18. பாவேந்தர் பாரதிதாசன் 2.

1486823_10154074043725581_7327851135545686805_n

பாவேந்தர் பாரதிதாசன் 2.

***

சங்கம் வளர்த்த தமிழ் மதுவேந்தி
அங்கம் சிலிர்க்கும் வரியில் உணர்வேந்தி
பங்கம் களைய உலகிற்காய் வரைந்தான்
பொங்கும் புகழோன் பாவேந்தர் பாரதிதாசன்.

***

புதுச்சேரியின் புடமிட்ட தமிழ் தங்கம்
புறக்கடையல்ல பெண்ணேயுன் இருப்பிடம் எழுவென
புன்னெறிச் சமூகத்தைச் சாடிப் பாவெழுதி
புகைந்தார் மனிதநேயக் கருத்துப் பொக்கிசம்.

***

சித்திரையில் வித்தகன் மலர்வும் உதிர்வும்.
முத்திரைச் சிந்தனைத் தீப்பொறியாளன் சமூகவிடுதலையில்
எத்திரையும் கிழிக்கும் மானுட விடுதலையாளன்.
உத்தமத் தமிழை உறிஞ்சி உடுத்தினான்.

***

எழுபத்தி மூன்றாண்டு எழுச்சி வாழ்வு
எழுபத்தி இரண்டு நூல்கள் எழுதினார்.
குருபக்தி பெரியாரில், கவிபக்தி பாரதியில்
ஆத்திகம், நாத்திகத்துடன் சாத்விகனாய் வாழ்ந்தார்.

***

பாரதி, பாரதிதாசன் சமூகத் தமிழ்ச்
சாரதிகள், முன்னோடித் தமிழ்த் தூண்கள்.
ஊரதிரும் தமிழ் இன்றும் அதிர்கிறது!
ஆரதி: ஆரத்தி: ஆலத்திக்குரியவர்கள் இவர்கள்.

***

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
19-5-2014

 

Samme about BARATHIthasanaar..another  poemhttps://kovaikkavi.wordpress.com/2016/08/06/28-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

https://kovaikkavi.wordpress.com/2014/05/19/18-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-2/

 

 

sunburst

20 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
    மே 19, 2014 @ 23:13:05

    வணக்கம்

    அழகிய கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி

    • கோவை கவி
      மே 26, 2014 @ 22:19:55

      இப்படித் தொகுத்துத் தருவதில் மிக மகிழ்வும் திருப்தியும் கிடைக்கிறது.
      விரிந்த கருத்திற்கு மிகுந்த நன்றி ரூபன்.

      மறுமொழி

  2. கவிஞா் கி. பாரதிதாசன்
    மே 20, 2014 @ 00:11:12

    வணக்கம்!

    பாவேந்தன் சீா்களைப் நாவேந்திப் பாடினாய்!
    பூவேந்தி மின்னும் புகழ்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    மறுமொழி

    • கோவை கவி
      மே 26, 2014 @ 22:20:56

      இப்படித் தொகுத்துத் தருவதில் மிக மகிழ்வும் திருப்தியும் கிடைக்கிறது.
      விரிந்த கருத்திற்கு மிகுந்த நன்றி ஐயா.

      மறுமொழி

  3. ramani
    மே 20, 2014 @ 01:14:47

    புதுச்சேரியின் புடமிட்ட தமிழ் தங்கம்
    புறக்கடையல்ல பெண்ணேயுன் இருப்பிடம் எழுவென//

    அற்புதமான கவிதை
    குறிப்பாக இவ்வரிகள்
    மனம் தொட்ட அருமையான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    மறுமொழி

    • கோவை கவி
      மே 26, 2014 @ 22:23:47

      இப்படித் தொகுத்துத் தருவதில் மிக மகிழ்வும் திருப்தியும் கிடைக்கிறது.
      விரிந்த கருத்திற்கு மிகுந்த நன்றி

      மறுமொழி

  4. திண்டுக்கல் தனபாலன்
    மே 20, 2014 @ 02:33:25

    அருமையான அழகிய கவிதை… வாழ்த்துக்கள் சகோதரி…

    மறுமொழி

    • கோவை கவி
      மே 26, 2014 @ 22:24:39

      இப்படித் தொகுத்துத் தருவதில் மிக மகிழ்வும் திருப்தியும் கிடைக்கிறது.
      கருத்திற்கு மிகுந்த நன்றி dear DD.

      மறுமொழி

  5. Bagawanjee KA
    மே 20, 2014 @ 03:23:11

    முந்தைய பதிவில் சுருக்கமாய் பாவேந்தரின் வாழ்க்கை வரலாறு ,இந்த பதிவில் அவருடைய கொள்கையை அழகாக வழங்கி விட்டீர்கள்

    மறுமொழி

    • கோவை கவி
      மே 26, 2014 @ 22:28:17

      ஆம் சகோதரரே கட்டுரை போல கவிதை எழுதுவது மிகக் கஷ்டம்.
      இது இனிமை.
      அதனாலேயே இருவகையாகவும் முயற்சித்தேன்.
      கருத்திற்கு மிக்க நன்றி.

      மறுமொழி

  6. தி.தமிழ் இளங்கோ
    மே 21, 2014 @ 04:33:22

    பாவேந்தரைப் பற்றி நினைவில் கொள்ளத்தக்க குறிப்புக்கள். பாவேந்தரின் படமும் அவருக்கே உரிய அந்த மீசையும் நன்றாக உள்ளன. பாரதிதாசன் பல்கலைக்கழம் திருச்சியில் உள்ள அரசு பல்கலைக் கழகம் ஆகும். இதற்கு தனிப்பட்ட நிறுவனர் யாரும் இல்லை.

    மறுமொழி

    • கோவை கவி
      மே 26, 2014 @ 22:30:40

      திருத்திவிட்டேன் சகோதரரே .
      அதாவது தெளிவாக்கி விட்டேன்.
      மிகுந்த நன்றி.
      சும்மா வாசிக்காமல் இதை எடுத்துக் கூறியதற்கு மிக மகிழ்ந்தேன்.
      நன்றி..நன்றி.

      மறுமொழி

  7. தி.தமிழ் இளங்கோ
    மே 21, 2014 @ 05:16:36

    // பாரதி, பாரதிதாசன் சமூகத் தமிழ்ச்
    சாரதிகள், முன்னோடித் தமிழ்த் தூண்கள். //

    இருவருமே தமிழுக்கு முன்னோடிகளதாம். ஆயினும் இருவரையும் பிரித்துப் பார்க்கும் சிலரும் உள்ளனர். இருவரையும் ஒன்றாகவே உயர்த்தும் உங்கள் தமிழ்ப்பற்று வாழ்க!

    மறுமொழி

  8. sujatha
    மே 21, 2014 @ 05:33:27

    பாரதி, பாரதிதாசன் சமூகத் தமிழ்ச்
    சாரதிகள், முன்னோடித் தமிழ்த் தூண்கள்.
    ஊரதிரும் தமிழ் இன்றும் அதிர்கிறது!
    ஆரதி: ஆரத்தி: ஆலத்திக்குரியவர்கள் இவர்கள்.
    தமிழ் பொறிதட்டும் தங்கள் கவி இன்னும் அருமை. வளரட்டும் தமிழ்ப்பணி “கவிதாயினி வேதா“

    மறுமொழி

  9. கோவை கவி
    மே 21, 2014 @ 05:55:54

    In FB:-
    21-5-2014.R Thevathi Rajan:-
    எத்தனை ஆண்டுகள் கழிந்தாலென்ன

    நம் பாவேந்தரின் எண்ணக்கருத்துக்களின்

    பயன்பாட்டின் அளவினை அளவிடமுடியா…

    பொக்கிஷமென்று சொல்லவும் கூடாது அவர்

    சொன்ன அத்தனையையும் – பொக்கிஷம் என்றாவது

    ஓர் நாள் இல்லையென்று சொல்லும் நிலை எய்தும்…

    அழகான பகிர்வு, மகிழ்வுதரும் நம் பாவேந்தர் நினைவு…

    மறுமொழி

  10. கோமதி அரசு
    மே 21, 2014 @ 10:36:47

    அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: