11. திரு கந்தையா சுப்பிரமணியத்தின் ஆன்ம அஞ்சலி

k.s anjaty

திரு கந்தையா சுப்பிரமணியத்தின் ஆன்ம அஞ்சலி
தோற்றம்:- 1-3-1927. மறைவு:- 3-5-2014.

பிறப்பொன்று உறுதியாகும் போது
இறப்பொன்றும் முடிவில்வருவது திண்ணம்.
தோன்றுவன யாவும் என்றோ உறுதியாய்
மறைவது இயற்கை. காலத்தில் நிகழும்.
மனம் வருந்திக் கலங்குதலும் இயற்கை.
மகன் பேரப் பிள்ளைகளுடன் பெரியவர்
திரு கந்தையா சுப்பிரமணியம் டென்மார்க்கில்
மகிழ்ந்து வாழ்ந்தார் நீண்ட காலம்.

கண்டதும் முகம் மலர்ந்து பேசுவார்.
கருணையாய் சிறுவருக்கு இனிப்புக் கொடுப்பார்.
சுற்றியுள்ளோருடன் இனிமையாய்ப் பழகுவார்.
பற்றுடன் பேரப் பிள்ளைகளோடு மகிழ்ந்தார்.
முற்றும் என்று இறையடி சேர்ந்தார்.
யாழ் வட்டுக்கோட்டை சங்கரத்தையில்
வாழ்வைத் தொடங்க உதித்தார். இன்று
ஆழ்ந்து உறங்குகிறாரெம்மைக் கவலையில் ஆழ்த்தி.

எண்பத்தேழு வயதில் தன் வாழ்வின்
எண்ணம் மறந்தார். அனைத்தும் அனுபவித்தார்.
எமது கண்ணீரால் அஞ்சலி செய்கிறோம்.
இவரின் ஆன்மா சாந்தியடைவதாக.
இவரை இழந்து வருந்தும் உறவுகளிற்கு
அமைதி கிடைக்க இறைவனைப் வேண்டுகிறோம்.

டென்மார்க் நம்பிக்கைஒளி
றீய
7-5-2014

(Written by Vetha.Elangathilakam.)
images

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  மே 12, 2014 @ 17:19:08

  ஆழ்ந்த அஞ்சலிகள்…

  மறுமொழி

 2. Bagawanjee KA
  மே 12, 2014 @ 17:35:28

  பிறந்தது ஓரிடம் ,மறைந்தது ஓரிடம் உங்கள் இதயத்தில் என்றும் வாழும் அவருக்கு அஞ்சலிகள் !

  மறுமொழி

 3. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  மே 12, 2014 @ 23:45:45

  வணக்கம்

  ஆழ்ந்த அஞ்சலிகள்…

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 4. Rajarajeswari jaghamani
  மே 13, 2014 @ 05:58:56

  ஆன்மா சாந்தியடைவதாக.
  இவரை இழந்து வருந்தும் உறவுகளிற்கு
  அமைதி கிடைக்க இறைவனைப் வேண்டுகிறோம்.

  மறுமொழி

 5. Dr.M.K.Muruganandan
  மே 13, 2014 @ 12:20:24

  ஆழ்ந்த அஞ்சலிகள்…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: