இடைவேளையின் பின்னர் 11

cey6th-24th-march14 132

இடைவேளையின் பின்னர் 11

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் கோவிலையும் ஒரு தடைவ தாண்டினோம்.
அப்போது ஒரு படத்தை எடுத்தேன். முன்னர் உள்ளே சென்று வணங்கியவை நினைவிற்கு வந்தது.
inside-st-anthonys-colombo (This is Google Photo.)

18ம் நூற்றாண்டில் டச்சுக்காரரின் கெடுபிடியில் இருந்தச் சமயம் ( வாழையிலையில் சாப்பிட்டால் வெளியே வீசக் கூடாதாம். பயத்தில் வாசலில் மேலே இறப்பில் (கூரையில்) சொருகி வைப்பார்களாம் என்று அம்மா கூறியது நினைவிற்கு வந்தது.) – கத்தோலிக்கத்தைத் தடுத்தனர்.
பின்பு இவரின் போதனை மீது நம்பிக்கை வர அனுமதி கொடுக்கப் பட்டது.

அந்தோனிப் பாதிரியார் தன் மரச்சிலுவையை கடலோரத்தில் நாட்டி தன்னை அதன் அருகில் அடக்கம் செய்யக் கேட்டாராம்.
காலப் போக்கில் கோவாவிலிருந்து அந்தோனியார் உருவம் கொண்டு வரப்பட்டு கண்ணாடிப் பேழையில் வைத்துப் பேணப்பட்டதாம். ஆரம்பத்தில் கழிமண்ணால் உருவான கொட்டில் பின்னர் இப்படி கோயிலாக உருவானதாம்.
z_p-25-Faith-03 ( This is also Google Photo)
தனியே கத்தோலிக்கருக்கு மட்டுமல்ல, இக் கோயில், பல மதத்தவரும் என்றும் பேணி வணங்குகின்றனர்.
கூகிளில் சென்று நான் தரும் ஏதாவது பெயர்களை அழுத்தினால் அழகிய படங்கள் விவரங்கள் காணலாம். படங்கள் நேரில் பார்ப்பது போன்ற பிரமை தருகிறது.

டென்மார்க்கிலிருந்து சுமார் 3 மணித்தியாலத்தில் இஸ்தான்புல் விமான நிலையம் சென்றடைந்தேன்.
cey6th-24th-march14 286

விமானத்திலிருந்து ஒரு படம் எடுத்தேன் இஸ்தான்புல் விமான நிலையக் காட்சி.

இம் மிகப் பெரிய விமான நிலையம் 1924ல் திறக்கப் பட்டதாம். இது உலகிலே 20வது பரபரப்பான விமான நிலையம் என்றும், ஐரோப்பாவில் 9வது பரபரப்பான விமான நிலையமாகக் கணிக்கப் பட்டுள்ளதாம்.
இங்கு தான் அமர்ந்து எநதப் படலை வழியாகப் போவது என்று பார்த்து இரவு 1.10க்கு இலங்கைக்கு விமானம் எடுத்தேன்.
normal_istanbul-airport-6

டென்மார்க் வரும் போது அமர்ந்து எந்தப் படலை வழியாகப் போவது என்று அறிவிப்புப் பலகையைப் பார்த்திருந்த இடம்.(கன்டீனுடன் சேர்ந்த இடம்.)Istanbul_Ataturk_Airport

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க். 4-5-2014

aeroplane-papers-1

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. T.N.MURALIDHARAN
  மே 04, 2014 @ 10:45:17

  படங்களும் கட்டுரையும் அருமை. உங்கள் கூடவே நாங்களும் பயணிக்கிறோம்

  மறுமொழி

 2. ஸாதிகா ஹஸனா
  மே 04, 2014 @ 12:43:54

  அழகிய படங்களுடன் அருமையானதொரு பயணக்கட்டுரை

  மறுமொழி

 3. karanthaijayakumar
  மே 04, 2014 @ 12:52:51

  ஒவ்வொரு படங்களும் பேசுகின்றன சகோதரியாரே

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  மே 04, 2014 @ 13:51:40

  அழகான படங்களுடன் விளக்கத்திற்கு நன்றி சகோதரி…

  மறுமொழி

 5. bagawanjee
  மே 04, 2014 @ 14:36:38

  மனதிற்கு அமைதி தரும் சர்ச் படங்கள் எடுக்கப் பட்டு இருப்பது ஸ்ரீ லங்காவில் தானா என்றே நினைக்கத் தோன்றுகிறது !

  மறுமொழி

 6. கோமதி அரசு
  மே 05, 2014 @ 03:57:57

  அழகான படங்கள் செய்திகள் .நன்றி சகோதரி.

  மறுமொழி

 7. Rajarajeswari jaghamani
  மே 05, 2014 @ 11:27:32

  சிறப்பான படங்கள் .. அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.

  மறுமொழி

 8. yarlpavanan
  மே 11, 2014 @ 01:03:19

  சிறந்த பகிர்வு

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: