317. ஏது சொல்ல! எப்படிச் சொல்ல!….

mine 242

ஏது சொல்ல! எப்படிச் சொல்ல!….

காது குளிரப் பேசும் நண்பியிடம்
மாதுரி திருமண வாழ்வு சிறப்பா
ஆதுரமாக ஆவல் மீறக் கேட்டேன்.
ஈது பழைய கதை விவாகரத்தன்றோ
சாதுவானவர் திருமண வாழ்வு இப்படியாகிறது
ஏது சொல்ல எப்படிச் சொல்லவென்றாள்.

கேட்கும் கதைகளெல்லாம் இரு மனம்
ஓட்டாத கதைகள் திடுக்கிட வைக்கிறது.
பட்டும் படாத வாழ்வு முறையாக
கெட்டிமேளம் கொட்டிய வாழ்வு வெறும்
வெட்டிய பந்தலாவதால் நெஞ்சு பதைக்கும்
கட்டமாகிறது ஏது சொல்ல! எப்படிச் சொல்ல!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
30-4-2014.

Divider_Pink_Heart_001

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  மே 02, 2014 @ 13:02:10

  வணக்கம்

  கவிதை நன்றாக உள்ளது…ரசித்தேன்.சகோதரி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 2. கோமதி அரசு
  மே 02, 2014 @ 13:08:58

  நண்பியின் கதை வருத்தம் தருகிறது.

  மறுமொழி

  • கோவை கவி
   மே 11, 2014 @ 15:01:58

   மிக்க மகிழ்ச்சி.
   மிக்க நன்றி சகோதரி.

   நண்பியின் கதையல்ல பொதுவான கதை சகோதரி.
   நண்பிக்கு கூறுவதாக எழுதினேன்.

   மறுமொழி

 3. karanthaijayakumar
  மே 02, 2014 @ 14:42:53

  வருத்தமளிக்கிறது சகோதரியாரே
  தங்கள் நண்பியின் நிலை

  மறுமொழி

 4. கவியாழி கண்ணதாசன்
  மே 02, 2014 @ 15:38:58

  வருத்தம்தான்

  மறுமொழி

 5. Dr.M.K.Muruganandan
  மே 03, 2014 @ 08:15:48

  “…கேட்கும் கதைகளெல்லாம் இரு மனம்
  ஓட்டாத கதைகள் திடுக்கிட வைக்கிறது.
  பட்டும் படாத வாழ்வு முறையாக…. ”
  ஆம் காலத்தின் கோலம்
  நல்ல கவிதை

  மறுமொழி

 6. Rajarajeswari jaghamani
  மே 03, 2014 @ 10:58:53

  கெட்டிமேளம் கொட்டிய வாழ்வு வெறும்
  வெட்டிய பந்தலாவதால் நெஞ்சு பதைக்கும்
  கட்டமாகிறது ஏது சொல்ல! எப்படிச் சொல்ல

  வேதனைதான் வாழ்க்கை..

  மறுமொழி

 7. கோவை கவி
  மே 11, 2014 @ 15:04:29

  மிக்க மகிழ்ச்சி.
  மிக்க நன்றி…sis..

  மறுமொழி

 8. கோவை கவி
  மார்ச் 26, 2019 @ 15:44:36

  Malini Mala :- ஒன்றல்ல ஓராயிரம். ஆனாலும் அதற்குள் பல்லாயிரம் விடை தெரியா வினாக்கள்.
  2014
  Vetha Langathilakam :- நான் திடுக்கிட்டது உண்மை.
  ஆனால் தகுந்த காரணங்கள் இருந்தது.
  எம்மால் எதுவும் செய்ய முடியாத நிலை….…(அதாவது கையாலாகாத நிலை..)
  2014
  Gowry Nesan :- காட்சியும் கவிதையும் நன்று. வாழ்த்துக்கள்!
  2014
  Vetha Langathilakam :- Thanks all of you and likers..
  2o14

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: