41- அம்மாவின் பதினெட்டாம் திதி.

amma

அம்மாவின் பதினெட்டாம் திதி.

ஆராரோ! ஆராரோ! ஆம்மா!
யாராரோ வருவாரே வாழ்வில்
வாராதே அம்மா நீயாக!
சோராதே மனமுன் நினைவாலே!

பதினெட்டாய் வந்த திதியிது
நதியோட்டக் காலங்கள் களன்றது
நிதிப் பெட்டகம் உங்கள் நினைவது
குதியாட்டம் அப்பாவையும் இணைத்து.

எங்களிற்காய் ஓயாது உழைத்து
உங்களிற்காய் ஓய்ந்து தூங்குங்கள்!
திங்களிற்கு அருகில் அப்பாவோடு
திருப்தியாய் தூங்குங்கள் ஆராரோ.

அன்பு முத்தங்கள் ஆராரோ
இன்னும் முத்தங்கள் அப்பாவிற்கும்
என்றும் ஏணியாகும் இருவரன்பும்
நன்றே வழிகாட்டட்டும் ஆராரோ!…

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
10-5-2014

anjali-2

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  மே 10, 2014 @ 09:43:31

  நன்றே வழிகாட்டட்டும்…

  மறுமொழி

 2. ranjani135
  மே 10, 2014 @ 09:55:43

  அம்மாவுக்கு ஒரு தாலாட்டு – நன்றாக இருக்கிறது, சகோதரி.
  இனிய அன்னையர் தின வாழ்த்துகள்!

  மறுமொழி

 3. kowsy 2010
  மே 10, 2014 @ 12:03:21

  சுழலும் வாழ்வில் இழப்புக்கள் பிரிவுகள் தாங்கமுடியாது . கவிதை யால் தாலாட்டு பாடி அமைதி காணுங்கள்

  மறுமொழி

 4. karanthaijayakumar
  மே 10, 2014 @ 12:57:43

  என்றென்றும் வழிகாட்டுவார் சகோதரியாரே

  மறுமொழி

 5. Rajarajeswari jaghamani
  மே 10, 2014 @ 13:16:21

  என்றும் ஏணியாகும் இருவரன்பும்
  நன்றே வழிகாட்டட்டும் ஆராரோ

  மறுமொழி

 6. Bagawanjee KA
  மே 10, 2014 @ 13:58:00

  அஞ்சலியிலும் தாலாட்டு ,நன்றாக உள்ளது !

  மறுமொழி

 7. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  மே 10, 2014 @ 15:07:27

  வணக்கம்
  அம்மாவின் தாலாட்டுஒரு சுகந்தான்.
  நன்றாக உள்ளது.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 8. thanimaram.org
  மே 10, 2014 @ 19:47:24

  அருமையான தாலாட்டு!

  மறுமொழி

 9. yarlpavanan
  மே 11, 2014 @ 00:45:47

  “அன்பு முத்தங்கள் ஆராரோ
  இன்னும் முத்தங்கள் அப்பாவிற்கும்
  என்றும் ஏணியாகும் இருவரன்பும்
  நன்றே வழிகாட்டட்டும் ஆராரோ!…” என
  ஆக்கிய பா அருமை!

  மறுமொழி

 10. கீதமஞ்சரி
  மே 12, 2014 @ 02:43:04

  குழந்தைகளைத் தாலாட்டி உறங்கவைத்த தாயின் மீளா உறக்கத்திற்கு மகள் பாடும் தாலாட்டு மனம் நெகிழ்த்துகிறது. அம்மாவின் ஆசி என்றென்றும் உங்களோடு இருக்கும் தோழி.

  மறுமொழி

 11. கோவை கவி
  மார்ச் 26, 2019 @ 15:52:26

  Verona Sharmila :- எங்களிற்காய் ஓயாது உழைத்து
  உங்களிற்காய் ஓய்ந்து
  தூங்குங்கள்! அருமையான கண்ணீர் துளிகளில் ஒரு கவிதை
  2015
  Vetha Langathilakam Shammi..:- .not கண்ணீர் துளிகள்!…proud……!
  2015
  Sakthi Sakthithasan :- அன்பினிய சகோதரி உங்கள் தாயின் வெற்றியே உங்களைப் போல ஒரு தமிழ்மகளை எம் தமிழுலகிற்கு ஈந்ததுவே ! அவ்வன்னையின் பெருமையில் நானும் பங்கெடுத்து உங்களின் அன்னையின் நினைவுகளோடு கலக்கிறேன். வாழ்த்துக்கள்
  2015
  Vetha:- Mikka nanry sir

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: