68. கவிதை பாருங்கள்(photo,poem)

lotus

வித்தகம் பரந்தது
விளங்குதல் சிறந்தது.
விசனம், வியாகுலம்
விலக்குதல் பெருமை.

249525_168539173208870_100001583665947_450362_4375997_n1-lk

straight line

37. துஷ்யந்தன் கணேசமூர்த்திக்கு 40ம் அகவை வாழ்த்து.

arun vama

துஷ்யந்தன் கணேசமூர்த்திக்கு 40ம் அகவை வாழ்த்து.
பிறந்தநாள்: 25-5-1974.

துயர் துடைக்கும் நேசன்!
துணை நிற்கும் பாசமகன்!
துஷ்யந்தனின் 40ம் பிறந்தநாள்.
துடிப்புடன் நல்லதைப் பாராட்ட
தூரமாகச் செல்லான். அன்போடு
துணிந்து முன் வருவான்.
பிறரிற்கு இணக்கமாகக் கொண்டாடி
பிரியமாய் அணைக்கும் அன்பன்.

பிறரின் பாத்திரம் தானாகி
பேசியே நகைச்சுவை ஆக்குவான்.
பிறரால் பணிகள் நிறைவேற்ற
குறையின்றி அவர்களைக் கையாளுவான்.
புதுப்புனலான சிந்தனையூற்றாளன்
பொது – புதுவழிகளில் அதை
சாதுரியமாகக் கையாளும் நற்சாரதி
கோபம் கொள்ளாக் குணவாளன்.

ஓகுஸ் தமிழரொன்றியம் உருவாக்கி
ஓற்றுமையான நண்பர்கள் இணைவால்
ஓங்கியது பொதுச்சேவை முன்னணியில்.
ஓருங்கிணைப்பதுன் பலமே! யுக்தியே!
உருளுது காலம் உலகிற்காய்
விரும்பு! உனக்காக! குடும்பத்திற்காக!
வாழ்! குடும்பவாழ்வு இனிதாகட்டும்!
எல்லோராலும் தேடப்படும் இனியவனே!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

வாழ்த்துவோர்
ஓகுஸ் தமிழரொன்றியம்.
25-5-2014

(written by Vetha.Elangathilakam.)

1604872_673214336032288_194540304_n

48. காதல் ஏன்!…

tamilnadu papular art (4)

காதல் ஏன்!…

நறுமணச் சுவாசம்
நல்லுணவு சுவைத்தல்
நல்லுறவு மலர்தல்
இயற்கையின் தேவை
இயல்பான நிலை.
கண்களில் புகுந்து
கருத்தைக் கவர்ந்து
களிக்கும் காதல்
காமனின் மலர்க்கணை.
காந்தமே பருவத்தில்.
பாலுணர்வற்றவன்
பெயர் தானென்னவோ!

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
26-5-2014

bar line

19. கலாயோகி, கவியோகி ரவீந்திரநாத் தாகூர்.

Tagore3

கலாயோகி, கவியோகி ரவீந்திரநாத் தாகூர்.

செல்வப் பாரம்பரிய இந்துக் குடும்பத்தில்
கல்கத்தா ஜோராசங்கர் மாளிகையில் பிராலிப்பிராமணர்
பலதுறை ஆளுமையர், வங்காள இலக்கியர்
வல்லவர் குருதேவ் ஒன்பதாவது மகனாகினார்.
வைகாசி ஏழில் 1861ல் இவரைக்
கைகளிலேந்தினர் தேவேந்திரநாத் சாரதாதேவி தம்பதியர்.
வையகம் போற்றும் காவியக் கவியோகிக்கு
கைத்தது பாரம்பரியக் கல்விமுறை, சட்ட திட்டம்.

கல்விச்சாலை செல்லாது சமஸ்கிருதம், இஸ்லாத்தின்
நல் பாரசீக இலக்கியங்கள், மரபுச்
செல்வர் கவி காளிதாசர் கவிகளிலுமாழ்ந்தார்.
வல்லமையோடு எட்டு வயதில் கவியடியடியெடுத்தார்.
கல்வெட்டாய் முதற் கவித்தொகுப்பு 17 வயதில்.
சொல் வளமுடை கவிதைகள் ஆயிரத்திற்கு மேலாக.
காவியக் கம்பர், வியாசரிற்கடுத்து ஏராளமாகத்
தூவினாராம் அறுபது ஆண்டகளென்பது கணிப்பு.

பரம்பரை இந்தியக் கலாச்சாரக் கருத்துடன்
தரமான மேற்கத்திய முற்போக்குக் கருத்துகளும்
வரம்பின்றி விளையாடியது தாகூர் வரிகளில்
வித்தகர் வங்காள இலக்கிய நாயகர்
பத்து வயது மிருனாலிதேவி ராய்சௌத்திரியை
பத்தினியாக்கினார் 1883ல். புத்திரிகள் மூவர்
புத்திரர்கள் இருவர் பிறந்த போதும்
முத்தான இருவர் இளமைக்கு முன்னிறையடியேகினர்.

கெட்டித்தனமான கல்வியாளர், நூலாசிரியர், கவிஞர்
நாட்டிய நாடகங்கள், சிறுகதைகள், நாடகங்களுடன்
நாட்டமுடன் இசையும் அமைத்தார், இசைமேதையுமானார்.
மானுடம் போற்றிய தத்துவஞானி, இயற்கைவிரும்பி
மனிதநலப் பொதுமைவாத மெய்யியற் சிந்தனையாளர்
1878 – 1932னுள் ஐந்து கண்டங்களில்
முப்பத்தொரு நாடுகளேகிய சுற்றுலா விரும்பி.
இந்திய ஆத்மிகப் பெருமைக்கு இலக்கணவிலக்கியமானார்.

1901ல் சாந்திநிகேதன் கலைக் கழகம் அமைத்தார்.
குருகுல முறையில் இயற்கைச் சூழலில்
அரும் கல்விப் போதனைகள் நடந்தது.
உருவானது முழுமையான இலக்கியப் பணி.
சாந்தி நிகேதனே விசுவபாரதி உலக
சர்வகலாசாலையாகப் பின்னாளில் பரிணமித்தது.
1905னுள் இந்தியக் கலாச்சாரத் தலையாய பிரதிநிதியானார்.
1911ல் இலக்கியத் துறைப் பேரரசாகப் போற்றப்பட்டார்.

19ம் நூற்றாண்டின் நவஇந்தியக் கலாச்சாரப் பிரதிநிதி
ரவீந்திரநாத்தாகூர் மாபெரும் தேசியக்கவி. காந்தி
விக்டர் கியூகோவிற்கு இணையாகக் கணிக்கப்பட்டார்.
பிரிக்கப்படாத வங்காள ஒற்றுமையைக் குறித்திட
அரிதான ராக்கிபந்தன் விழாவை அங்கறிமுகமாக்கினார்.
வங்காளப் பிரிவினையை எதிர்த்து எழுதிய வரிகள்
” அமர் சோனார் பங்களா ” வங்காள தேசியகீதமானது.
இன்னிசைக் கனிவுடைய உணர்வுப் பாடலானது.

வங்காள மொழிக்கு உலகக் கண்ணோட்டம் தந்தார்.
வங்காள பாரம்பரிய நாட்டுப் புறப்பாடல்
பாரம்பரிய இசைத் தொகுப்பாக 2000ற்கும் மேலாக்கினார்.
இரவீந்திர சங்கீத் என்றிது அழைக்கப் பட்டது.
தாகூர் காந்திக்கு ” மகாத்மா ‘ வை இணைத்தார்
இந்திரா காந்திக்கு ” பிரியதர்சினி ” யைச் சூட்டினார்.
தாகூரை காந்தி மாபெரும் காவலனென்றார் (Great sentinal).
அறிவுஜீவியாம் தாகூர் இந்தியத் தேசியகீதமாக்கினார்.

1913ல் வங்கமொழி கீதாஞ்சலியின் ஆங்கில
மொழிபெயர்ப்பிற்கு நோபல் பரிசு பெற்றார்.
ஆசிய முதல் நோபற் பரிசாளரிவரே!
ஆங்கில கீதாஞ்சலியைத் தமிழில் கனடா சி. ஜெயபாரதன்
தமிழில் மொழி பெயர்த்த பெருமையாளர் – 2004ல்
1915ல் பிரித்தானியா ” செவ்வீரர் ” (knight hood)பட்டமளித்தது.
1940ல் இலக்கிய முனைவர் பட்டம் பெற்ற
குழந்தைப் பிரியர் 7-9-1941ல் இயற்கையெய்தினார்.

(பிரியதர்சி – அமைதியான பார்வை.)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க். 24-5-2014

( நேயர்கள் மன்னிக்க வேண்டும். 64 வரிகளாக எண் சீர்கழிநெடிலடியாக இது அமைந்து விட்டது. என்னால் இதைவிடச் சுருக்க முடியவில்லை. வழமையின்றி இது விதிவிலக்காக நீண்டுவிட்டது. மன்னிப்புடன் வாசியுங்கள்.)

sunburst

35. Archana-Vinoth திருமண வாழ்த்து

12 x 18 copy

திருமண வாழ்த்து

மணமகன்: மணமகள்:
திருநிறைச் செல்வன் திருநிறைச் செல்வி
வினோத் அவர்கட்கும் அர்ச்சனா அவர்கட்கும்

சிட்டுக் குருவிகளாய்க் குழந்தையிலிருந்து இன்றுடன்
நட்பு வட்டத்துள் தாரகைகளாய்; ஐவர்
ஒட்டியுறவாடித் நல்ல திறமைகள் காட்டினார்.
கெட்டித்தனமாய் ஆடல், பாடல், படிப்பிலும்
சுட்டித்தனத்தால் ஊக்கமாய் விளையாட்டுப் போட்டிகளையும்
தொட்டு எல்லா மேடைகளிலுமேறி மின்னினார்கள்!

அர்ப்பணமாக்கிய ஐவர் அன்பும் வியப்புடன்
கர்வமாய்க் கங்கையாயோடிக் கவனம் கவர்ந்தது.
வேர் கொண்ட கலாச்சாரச் சம்பவம்.
சர்க்கரையாய் இனித்து இன்று நிகழ்வது
சொர்க்கத்தில் நிச்சயித்த அதிஷ்டப் பிணைப்பு
அர்ச்சனா – விநோத் விவாகக் கொண்டாட்டம்.

ஐந்து நட்சத்திர நங்கைகளில் ஒருத்திக்கு
வந்த மாங்கல்ய இன்பம் நலமாகட்டும்!
பந்தமாம் கல்யாணத்தோடு நட்பு வளையமும்
சொந்தம் கொண்டாடட்டும் என்றும்! மணமக்கள்
சந்ததி பெருக்கி தம்பதிகள் சீரோடு
சந்தணமாய் மணக்க வாழ்க பல்லாண்டு!

தோழிகள்:
நேற்றுவரை நாம் ஒன்றாய் கலந்தோம்!
இன்றிலிருந்து வாழ்க்கைத் துணையோடு இணைகிறாய்
ஓன்றாய்ப் பழகிய நட்பு மறக்கவியலாதது.
பிரிவால் மனம் வருந்தினும் நட்புச்
சங்கிலி இறுகட்டும்! உன் ஒளிமயமான
எதிர்காலம் சிறப்புடன் ஓளிர வாழ்த்துகள்

வாழ்த்துவோர் – அன்புத் தோழிகள்.
Written by Vetha.Elangathilakam.
Demark.

P1070466

images 2356

18. பாவேந்தர் பாரதிதாசன் 2.

1486823_10154074043725581_7327851135545686805_n

பாவேந்தர் பாரதிதாசன் 2.

***

சங்கம் வளர்த்த தமிழ் மதுவேந்தி
அங்கம் சிலிர்க்கும் வரியில் உணர்வேந்தி
பங்கம் களைய உலகிற்காய் வரைந்தான்
பொங்கும் புகழோன் பாவேந்தர் பாரதிதாசன்.

***

புதுச்சேரியின் புடமிட்ட தமிழ் தங்கம்
புறக்கடையல்ல பெண்ணேயுன் இருப்பிடம் எழுவென
புன்னெறிச் சமூகத்தைச் சாடிப் பாவெழுதி
புகைந்தார் மனிதநேயக் கருத்துப் பொக்கிசம்.

***

சித்திரையில் வித்தகன் மலர்வும் உதிர்வும்.
முத்திரைச் சிந்தனைத் தீப்பொறியாளன் சமூகவிடுதலையில்
எத்திரையும் கிழிக்கும் மானுட விடுதலையாளன்.
உத்தமத் தமிழை உறிஞ்சி உடுத்தினான்.

***

எழுபத்தி மூன்றாண்டு எழுச்சி வாழ்வு
எழுபத்தி இரண்டு நூல்கள் எழுதினார்.
குருபக்தி பெரியாரில், கவிபக்தி பாரதியில்
ஆத்திகம், நாத்திகத்துடன் சாத்விகனாய் வாழ்ந்தார்.

***

பாரதி, பாரதிதாசன் சமூகத் தமிழ்ச்
சாரதிகள், முன்னோடித் தமிழ்த் தூண்கள்.
ஊரதிரும் தமிழ் இன்றும் அதிர்கிறது!
ஆரதி: ஆரத்தி: ஆலத்திக்குரியவர்கள் இவர்கள்.

***

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
19-5-2014

 

Samme about BARATHIthasanaar..another  poemhttps://kovaikkavi.wordpress.com/2016/08/06/28-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

https://kovaikkavi.wordpress.com/2014/05/19/18-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-2/

 

 

sunburst

17. பாவேந்தர் பாரதிதாசன்.- 1

1486823_10154074043725581_7327851135545686805_n (டென்மார்க்கிலிருந்து இலண்டனில் குடியேறிய சகோதரர் சௌந்தரின் ஓவியம் இது. நன்றி.)

பாவேந்தர் பாரதிதாசன்.- 1
(தமிழாசிரியர், பாவலன், அரசியல்வாதி, திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர்.)

கனகசபை முதலியார் இலக்குமி அம்மாள்
கனக பொக்கிசப் புதல்வர் சுப்புரத்தினம்.
கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன்
கவிஞன் உதயம் சித்திரை 29 – 1891.

***

கனகசுப்புரத்தினம் மகாகவி பாரதி சந்திப்பால்
கனகதும்பியானார். பாரதிதாசனாகி எழுதித் தொடர்ந்தார்.
கனத்த காதல் தமிழில். தமிழைக்
கரிசனமாய்ப் பயின்றார். 1919ல் தமிழாசிரியரானார்.

***

திரைப்படக் கதை வசனகர்த்தா சுயதிறனால்.
சிறையேகினார் போராட்டங்களில் அதிக நாட்டம்.
முறையான புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் (1954ல்.)
கறையின்றி ஐந்தாண்டு அரசியற் செயலாக்கம்.

***

உவமைகளில் மன்னராம், இசையோடு பாடுவார்.
உகந்த நாடக நடிகர், இந்தியாவில்
தமிழ் பாட்டெழுதிய முதற் பாவலன்.
தமிழிதழ்களின் ஆசிரியர், பிரெஞ்சும் கற்றிருந்தார்.

***

கிண்டற்காரன், கண்டெழுதுபவன், கிறுக்கன் இவர்
கொண் டெழுதிய சில புனைபெயர்கள்.
தமிழ் தேர் சுற்றிய பக்தன்
கமழ் பகுத்தறிவு சுயமரியாதை பெண்ணுரிமையாளன்.

***

பழனியம்மாள் நல் இல்லறத் துணைவி.
புரட்சிக் கவிஞர் பெரியார் விருது.
புரட்சிக் கவி அறிஞரண்ணா விருது. அரசு
பாரதிதாசன் பலகலைக்கழகமும் திருச்சியில் நிறுவினர்.

***

அமைதி ஊமை நாடகத்திற்குக் தங்கக்கிளி (1946)
பிசிராந்தையார் நாடக விருது சாகித்திய அகடாமி (1970)
சென்னைத் தபாற்துறை அஞ்சற் தலை 2001ல்.
சித்திரை 21-1964 இறையடியில் காவியமானார்.

***

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
18-5-2014
T 20-5-2014.

04-mannarmannan-300 (பாவேந்தருக்கு கோபதி எனும் இயற்பெயருடைய மன்னர்மன்னன் 1928ல் மூத்த மகனாகப் பிறந்தார். பின்னர் சரஸ்வதி, வசந்தா, ரமணி எனும் 3 பெண்களும் பிறந்தனர்.
மன்னர் மன்னன் பற்றி இந்த இணைப்பில் மேலும் அறியலாம்.http://tamil.oneindia.in/art-culture/essays/2012/tamil-mamani-mannar-mannan-164107.html)

https://kovaikkavi.wordpress.com/2014/05/19/18-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-2/

 

https://kovaikkavi.wordpress.com/2016/08/06/28-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

sunburst

Previous Older Entries