315. வலைப்பூக்கள்

decorative_letter_set_v_clip_art_20307
imagesCAGB2VXW

வலைப்பூக்கள்

வலைப்பூக்கள் குமிழும் எண்ண
அலைப்பூக்கள், கருத்துக் குவியும்
கலைப்பூக்கள், கற்பூர ஒளிப்பூக்கள்.
மலைப்புடன் வியக்கும் பதிவு வலைகள்.

தினவெடுக்கும் எண்ணங்களை வரிவரியாய்
வனப்போடு வளைத்துச் சொற்சரம்
கனதியாகத் தூவும் களம்.
நனவும், கனவும் அரங்கேறும் தளம்.

கிறுக்கர், கில்லாடிகளின் அறுவைகளும்
அறுபொருளுடை அறிவு வரிகளும்
இறும்பூதடையும் அரும் செய்திகளும்
அறுவடைக்கும் (அறுவடை செய்யும்) இனிய வயல்.

பலருக்கு இதம் தரும்.
சிலருக்கு எரிச்சல் தரும்.
அலப்படை பகிரங்க வலைப்பூக்கள்.
அவலங்களும் நிறைவேறும் வலைப்பூக்கள்.

(அரும் பொருள் – ஐயமற்ற பொருள்.
இறும்பூதடையும் – வியப்பு அடையும்.
அலப்படை – கலப்பை, ஆயுதம்.)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22-4-2014.

T -29-4-2014.

reflection-swirl-2

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஏப் 28, 2014 @ 06:38:14

  வணக்கம்

  பலருக்கு இதம் தரும் கவிதை.. நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 2. தி தமிழ் இளங்கோ
  ஏப் 28, 2014 @ 10:48:26

  // பலருக்கு இதம் தரும்.
  சிலருக்கு எரிச்சல் தரும். //
  வலைப் பூக்களைப் பற்றிய ஒரு அலசல்! உண்மை நிலவரம் என்ன என்பதனைச் சொன்னீர்கள்!

  மறுமொழி

 3. raveendran sinnathamby
  ஏப் 28, 2014 @ 14:32:36

  கிறுக்கர், கில்லாடிகளின் அறுவைகளும்
  அறுபொருளுடை அறிவு வரிகளும்
  இறும்பூதடையும் அரும் செய்திகளும்
  அறுவடைக்கும் (அறுவடை செய்யும்) இனிய வயல்.//

  Vathiri C.Raveendran.

  மறுமொழி

 4. karanthaijayakumar
  ஏப் 29, 2014 @ 01:18:33

  நம் அனைவரையும் இணைத்திருக்கும்
  வலை

  மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 29, 2014 @ 01:18:59

  சரியாகச் சொன்னீர்கள் சகோதரி…

  மறுமொழி

 6. கீதமஞ்சரி
  ஏப் 30, 2014 @ 03:19:52

  சிறப்பானவற்றையும் சிரத்தையானவற்றையும், நல்லவற்றையும், நயமானவற்றையும் தேர்ந்தெடுத்து வாசிக்க வேண்டிய பெரும் பொறுப்பு நம் கையில்! அழகாகச் சொன்னீர்கள். பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

  • கோவை கவி
   மே 04, 2014 @ 12:49:49

   உண்மை தானே அர்த்தமற்றும் எழுதுபவர் பலர் கீதா!
   வெறும் 4 வரிகள் எழுதி எம் அருமையான நேரத்தைக் கருத்திட இழுப்பவர்கள்
   என்று பலர், எல்லாம் சொல்ல முடியாத நிலையும் கூட.
   தங்கள் இனிய கருத்திற்கு இனிய நன்றி.
   மனம் மகிழ்ந்தேன்

   மறுமொழி

 7. bagawanjee
  மே 02, 2014 @ 18:39:10

  என் வலைப்பூ எந்த வரிகளுக்கு பொருந்துமென அறிய ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   மே 04, 2014 @ 12:51:25

   ஆம் யோசியுங்கள் சகோதரரே!
   மேலே கீதாக்கு எழுதியதும் வாசியுங்கள்.
   தங்கள் இனிய கருத்திற்கு இனிய நன்றி.
   மனம் மகிழ்ந்தேன்

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: