12. திரு வேலுப்பிள்ளை கமலநாதன் ஆத்தும அஞ்சலி.

img

திரு வேலுப்பிள்ளை கமலநாதன் ஆத்தும அஞ்சலி.

மலர்வு:- 26-1-1952 உதிர்வு:- 6-5-2014

கமலநாதன் எனும் பெயருக்கேற்ப
கமலமுகம் கொண்டு டென்மார்க்கில்
கம்பீரமாய் கண்ணியமாய் கண்ணிறைய உலாவினீர்கள்!
அமலனுக்கென்ன துணிவு! உங்களை அங்கழைக்க!

மதுர அறிவு, தீர்க்கமான கவனிப்பு!
மயக்குமுங்கள் கருத்துகள்! சமயம் கலாச்சாரம்
மகிழ்ந்து பேணிய மகோன்னத மனிதன்!
மனதில் நிலைக்கும் வித்தகன் தாங்கள்!

அன்பு, ஆதரவு, தோழமை கொண்டு
அனைவரையும் அணைத்து அமைதியாய் வாழ்ந்தீர்கள்
அன்பான மனைவி, மூன்று பிள்ளைகளையுதறி
அப்படியென்ன அவசரம்! அவ்வுலகு ஏக!

சமூக ஆலோசகராகப் படித்து டென்மார்க்
சமூகம் விட்டு இலண்டன் சென்றீர்கள்!
அமோகமாய் வாழாது ஈதென்ன கொடுமை!
அதிர்ந்ததெம் மனது தங்கள் மரணிப்பால்!

மறக்க முடியவில்லை தங்களை! உண்மை
துறப்பதே வாழ்வு! நினை! உணர்த்துகிறீர்கள்!
தங்கள் ஆத்மா அமைதியடையட்டும்! கலங்கிப்
பொங்கும் துன்ப மனங்களும் சாந்தியடையட்டும்!

சாந்தி!….சாந்தி!….சாந்தி!……
ஓகுஸ் வாழ் தமிழ் மக்கள்
டென்மார்க்.
11-5-2014.

(Written by Vetha.Elangathilakam.)

10298979_10152006629416831_1454237632701079684_n

straight line

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  மே 13, 2014 @ 23:46:26

  வணக்கம்

  ஆழ்ந்த அஞ்சலிகள் …..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  மே 14, 2014 @ 03:29:26

  அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்…

  மறுமொழி

 3. karanthaijayakumar
  மே 14, 2014 @ 15:22:06

  ஆழ்ந்த அஞ்சலிகள்

  மறுமொழி

 4. கோமதி அரசு
  மே 21, 2014 @ 11:13:01

  ஆழந்த அஞ்சலிகள்.

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 26, 2019 @ 16:03:12

  Vetha Langathilakam :- இவரது மனைவி இலங்கை அரசியற் புள்ளி திரு.ஆனந்தசங்கரியின் மகளாவார்.
  2015
  Sakthi Sakthithasan :- அவரின் ஆத்மசாந்திக்காய் பிரார்த்திக்கிறேன்
  2015

  Vetha Langathilakam:- from Logan Chellam..அமரர் வே.கமலநாதன் அவர்களின் மரணச் சடங்கில், டென்மார்க்கிலிருந்து அவர்களின் உற்ற நண்பர்கள் சார்பில் வழங்கப்பட்ட அஞ்சலி – (3 pages)
  2015
  Grastley Jeya :- அவரின் ஆத்மசாந்திக்காய் பிரார்த்திக்கிறேன்
  2015
  Rajalingam Poet Mu :- ஆத்மசாந்திக்காய் பிரார்த்திக்கிறேன்
  2015
  சிறீ சிறீஸ்கந்தராசா:- அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்!!
  2015
  Nadarajah Ammayapillai:- Vi kondolerer til hans familen. Kamalanathan annai og min far er bedstevenner og vi er fra Pointpedro og jeg kender ham og hans familen siden jeg var barn.Hans ældste søster var min flokeskolelærer fra Sithivinayagar vithiyalayam. jeg fik et chok og sorg da jeg hørte hans forladelse……………………………………………………………………………….
  2015
  Vetha Langathilakam :- oh! tak for den beskivelse……

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: