318. உறவின் மடியில்.

199500_10151081003880687_15536236_n

உறவின் மடியில்.

உறவின் மடியில் சந்ததி விருத்தி
இறக்கும் வரை சிறைப்படும் விதி.
இறக்கை விரித்தும் உயரப் பறக்கலாம்
கிறங்கிக் கரைந்;து சரணாகதியு மாகலாம்.

திருமண உறவெனும் விதியின் பாதை
அருமையிழந் தின்று குறுகுதல் வாதை
விருப்பின்றி நாம் கேட்கும் காதை!
அருகிய புரிந்துணர்வால் பிரிந்த பாதைகளே!

திருமண உறவால் மகிழ்ந்த காலமது
திருட்டுப் போய்த் திடுக்கிடச் செய்கிறது.
உருவாம் சகிப்புத்தன்மை தொலைந்து
உருகும் அன்பு எங்கு போகிறது!

திருமண உறவு தீயில் நிற்பதாய்
பெருமை மங்கிப் பெறுமதி குறைந்து
திருவை இழக்க எமது நிலை
புருவம் உயர்த்தி மௌனம் காத்தலோ!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
3-5-2014

tiffany-co-browse-tiffany-engagement-rings-australia

Advertisements

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Rajarajeswari jaghamani
  மே 07, 2014 @ 11:07:53

  உருவாம் சகிப்புத்தன்மை தொலைந்து
  உருகும் அன்பு எங்கு போகிறது

  உருக்கும் கேள்விகள்..

  மறுமொழி

 2. Bagawanjee KA
  மே 07, 2014 @ 11:30:53

  திருமண உறவில் சகிப்புத் தன்மை வேண்டும் என்பது உங்கள் கருத்து ,வேண்டாம் இந்த அடிமைத் தளை என்பது அறுத்து எறிபவர்களின் கருத்து .அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் என்பது அனைவரும் உணர வேண்டிய கருத்து !

  மறுமொழி

 3. karanthaijayakumar
  மே 08, 2014 @ 04:41:22

  அன்பு இருப்தால் சகிப்புத் தன்மை தானகவே வந்துவிடுமல்லவா
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 4. yarlpavanan
  மே 11, 2014 @ 00:59:00

  “திருமண உறவால் மகிழ்ந்த காலமது
  திருட்டுப் போய்த் திடுக்கிடச் செய்கிறது.
  உருவாம் சகிப்புத்தன்மை தொலைந்து
  உருகும் அன்பு எங்கு போகிறது!” என
  அழகான பகிர்வைப் பதிந்தீர்கள்!

  மறுமொழி

 5. கீதமஞ்சரி
  மே 12, 2014 @ 02:44:52

  இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற கரு. புரிதலின்மையால் வாழ்க்கையில்தான் எவ்வளவு இழப்புகள்! புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் நல்லது.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: