17. பாவேந்தர் பாரதிதாசன்.- 1

1486823_10154074043725581_7327851135545686805_n (டென்மார்க்கிலிருந்து இலண்டனில் குடியேறிய சகோதரர் சௌந்தரின் ஓவியம் இது. நன்றி.)

பாவேந்தர் பாரதிதாசன்.- 1
(தமிழாசிரியர், பாவலன், அரசியல்வாதி, திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர்.)

கனகசபை முதலியார் இலக்குமி அம்மாள்
கனக பொக்கிசப் புதல்வர் சுப்புரத்தினம்.
கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன்
கவிஞன் உதயம் சித்திரை 29 – 1891.

***

கனகசுப்புரத்தினம் மகாகவி பாரதி சந்திப்பால்
கனகதும்பியானார். பாரதிதாசனாகி எழுதித் தொடர்ந்தார்.
கனத்த காதல் தமிழில். தமிழைக்
கரிசனமாய்ப் பயின்றார். 1919ல் தமிழாசிரியரானார்.

***

திரைப்படக் கதை வசனகர்த்தா சுயதிறனால்.
சிறையேகினார் போராட்டங்களில் அதிக நாட்டம்.
முறையான புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் (1954ல்.)
கறையின்றி ஐந்தாண்டு அரசியற் செயலாக்கம்.

***

உவமைகளில் மன்னராம், இசையோடு பாடுவார்.
உகந்த நாடக நடிகர், இந்தியாவில்
தமிழ் பாட்டெழுதிய முதற் பாவலன்.
தமிழிதழ்களின் ஆசிரியர், பிரெஞ்சும் கற்றிருந்தார்.

***

கிண்டற்காரன், கண்டெழுதுபவன், கிறுக்கன் இவர்
கொண் டெழுதிய சில புனைபெயர்கள்.
தமிழ் தேர் சுற்றிய பக்தன்
கமழ் பகுத்தறிவு சுயமரியாதை பெண்ணுரிமையாளன்.

***

பழனியம்மாள் நல் இல்லறத் துணைவி.
புரட்சிக் கவிஞர் பெரியார் விருது.
புரட்சிக் கவி அறிஞரண்ணா விருது. அரசு
பாரதிதாசன் பலகலைக்கழகமும் திருச்சியில் நிறுவினர்.

***

அமைதி ஊமை நாடகத்திற்குக் தங்கக்கிளி (1946)
பிசிராந்தையார் நாடக விருது சாகித்திய அகடாமி (1970)
சென்னைத் தபாற்துறை அஞ்சற் தலை 2001ல்.
சித்திரை 21-1964 இறையடியில் காவியமானார்.

***

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
18-5-2014
T 20-5-2014.

04-mannarmannan-300 (பாவேந்தருக்கு கோபதி எனும் இயற்பெயருடைய மன்னர்மன்னன் 1928ல் மூத்த மகனாகப் பிறந்தார். பின்னர் சரஸ்வதி, வசந்தா, ரமணி எனும் 3 பெண்களும் பிறந்தனர்.
மன்னர் மன்னன் பற்றி இந்த இணைப்பில் மேலும் அறியலாம்.http://tamil.oneindia.in/art-culture/essays/2012/tamil-mamani-mannar-mannan-164107.html)

https://kovaikkavi.wordpress.com/2014/05/19/18-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-2/

 

https://kovaikkavi.wordpress.com/2016/08/06/28-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

sunburst

Advertisements

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ranjani135
  May 18, 2014 @ 16:47:03

  பாவேந்தரின் வாழ்க்கையினை அழகாக கவிதையில் சொல்லியிருக்கிறீர்கள். அவருக்கு மக்கட்செல்வம் இல்லையா?

  மறுமொழி

 2. Bagawanjee KA
  May 18, 2014 @ 18:29:41

  சௌந்தரின் ஓவியமும் ,பாவேந்தரின் வரலாற்றுச் சுருக்க கவிதையும் கனகச்சிதம்!

  மறுமொழி

 3. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  May 18, 2014 @ 23:45:53

  வணக்கம்
  சகோதரி

  பாவேந்தர் பற்றி தங்களின் கவிதையின் வாயில் அறிந்தேன்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்…

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 4. Rajarajeswari jaghamani
  May 19, 2014 @ 02:42:19

  பாவேந்தர் பற்றி அருமையான படைப்பு ..
  பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 5. sujatha
  May 19, 2014 @ 03:54:06

  அழகு தமிழ் கமழ்ந்த கவித்துவம் அதிலும் பாவேந்தரின் அறிமுகத்துடன் கூடிய பணிகள், கற்று பெற்றுக்கொண்டவை
  அனைத்தையும் வெளிப்படுத்தியமை மிகவும் அருமை. வளர்க
  தங்கள் தமிழ்ப்பணி. “கவிதாயினி வேதா“

  மறுமொழி

 6. Kripa Saravanan
  May 20, 2014 @ 05:57:52

  Dear Admin,
  You Are Posting Really Great Articles… Keep It Up…We recently have enhanced our website, “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website…

  To add “Nam Kural – External Vote Button” to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

  நன்றிகள் பல…
  நம் குரல்

  மறுமொழி

 7. yarlpavanan
  May 20, 2014 @ 15:13:39

  முதலில் ஓவியருக்குப் பாராட்டுகள்
  அடுத்து, பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் தகவலை அறிய முடிந்தது.
  சிறந்த பகிர்வு

  மறுமொழி

 8. கோவை கவி
  May 21, 2014 @ 06:52:51

  In FB:-
  Loganadan PS:_
  இதைத் தீட்டிய கைகள் கலை ஆர்வமும், ரசனையும் கொண்ட குடும்பத்திற்கு சொந்தமானவை அல்லவா? வியப்பென்ன இருக்க முடியும்? அருமை, அற்புதம், அபாரம்!!!

  மறுமொழி

 9. கோமதி அரசு
  May 21, 2014 @ 11:06:56

  அருமையான ஓவியம்.
  பாவேந்தர் பாரதிதாசன் அவர்களைப் பற்றி அருமையான் கவிதை .
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: