அழித்து
முன்னைப் பெருமைகள் அள்ளிச் சேர்க்கட்டும்!
கருண்ய ஆண்டாக புத்தாண்டு மலரட்டும்!

கானம், ஞானம், கவிதைச் சுடர்
கலந்து, கவிந்து காசினி வீதியில்
கவின் பெறட்டும் தமிழ் ஜோதி
கம்பன் பாரதி சாதனையாகட்டும்!

பா ஆக்கம் வேதா.இலங்காதிலகம்.
டென்மார்க்.
8-4-2014.

pongallarge

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Rajarajeswari jaghamani
  ஏப் 15, 2014 @ 07:46:03

  முகநூல் குழு ” கவிதை சங்கமம் ” 2015 சித்தரை வருடக் கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற கவிதைக்கு இனிய வாழ்த்துகள்..

  மறுமொழி

 2. கவிஞா் கி. பாரதிதாசன்
  ஏப் 15, 2014 @ 10:03:25

  வணக்கம்!

  புத்தாண்டைப் போற்றிப் புனைந்த கவியடிகள்
  முத்தாக மின்னும் மொழி!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  மறுமொழி

 3. தென்றல் சசிகலா
  ஏப் 15, 2014 @ 12:59:38

  புத்தாண்டு வாழ்த்துக்கள். வெற்றி பெற்றமைக்கும்…

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 15, 2014 @ 17:20:28

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 5. ranjani135
  ஏப் 17, 2014 @ 07:40:00

  வணக்கம் சகோதரி. முக நூலிலும் உங்கள் கருத்து கண்டேன். உங்கள் வலைத்தளம் திறந்தவுடன் ‘webshield block a harmful webpage’ என்று வருகிறது.ஏன் என்று எனக்கும் புரியவில்லை. அப்படி வரும்போது கொஞ்சம் பயமாக இருக்கிறது, கணணி பழுதாகி விடுமோ என்று. நாம் எல்லோருமே ஆண்டி வைரஸ் பயன்படுத்துகிறோம். இந்த பின்னூட்டம் வருகிறதா பாருங்கள்.

  முதல் பரிசு வென்றதற்கு வாழ்த்துக்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 6. கீதமஞ்சரி
  ஏப் 19, 2014 @ 05:10:21

  \\பிறையாக மிளிரும் புத்தாண்டே! புத்தாண்டே!
  குறை தீரவா! கொற்றவையாக வா!
  உறைவிடம் தொலைத்த மக்களிற்கு நல்
  உறையுள் கொண்டு உறவாக வா!\\

  மனம் தொட்ட வரிகள். போட்டியில் முதல் பரிசு பெற்றமைக்கு இனிய பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 7. கோமதி அரசு
  ஏப் 24, 2014 @ 09:39:32

  புத்தாண்டு வாழ்த்துக் கவிதை அருமை. முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: