41- அம்மாவின் பதினெட்டாம் திதி.

amma

அம்மாவின் பதினெட்டாம் திதி.

ஆராரோ! ஆராரோ! ஆம்மா!
யாராரோ வருவாரே வாழ்வில்
வாராதே அம்மா நீயாக!
சோராதே மனமுன் நினைவாலே!

பதினெட்டாய் வந்த திதியிது
நதியோட்டக் காலங்கள் களன்றது
நிதிப் பெட்டகம் உங்கள் நினைவது
குதியாட்டம் அப்பாவையும் இணைத்து.

எங்களிற்காய் ஓயாது உழைத்து
உங்களிற்காய் ஓய்ந்து தூங்குங்கள்!
திங்களிற்கு அருகில் அப்பாவோடு
திருப்தியாய் தூங்குங்கள் ஆராரோ.

அன்பு முத்தங்கள் ஆராரோ
இன்னும் முத்தங்கள் அப்பாவிற்கும்
என்றும் ஏணியாகும் இருவரன்பும்
நன்றே வழிகாட்டட்டும் ஆராரோ!…

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
10-5-2014

anjali-2

318. உறவின் மடியில்.

199500_10151081003880687_15536236_n

உறவின் மடியில்.

உறவின் மடியில் சந்ததி விருத்தி
இறக்கும் வரை சிறைப்படும் விதி.
இறக்கை விரித்தும் உயரப் பறக்கலாம்
கிறங்கிக் கரைந்;து சரணாகதியு மாகலாம்.

திருமண உறவெனும் விதியின் பாதை
அருமையிழந் தின்று குறுகுதல் வாதை
விருப்பின்றி நாம் கேட்கும் காதை!
அருகிய புரிந்துணர்வால் பிரிந்த பாதைகளே!

திருமண உறவால் மகிழ்ந்த காலமது
திருட்டுப் போய்த் திடுக்கிடச் செய்கிறது.
உருவாம் சகிப்புத்தன்மை தொலைந்து
உருகும் அன்பு எங்கு போகிறது!

திருமண உறவு தீயில் நிற்பதாய்
பெருமை மங்கிப் பெறுமதி குறைந்து
திருவை இழக்க எமது நிலை
புருவம் உயர்த்தி மௌனம் காத்தலோ!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
3-5-2014

tiffany-co-browse-tiffany-engagement-rings-australia

இடைவேளையின் பின்னர் 11

cey6th-24th-march14 132

இடைவேளையின் பின்னர் 11

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் கோவிலையும் ஒரு தடைவ தாண்டினோம்.
அப்போது ஒரு படத்தை எடுத்தேன். முன்னர் உள்ளே சென்று வணங்கியவை நினைவிற்கு வந்தது.
inside-st-anthonys-colombo (This is Google Photo.)

18ம் நூற்றாண்டில் டச்சுக்காரரின் கெடுபிடியில் இருந்தச் சமயம் ( வாழையிலையில் சாப்பிட்டால் வெளியே வீசக் கூடாதாம். பயத்தில் வாசலில் மேலே இறப்பில் (கூரையில்) சொருகி வைப்பார்களாம் என்று அம்மா கூறியது நினைவிற்கு வந்தது.) – கத்தோலிக்கத்தைத் தடுத்தனர்.
பின்பு இவரின் போதனை மீது நம்பிக்கை வர அனுமதி கொடுக்கப் பட்டது.

அந்தோனிப் பாதிரியார் தன் மரச்சிலுவையை கடலோரத்தில் நாட்டி தன்னை அதன் அருகில் அடக்கம் செய்யக் கேட்டாராம்.
காலப் போக்கில் கோவாவிலிருந்து அந்தோனியார் உருவம் கொண்டு வரப்பட்டு கண்ணாடிப் பேழையில் வைத்துப் பேணப்பட்டதாம். ஆரம்பத்தில் கழிமண்ணால் உருவான கொட்டில் பின்னர் இப்படி கோயிலாக உருவானதாம்.
z_p-25-Faith-03 ( This is also Google Photo)
தனியே கத்தோலிக்கருக்கு மட்டுமல்ல, இக் கோயில், பல மதத்தவரும் என்றும் பேணி வணங்குகின்றனர்.
கூகிளில் சென்று நான் தரும் ஏதாவது பெயர்களை அழுத்தினால் அழகிய படங்கள் விவரங்கள் காணலாம். படங்கள் நேரில் பார்ப்பது போன்ற பிரமை தருகிறது.

டென்மார்க்கிலிருந்து சுமார் 3 மணித்தியாலத்தில் இஸ்தான்புல் விமான நிலையம் சென்றடைந்தேன்.
cey6th-24th-march14 286

விமானத்திலிருந்து ஒரு படம் எடுத்தேன் இஸ்தான்புல் விமான நிலையக் காட்சி.

இம் மிகப் பெரிய விமான நிலையம் 1924ல் திறக்கப் பட்டதாம். இது உலகிலே 20வது பரபரப்பான விமான நிலையம் என்றும், ஐரோப்பாவில் 9வது பரபரப்பான விமான நிலையமாகக் கணிக்கப் பட்டுள்ளதாம்.
இங்கு தான் அமர்ந்து எநதப் படலை வழியாகப் போவது என்று பார்த்து இரவு 1.10க்கு இலங்கைக்கு விமானம் எடுத்தேன்.
normal_istanbul-airport-6

டென்மார்க் வரும் போது அமர்ந்து எந்தப் படலை வழியாகப் போவது என்று அறிவிப்புப் பலகையைப் பார்த்திருந்த இடம்.(கன்டீனுடன் சேர்ந்த இடம்.)Istanbul_Ataturk_Airport

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க். 4-5-2014

aeroplane-papers-1

317. ஏது சொல்ல! எப்படிச் சொல்ல!….

mine 242

ஏது சொல்ல! எப்படிச் சொல்ல!….

காது குளிரப் பேசும் நண்பியிடம்
மாதுரி திருமண வாழ்வு சிறப்பா
ஆதுரமாக ஆவல் மீறக் கேட்டேன்.
ஈது பழைய கதை விவாகரத்தன்றோ
சாதுவானவர் திருமண வாழ்வு இப்படியாகிறது
ஏது சொல்ல எப்படிச் சொல்லவென்றாள்.

கேட்கும் கதைகளெல்லாம் இரு மனம்
ஓட்டாத கதைகள் திடுக்கிட வைக்கிறது.
பட்டும் படாத வாழ்வு முறையாக
கெட்டிமேளம் கொட்டிய வாழ்வு வெறும்
வெட்டிய பந்தலாவதால் நெஞ்சு பதைக்கும்
கட்டமாகிறது ஏது சொல்ல! எப்படிச் சொல்ல!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
30-4-2014.

Divider_Pink_Heart_001

316. உழைப்பாளர் தினம்.

population day

உழைப்பாளர் தினம்.

உழைப்பு களைப்பென்றாலும்
பிழைப்பிற்கும் பண
அழைப்பிற்கும் உழைப்பு!
இழையூடும் ஆரோக்கியம்
இழையுமின்ப வாழ்விற்கும்
உழைப்பு! உழைப்பு!

உழைப்பின் பெருமையை
தழைக்கும் ஒற்றுமையால்
நுழையும் ஆனந்தத்தால்
பிழைப்புயர பலன்
மழையாக்கும் நல்
உழைப்பாளர் தினம்!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
1-5-2014

divider4

Next Newer Entries