இடைவேளையின் பின்னர்…8.

dr -2

இடைவேளையின் பின்னர்…8.

எமது முகநூல் நண்பர் வதிரி ரவீந்திரன் அவர்களைச் சந்திப்பதும் எனது நிகழ்ச்சித் திட்டத்தில் ஒன்று. முதலில் தொலைபேசியில் அவருடன் பேசினேன். அவருடன் பேசும் போது யாழ் போகும் திட்டம் எனக்கு இருக்கவில்லை. யாழ் போகத் திட்டமிட்டதும் தங்கை தம்பியிடம் கூறி சகோதரர் ரவீந்திரன் தொலை பேசியில் அழைத்தால் யாழ் விஐயம் முடிய அவரைச் சந்திப்பதைத் தெரியப் படுத்தக் கேட்டிருந்தேன்.

அதன்படி வந்ததும் அவரோடு பேசி தங்கை வீட்டிற்கு அழைத்தேன் வருவதாக ஒப்புக் கொண்டு வந்தார். பேசினோம்.
cey6th-24th-march14 225
அனுபவங்களையும் பேசினார். சந்திப்பையிட்டு மிக மகிழ்வடைந்தேன். அவர் என்னிடம் வந்ததற்கு நான் தான் நன்றி கூற வேண்டும். நானும் எனது இரு புத்தகங்களை அவரிற்குக் கொடுத்தேன். அவரும் தனது நூலை எனக்குத் தந்தார்.
cey6th-24th-march14 226

அவரது நூல் ”மீண்டு வந்த நாட்கள்”;. 104 பக்கங்கள் கொண்ட கவிதை நூல்.

அவருக்கு மனமார்ந்த நன்றி. நாமெடுத்த படங்கள் திறமாக வரவில்லையாயினும் எனது நினைவிற்கு அது உதவும்.

அடுத்து கங்காராம விகாரையைப் பார்ப்பது (வணங்க அல்ல) என்று நானும் தம்பியும் போனோம்.
thalatha
கங்காராம விகார கொழும்பின் மிகப் பெரிய புத்த வணக்கத்தலம். டொன் பஸ்ரியன் எனும் கப்பல் வியாபாரி 19ம் நூற்றாண்டில் இடம் தேடி இதை உருவாக்கினான். கண்டி தலதாமாளிகையின் சாயல் இருப்பதாகப் பேசினார்கள். இது பேற லேக்கினுள் இருப்பதல்ல தரைப்பகுதியில் உள்ள புத்த கோயில்.
cey6th-24th-march14 270cey6th-24th-march14 272

தாய்லாந்து, இந்திய, சீன கட்டிடக்கலைகளைத் தழுவி அமைக்கப் பட்டுள்ளது. மியூசியம், வாசிகசாலை, புத்தமதப் பாடசாலை, தியான இடம் என்பவையும் இதனுடன் சேர்ந்து உள்ளது.
thalatha-2

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
20-4-2014.

Divider_Pink_Heart_001

22 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  ஏப் 21, 2014 @ 00:03:28

  பயணத்தின் இடையில் பதிவரைச் சந்தித்ததும்
  உரையாடியதும் நிச்சயம் மனதிற்கு
  உற்சாக மூட்டும் டானிக்காக இருந்திருக்கும்
  நானும் இங்கு வெளியூர் சென்றால்
  பதிவர்களைச் சந்திப்பதையும் ஒரு
  நிகழ்வாகத் தவறாதுசெய்கிறேன்
  படங்களுடன் பயணக் கட்டுரை
  மிகச் சிறப்பாகச் செல்கிறது
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. ஸ்ரீராம்
  ஏப் 21, 2014 @ 00:22:53

  படங்களுடன் பயணப் பகிர்வு சுவாரஸ்யம்.

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 21, 2014 @ 02:33:06

  இனிய சந்திப்பு… வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 4. Rajarajeswari jaghamani
  ஏப் 21, 2014 @ 02:45:32

  சுவாரஸ்யமான பயணம்..

  மறுமொழி

 5. raveendran sinnathamby
  ஏப் 21, 2014 @ 15:42:07

  வேதாவுக்கு என் நன்றிகள்.

  வதிரி.சி.ரவீந்திரன்.

  கொழும்பு.

  மறுமொழி

 6. Bagawanjee KA
  ஏப் 21, 2014 @ 16:25:04

  அடுத்த பதிவில் , மீண்டு வந்த நாட்களை பற்றிய விமர்சனத்தை எதிர்பார்க்கலாமா ?

  மறுமொழி

 7. கவிஞா் கி. பாரதிதாசன்
  ஏப் 21, 2014 @ 21:46:36

  வணக்கம்!

  நட்பினைப் போற்றி நவின்ற உரைதொடா்
  பட்டென மின்னும் பதிவு!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  மறுமொழி

 8. karanthaijayakumar
  ஏப் 23, 2014 @ 01:16:53

  பயணத்தின் போதே பதிவர் சந்திப்பும்
  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 9. கிரேஸ்
  ஏப் 23, 2014 @ 18:13:01

  பகிர்விற்கு நன்றி சகோதரி..வாழ்த்துகள்!

  மறுமொழி

 10. கோமதி அரசு
  ஏப் 24, 2014 @ 09:27:04

  பயணமும் முகநூல் நண்பர் சந்திப்பும் அருமை.

  மறுமொழி

 11. வேல்
  ஏப் 25, 2014 @ 15:24:05

  பயணங்கள் இனிதானது
  நட்பு பசுமையானது

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: