இடைவேளையின் பின்னர்…7

UKKGRedOq0H1dAUd1wI09alHH-aeTaAWixZiuoElOKAWVJucxRlMAm0n4NQpn5YBITcXKYjWDnrXpu2ahwMUOZf4ik2zhSOge1ZUxcBGgGcjWrp929IVOCUvMlxAptZn7fhSrI&h=256&w=256&scale=1

இடைவேளையின் பின்னர்…7

அதி காலை 6.30 அளவில் அனுராதபுரம் பயணமானோம். யாழிலிருந்து அனுராதபுரம் 156 கி.மீ தூரம் என ஒரு தகவல் கூறுகிறது. cey6th-24th-march14 212cey6th-24th-march14 213

அங்கு போய்ச் சேர கிட்டத்தட்ட 4 மணி நேரம் எடுத்தது.

இலங்கையின் வடமத்திய மாகாணத் தலை நகர் நகரம். ஒரு காலத்தில் ஆயிரம் வருடம் தலைநகராக இருந்ததாம். இராஐரட்டை எனும் தொகுதியின் முதல் தலை நகராக இது இருந்துள்ளது. கொழும்பிலிருந்து 205கி.மீட்டர் தூரமாக உள்ளது.

சிங்கள வரலாற்று நூலான மகாவம்சத்தின் படி இந்தியாவிலிருந்து விஐயனுடன் வந்த 700 தோழர்களில் ஒருவனான அனுராத என்பவன் உருவாக்கிய கிராமமாக இது இருந்தது. பாண்டுகபய எனும் அரசன் இதை அனுராதபுரமாக மாற்றி தலைநகர் ஆக்கினானாம்.

இந்திய அசோகச்சக்கரவர்த்தியின் மகள் புத்தபிக்குணி சங்கமித்தை இந்தியாவிலிருந்து கொண்டு வந்த வெள்ளரச மரக்கிளை இங்கு தான் நாட்டப்பட்டது.
240px-Anuradhapura_district_svg

இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றான இங்கு 7 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. 694 கிராமசேவையாளர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள். (தகவல் விக்கி பீடியா)
வாகனத்திலேயே காலையுணவுப் பொதியை சாப்பிட்டோம்.

ஒரு மணி நேரத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முருகண்டிப் பிள்ளையார் கோயிலை அடைந்தோம்.
cey6th-24th-march14 216cey6th-24th-march14 215
ஏ9 பெருந்தெருவோடு உள்ள கோயில் இது. அந்தத் தெருவோடு போகும் அத்தனை வாகனங்களும் நிறுத்தி வழிபட்டுப் போவார்கள்.
நாங்களும் இங்கு இறங்கி இறைவனை வணங்கிச் சென்றோம்.

10 மணியளவில் அனுராதபுரம் சென்றோம். எங்கும் உலாத்தவில்லை. தேநீர் ஒன்று குடித்துவிட்டு கொழும்பு செல்லும் பேருந்து தேடி உதவினார் உறவினர். நானும் அவரது தாயாரும் கொழும்பு பயணமானோம். இப்போது இருக்கை நல்ல வசதியாக அமைந்தது. 4.00 மணியளவில் பெட்டா பேருந்து நிலையம் வந்திறங்கினோம்.அங்கிருந்து தங்கை வீட்டிற்கு முச்சக்கர வண்டியில் சென்றோம்.

துளசி இலை, குறிஞ்சா இலை, கெய்யாக்காய், நெல்லிக்காய், விளாம்பழம், பப்பாளிப்பழம், வல்லாரைச் சம்பல், முருங்கைக்கீi, அகத்திக்கீரை இப்படிப் பல சுவைக்கும் வாய்ப்புக் கிடைத்தது இலங்கையில்.

இவைகளில் சில இங்கு கிடைப்பதில்லை.

வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
17-4-2014.

16161859-ab

Advertisements

17 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. திண்டுக்கல் தனபாலன்
    ஏப் 18, 2014 @ 00:15:12

    சுவையான வாய்ப்புடன் பயணத்தை தொடர்கிறோம் சகோதரி…

    மறுமொழி

    • கோவை கவி
      ஏப் 25, 2014 @ 06:31:55

      பல விவரங்களுடன் பயணக் கதை தருவதில் மிகத் திருப்தியடைகிறேன்.
      மகிழ்வும் கூடத்தான்.
      கருத்திற்கு அன்பு நன்றி.

      மறுமொழி

  2. Bagawanjee KA
    ஏப் 18, 2014 @ 02:54:11

    இலங்கையின் தமிழர் பகுதிகளின் இன்றைய நிலையை உங்கள் பயணம் படம்பிடித்து காட்டுகிறது !

    மறுமொழி

    • கோவை கவி
      ஏப் 25, 2014 @ 06:32:23

      பல விவரங்களுடன் பயணக் கதை தருவதில் மிகத் திருப்தியடைகிறேன்.
      மகிழ்வும் கூடத்தான்.
      கருத்திற்கு அன்பு நன்றி.

      மறுமொழி

  3. karanthaijayakumar
    ஏப் 18, 2014 @ 03:11:54

    பயணம் அருமை
    தொடரக் காத்திருக்கிறோம் சகோதரியாரே
    தொடருங்கள்
    படங்கள் அருமை

    மறுமொழி

  4. ramani
    ஏப் 18, 2014 @ 03:14:09

    தற்போதையை இலங்கையை
    தங்கள் மூலம் அறிய முடிந்தது
    மகிழ்வளிக்கிறது
    படங்களும் தகவல்களும் பொக்கிஷம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    மறுமொழி

  5. Rajarajeswari jaghamani
    ஏப் 18, 2014 @ 03:38:50

    சுவையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    மறுமொழி

  6. நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    ஏப் 18, 2014 @ 05:24:30

    வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    http://www.Nikandu.com
    நிகண்டு.காம்

    மறுமொழி

  7. வேல்
    ஏப் 18, 2014 @ 14:43:28

    உற்றார் உறவினரை
    உண்டு உறங்கிய உலகை
    உவப்போடு கண்ட செய்தி

    மகிழ்ச்சி

    மறுமொழி

  8. ஸ்ரீராம்
    ஏப் 19, 2014 @ 02:08:35

    தகவல்களுடன் பதிவு சுவாரஸ்யம்.

    மறுமொழி

  9. கோமதி அரசு
    ஏப் 24, 2014 @ 09:34:42

    அனுராதபுரத்தை நாங்களும் மூன்று வருடங்களுக்கு முன் பார்த்தோம்.
    இப்போது உங்கள் பதிவின் மூலம் மறுபடியும் பார்த்தேன்.
    நன்றி.
    பயண அனுபவங்கள் மிக அருமை.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: