19. கலாயோகி, கவியோகி ரவீந்திரநாத் தாகூர்.

Tagore3

கலாயோகி, கவியோகி ரவீந்திரநாத் தாகூர்.

செல்வப் பாரம்பரிய இந்துக் குடும்பத்தில்
கல்கத்தா ஜோராசங்கர் மாளிகையில் பிராலிப்பிராமணர்
பலதுறை ஆளுமையர், வங்காள இலக்கியர்
வல்லவர் குருதேவ் ஒன்பதாவது மகனாகினார்.
வைகாசி ஏழில் 1861ல் இவரைக்
கைகளிலேந்தினர் தேவேந்திரநாத் சாரதாதேவி தம்பதியர்.
வையகம் போற்றும் காவியக் கவியோகிக்கு
கைத்தது பாரம்பரியக் கல்விமுறை, சட்ட திட்டம்.

கல்விச்சாலை செல்லாது சமஸ்கிருதம், இஸ்லாத்தின்
நல் பாரசீக இலக்கியங்கள், மரபுச்
செல்வர் கவி காளிதாசர் கவிகளிலுமாழ்ந்தார்.
வல்லமையோடு எட்டு வயதில் கவியடியடியெடுத்தார்.
கல்வெட்டாய் முதற் கவித்தொகுப்பு 17 வயதில்.
சொல் வளமுடை கவிதைகள் ஆயிரத்திற்கு மேலாக.
காவியக் கம்பர், வியாசரிற்கடுத்து ஏராளமாகத்
தூவினாராம் அறுபது ஆண்டகளென்பது கணிப்பு.

பரம்பரை இந்தியக் கலாச்சாரக் கருத்துடன்
தரமான மேற்கத்திய முற்போக்குக் கருத்துகளும்
வரம்பின்றி விளையாடியது தாகூர் வரிகளில்
வித்தகர் வங்காள இலக்கிய நாயகர்
பத்து வயது மிருனாலிதேவி ராய்சௌத்திரியை
பத்தினியாக்கினார் 1883ல். புத்திரிகள் மூவர்
புத்திரர்கள் இருவர் பிறந்த போதும்
முத்தான இருவர் இளமைக்கு முன்னிறையடியேகினர்.

கெட்டித்தனமான கல்வியாளர், நூலாசிரியர், கவிஞர்
நாட்டிய நாடகங்கள், சிறுகதைகள், நாடகங்களுடன்
நாட்டமுடன் இசையும் அமைத்தார், இசைமேதையுமானார்.
மானுடம் போற்றிய தத்துவஞானி, இயற்கைவிரும்பி
மனிதநலப் பொதுமைவாத மெய்யியற் சிந்தனையாளர்
1878 – 1932னுள் ஐந்து கண்டங்களில்
முப்பத்தொரு நாடுகளேகிய சுற்றுலா விரும்பி.
இந்திய ஆத்மிகப் பெருமைக்கு இலக்கணவிலக்கியமானார்.

1901ல் சாந்திநிகேதன் கலைக் கழகம் அமைத்தார்.
குருகுல முறையில் இயற்கைச் சூழலில்
அரும் கல்விப் போதனைகள் நடந்தது.
உருவானது முழுமையான இலக்கியப் பணி.
சாந்தி நிகேதனே விசுவபாரதி உலக
சர்வகலாசாலையாகப் பின்னாளில் பரிணமித்தது.
1905னுள் இந்தியக் கலாச்சாரத் தலையாய பிரதிநிதியானார்.
1911ல் இலக்கியத் துறைப் பேரரசாகப் போற்றப்பட்டார்.

19ம் நூற்றாண்டின் நவஇந்தியக் கலாச்சாரப் பிரதிநிதி
ரவீந்திரநாத்தாகூர் மாபெரும் தேசியக்கவி. காந்தி
விக்டர் கியூகோவிற்கு இணையாகக் கணிக்கப்பட்டார்.
பிரிக்கப்படாத வங்காள ஒற்றுமையைக் குறித்திட
அரிதான ராக்கிபந்தன் விழாவை அங்கறிமுகமாக்கினார்.
வங்காளப் பிரிவினையை எதிர்த்து எழுதிய வரிகள்
” அமர் சோனார் பங்களா ” வங்காள தேசியகீதமானது.
இன்னிசைக் கனிவுடைய உணர்வுப் பாடலானது.

வங்காள மொழிக்கு உலகக் கண்ணோட்டம் தந்தார்.
வங்காள பாரம்பரிய நாட்டுப் புறப்பாடல்
பாரம்பரிய இசைத் தொகுப்பாக 2000ற்கும் மேலாக்கினார்.
இரவீந்திர சங்கீத் என்றிது அழைக்கப் பட்டது.
தாகூர் காந்திக்கு ” மகாத்மா ‘ வை இணைத்தார்
இந்திரா காந்திக்கு ” பிரியதர்சினி ” யைச் சூட்டினார்.
தாகூரை காந்தி மாபெரும் காவலனென்றார் (Great sentinal).
அறிவுஜீவியாம் தாகூர் இந்தியத் தேசியகீதமாக்கினார்.

1913ல் வங்கமொழி கீதாஞ்சலியின் ஆங்கில
மொழிபெயர்ப்பிற்கு நோபல் பரிசு பெற்றார்.
ஆசிய முதல் நோபற் பரிசாளரிவரே!
ஆங்கில கீதாஞ்சலியைத் தமிழில் கனடா சி. ஜெயபாரதன்
தமிழில் மொழி பெயர்த்த பெருமையாளர் – 2004ல்
1915ல் பிரித்தானியா ” செவ்வீரர் ” (knight hood)பட்டமளித்தது.
1940ல் இலக்கிய முனைவர் பட்டம் பெற்ற
குழந்தைப் பிரியர் 7-9-1941ல் இயற்கையெய்தினார்.

(பிரியதர்சி – அமைதியான பார்வை.)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க். 24-5-2014

( நேயர்கள் மன்னிக்க வேண்டும். 64 வரிகளாக எண் சீர்கழிநெடிலடியாக இது அமைந்து விட்டது. என்னால் இதைவிடச் சுருக்க முடியவில்லை. வழமையின்றி இது விதிவிலக்காக நீண்டுவிட்டது. மன்னிப்புடன் வாசியுங்கள்.)

sunburst

22 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Rajarajeswari jaghamani
  மே 26, 2014 @ 01:18:27

  கலாயோகி, கவியோகி ரவீந்திரநாத் தாகூர்.பற்றி சிறப்பான ஆக்கம்..பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  மே 26, 2014 @ 01:58:02

  சிறப்பின் சிறப்புகளை அருமையான பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோதரி… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 3. yarlpavanan
  மே 26, 2014 @ 06:43:50

  இரு நாட்டுக்குத் தேசிய கீதம் எழுதிய
  ஒரு கவிஞர் தாகூர் என்பேன்!

  மறுமொழி

 4. karanthaijayakumar
  மே 26, 2014 @ 15:04:40

  சகோதரியே
  தங்களின்
  நோக்கமும் சிறப்பு
  ஆக்கமம் சிறப்பு
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 5. கோவை கவி
  மே 26, 2014 @ 22:05:44

  Through email….

  அன்புமிக்க வேதா,
  திண்ணையில் கீதாஞ்சலிக் கவிதைகள் 2004 -2006 இல் வெளிவந்தன.
  அன்புடன்,

  சி. ஜெயபாரதன்

  மறுமொழி

 6. sujatha
  மே 27, 2014 @ 02:33:22

  நினைவுகூர்ந்து அறிமுகத்துடன், ஆற்றிய தொண்டுகளும் பகிர்ந்தமை அருமை. தமிழ்ப்பணி தொடரட்டும. “கவிதாயினி வேதா“

  மறுமொழி

 7. kowsy 2010
  மே 27, 2014 @ 14:04:35

  தேவையென்றால் எவ்வளவு நீண்டிருந்தாலும் படிக்காது விடேன். தேடல் நிறைந்த பதிவுக்கு பலன் நிச்சயம் உண்டு. என்றோ
  யாருக்கோ பயன் படும். மிக்கநன்றி . ஆயிரத்தில் ஒருவர் இரவீந்திரநாத் தாகூர்

  மறுமொழி

 8. Dr.M.K.Muruganandan
  மே 28, 2014 @ 01:36:15

  அருமையான மதிப்பிற்குரிய எனக்கும் பிடித்த படைப்பாளி
  சிறப்பான கட்டுரை

  மறுமொழி

 9. seeralan
  மே 28, 2014 @ 07:58:33

  பெரும்புலவன் தாகூரின் பேராற்றல் கண்டேன்
  அருங்கனி தந்த அமுது

  அழகிய வரிகளில் ஆழமான தேடல்
  இனிய வாழ்த்து
  வாழ்க வளமுடன்

  மறுமொழி

  • கோவை கவி
   மே 28, 2014 @ 08:02:59

   மிக்க மகிழ்ச்சி சீராளன் தங்கள் கருத்திற்கு.
   ஊக்க வரிகள் என்றும் ஊக்கம் தருபவையே…
   இக்கவிதைக்கு ஓரு கிழமைக்கு மேல் முயற்சித்தேன்
   அத்துடன் சகோதரர் யெய பரதனுடனும் தொடர்பு கொண்டு தகவல் அறிந்தேன்.
   நன்றி நன்றி.

   மறுமொழி

 10. கோவை கவி
  மே 29, 2014 @ 15:05:09

  Muthulingam Kandiah கீதாஞ்சலி அளித்த பெரும் பாவேந்தர் வாழ்க்கை வரலாற்றை வளமுடன் அளித்து அனைவரும் அறியச்செய்தமை சிற்ந்தது.சகோதரி.

  மறுமொழி

 11. கோவை கவி
  ஜூன் 26, 2016 @ 20:03:49

  Surenthira Thurairaja என்னால் நேசிக்கப்படும் பல்துறை பேராசான்…இவரைப் பற்றி அறியுங்கள்.
  நன்றி கவிமலை. 25-6-2016

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: