71. கவிதை பாருங்கள்(photo,poem)

10392318_10203334212453245_7337965168102402842_n

அரசாட்சி மொழியாட்சி
வரம்பாட்சியற்ற வரமாட்சி!.
கைவசமாகும் மொழியாட்சி
கைராசியுடை சிந்தனையாட்சி!.

வாயில் வரும் வார்த்தைகள் எல்லாம்
தோய்ந்த செந்தமிழ்க் கவி வரியா!
ஆய்ந்து பார்ப்பதுண்டா!
காய்ந்துவிடக் கூடாது கவித்துவம்!

15712088-v-italic-letter-with-diamonds---mmm

DecorativeLine1-2

30. பத்துக் கேள்வி பதில்கள் (தொடர் ஆக்கம்)

mine2 139

பத்துக் கேள்வி பதில்கள் (தொடர் ஆக்கம்)

1. உங்கள் 100வது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?.

எனக்கு இவ்வளவு காலம் வாழ ஆசையில்லையே. என் வலையில் 180வது கவிதையை வாசியுங்கள். இதோ அதன் இணைப்பு. முதுமைப் பட்டயம். (இக் கேள்வியை என் கணவரிடம் கேட்டேன். பொல்லுப் பிடித்துக் கொண்டு கொண்டாடுவேன் என்றார்.) https://kovaikkavi.wordpress.com/2011/03/26/238-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/

2. என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?

கணனி தொழில் நுட்பம். எல்லாமே கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும். தெரிந்தவைகளைக் கூட இன்னும் கற்றுக் கொள்ள ஆசை. கற்றலிற்கு ஏது எல்லை!

3. கடைசியாகச் சிரித்தது எப்போது எதற்காக?

பேரனிடம் நேற்று போயிருந்தேன். லீகோ கட்டைகளை வைத்து பாரம் தூக்கி விளையாட்டு (கிறெயின்) விளையாடினோம். ஓவ்வொரு சாமானாகக் கொழுக்கியில் மாட்டி சுற்றி விளையாடினார். நான் முழுக்க முழுக்கத் தமிழில் அவருடன் பேசுவேன். அவருக்கு வாயில் வருவதெல்லாம் டெனிஸ் தான். காரணம் பாலர் நிலையம் போகிறார். அவரது தாயார் கூடுதலாகக் கலப்பது ஆங்கிலம். இன்று விளையாடும் போது ‘ இற் கானொட் It can not- இற் கான்’ It can சொன்னார். ஓ கெட்டிக்காரனாக உள்ளாரே என்று எண்ணினேன் இதை வந்து கணவரிடம் கூறிச் சிரித்தேன். சிறிது நேரத்தால் மகள் இலண்டனிலிருந்து பேசினார். அவளிடமும் கூறிச் சிரித்தோம். மகளும் விழுந்து விழுந்து சிரித்தாள். 2 வயதுப் பேரனின் குறும்பு தான். மேலே படம் தான் அவரது கிறெயின் (பாரம் தூக்கி)

4. 24 மணிநேரம் பவர் கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

இங்கு டென்மார்க்கில் அப்படி வராதே. ஆயினும் மெழுகுதிரி எடுத்துப் பற்ற வைத்து அதையும் இன்பமாக அனுபவிக்கலாம். (ஊர் வாழ்வு நினைவுக்கு வரும்.) ஆனால் இங்கு சாப்பாடு விடயங்கள் கடினமாக இருக்கும் சமைப்பது சூடு பண்ணிச் சாப்பிடுவது எல்லாமே.

5. உங்கள் குழந்தைகளின் திருமணநாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?

எங்களுக்கே அவர்கள் புத்திமதி கூறுவார்கள். தங்களுக்கு அனைத்தும் தெரியும் எனும் சுயஆளுமை கொண்டவர்கள். நல்வாழ்த்துக் கூறுவோம். மகிழ்ந்து கொண்டாடுவோம். புகைப்படங்கள் எடுத்து வைப்போம். (என் கணவரின் பதில் சந்தோசமாக வாழுங்கள் என்பது தான். வேறு என்ன!)

6. உலகத்திலுள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்க முடியுமென்றால் எந்தப் பிரச்சளையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்?

எமது நாடே பிரச்சனையாக உள்ளது பிறகு உலகத்தை எப்படிப் பார்ப்பது! திருத்துவது!. இருக்குமிடமன்றோ முதலில் இன்பமாக வேண்டும்!
பேசாமல் முடிந்தளவு தமிழைக் கவனித்துக் கொள்வேன். (என் கணவரின் பதில் பசி)

7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

கணவரோடு பிள்ளைகளோடு பேசுவேன். நல்ல நண்பர்களிடம் பேசுவேன். எனது சகோதரர்களிடம் பேசுவேன். ( என் கணவர் கூறுவது அட்வைசைப் பொறுத்தது. நோயானால் டாக்டர். வழக்கானால் அட்வகேட் அந்த மாதிரி என்கிறார்)

8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
உண்மை வெளியே வரும் நாளுக்காகக் காத்திருப்பேன். சந்தர்ப்பம் அமைந்தால் நைசாகவும் சூடாகவும் கேட்டிடுவேன். ( என் கணவரின் பதில் கோ ரு கெல் ( go to hell) என்று இருப்பேன்)

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

அன்பாக அமைதியடைய வார்த்தைகள் பேசி வேண்டியபடி உதவுவேன். (இதற்கு என் கணவரின் பதில் இன்னொருத்தியைத் திருமணம் செய் என்பது.)

10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

நெடு நாட்களாகத் தள்ளிப் போட்ட வேலைகளைச் செய்வேன் (வீட்டை அழகாக்கும்).
பூக்கன்றுகளைக் கவனிப்பேன். தையல், பெயின்ரிங், புகைப்பட வேலைகளை ஒழுங்கு படுத்துவேன். (என் கணவரின் பதில் கூரையைப் பார்த்துக் கொண்டு இருப்பேன்.) வலையில் 275 -276ம் கவிதைகள் தனிமை பற்றி உண்டு. இதுவே லிங்க். 275.https://kovaikkavi.wordpress.com/2013/05/12/275-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf/
276. https://kovaikkavi.wordpress.com/2013/05/15/276-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88/

மிக நன்றி சகோதரி கிரேஸ் இந்த அழைப்பிற்கு. அநேகமாகப் பலர் பலருக்கு அழைப்பு விட்டுள்ளனர். இந்தத் தகவல்கள் முழுமையாகத் தெரியாததால் எனக்கு யாரை அழைப்பது என்று தெரியவில்லை.

விரும்பியவர்கள் எழுதலாமே!.

சுவைதானே வாசிப்பது.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
26-6-2014

11497627-vintage-dividers-and-borders-set-for-ornate-and-decoration

20. நிலைத்துள்ளாய்

images

நிலைத்துள்ளாய்

கருவூட்டி மெருகூட்டி
கருத்தூட்டி வலுவூட்டி
அமுதூட்டும் கவிகள்
வாழ்வோட்டத் தந்தவனே!

நாளோட்டம் நீண்டாலும்
மேலோட்டமா யின்றி
நினைவூட்டத் தோணியிலே
நிலைத்து வாழ்பவனே! வென்றாய்!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
24.6-2014

16161859-vector-set-of-vintage-calligraphic-ornaments

70. கவிதை பாருங்கள்(photo,poem)

alavu

அளவு

தளம் சிறப்பாய் இயங்க
அளவு ஒன்று வேண்டாமோ!
அளவிற்கு மிஞ்சினால் அமுதமும்
விடம்- மறப்பது நன்றோ!
இடம் கிடைத்தால் அங்கு
மடம் பிடிப்பதும், பொதுவான
இடம் தனக்கென எண்ணும்
முடமான மனமழிப்பது நலம்.

( பலர் இடம் கிடைத்தால் அதை தவறாகப் பயன் படுத்தி
ஆக்கிரமிக்கும் மனப்பாங்கு,
அல்லது சுயநலம் என்றும் கூறலாம்.
மற்றவரைப் பற்றி நினைப்பதில்லை.
இதனால் மனம் வெதும்பி எழுதப்பட்ட வரிகள்.)

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
21-6-2014

14. ஒரு வருட நிறைவு அஞ்சலி..

/>தோற்றம்:- 3-3-1993 மறைவு:-13-6.2013.

திருமகளே தாரணி! நீ
அருவ(ம்) உலகு சென்று
ஒரு வருட நிறைவம்மா
திருப்புகழ், திருவாசகம், திருமந்திரமாக
ஒரு கணமேனும் நீயெம்
அருகின்றி விலகவில்லை மகளே!
பெருவமைதி பெறட்டும் உன்னாத்துமா
ஒருமித்த எம் அஞ்சலிகள்!
அண்ணன் மறக்கவில்லை உன்னை
அருமை உறவுகள், நண்பர்கள்
அனைவரும் உன்னரிய உறவை
அனுதினம் எண்ணிக் கொள்கிறோம்.
நோயின் கொடுமையை எதிர்த்த
நோன்பாம் உன் விடாமுயற்சி
தென்பு தந்துன்னை எம்மொடு
நீண்டு வாழ வைத்தது.
அமைதி அடைவாய் மகளே!
ஆண்டவனருகில் ஆறதலாய் இரு!
என்றுமுன்னை மறவோம்! ஏம்
மனதில் அழியாச் சித்திரம்
அன்பான பதுமை நீ!
அண்ணன், உறவுகள், நண்பர்கள்
அனைவரும் அஞ்சலிக்கிறோம் உன்னை!
ஆறுதலடைவாய் மகளே!…சாந்தி!
சாந்தி

அஞ்சலிப்போர் அருமை அம்மா, அப்பா
ஆசை அண்ணா
றீய – டென்மார்க்.
7-6-2014
written by :- Vetha.Elangathilakam.
Denmark.

இவரது மரண அஞ்சலி இது.ltr-1

untitled125

322. கனவு தேசம்.

 

aaaaaaaaaaaaa

கனவு தேசம்.

 

கவிஞனாகும் கனவு தேசமது
கவித்துவமற்று சிலவிடத்தில் சில்லறையாகிறது
மகத்துவம் இழந்து மல்லாடுது.
பச்சைப் பிழைகள் கக்கும்
கொச்சைக் கவி ஆக்கம்
நச்சு விதையாகத் தேக்கம்!.

 

பற்பல இலக்கணப் புதைவு
சொற்களின் சுக வளைவு
கற்கள் அடுக்கல்ல கவிதை!.
கனவு தேசமாய்க் கவி
புனைதல் இன்று மேவி
வினைத் தூய்மையிழத்தல் கேலி.

 

கவிஞன், கவிதாயினியடை மொழி
பவித்திரமான பிறர் அங்கீகாரம்!
வித்துவமல்ல சுய இணைப்பு.
கவிதை வனைதல், உயர்
பாவிதை விதைத்தல் தவம்!
நோவிதை இங்கு எடுத்துரைத்தல்.

 

பொதிகைத் தமிழ் கவிதை
எதுகை, மோனை சீருடை
மதுகைப் பாக்களாக உதிரட்டும்!
வித்தகப் பா ஆரம்
மத்தாகும், மனம் கிளர்த்தும்!
கொத்தட்டும் புது வரிக்கு!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-6-2014

 

DecorativeLine1-2

321. பொம்மலாட்டப் பாவை

34776_1431580186700_7979231_n*

பொம்மலாட்டப் பாவை

*

பொறாமையால் பொங்கி
ஆற்றாமை அலையடிக்கும்
அலட்சியம், ஓரவஞ்சனை ஒருவனை
நீராட்டி நனைக்கிறது.

*

வாலாட்டும் கருமைகள்
கோலாட்டிக் கொலுவிருந்து
நூலாட்டும் போது, மனிதன்
பொம்மலாட்டப் பாவையாகிறான்.

*

அப்போதும் தான் வென்றுவிட்டதாக
இறுமாந்து மகிழ்கிறான்.
அந்தோ! பரிதாபம்!

*

அறிவொளி மகிழ்வு பரப்பட்டும்!
அறிவீன இருள் அகற்றட்டும்!
முறிவுகள் நிறைவாகி மறைந்து
தெறிப்புகள் வானவில்லாகட்டும்.

*
76871_10202186186593316_323168662_n

*

வரிகளாக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
11-6-2014

*

Samme Poraamai  katu  another poem  link

https://kovaikkavi.wordpress.com/2015/08/22/394-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88/

*

divider1

 

69. கவிதை பாருங்கள்(photo,poem)

il_fullxfull_390338145_mj5wjj

பிடிவாதம் பிடிவாதம்….

அடி கூட மாறாத படிமானம்
அடிவான அழகிலும் மயங்காது, மடியாது
பிடிவாதம் பிடிவாதம் கடல் அலை.

பிடிவாதம் பிடிவாதம் மனப்படி தாண்டாக்
கடி வாதம் அழுங்குப் பிடி
வடிகால் ஏதுமுண்டோ உலகில்!

straight line

320. நட்பு!…. (நீரவர் நட்பு தரளம்)

1526795_809877189038615_1864734769_n-llநட்பு!…. (நீரவர் நட்பு தரளம்)

சட்டமின்றிப் பிறையாய் ஒரு
கட்டின்றி ஓங்கி வளரும்
நட்பு நிறை நட்பாம்
அட்சயம் வாழ்விற்கு அணிகலம்.

நீரவர் நட்பு உயர்வு,!
சேரவர் வரிசையில்! அனுபவம்
தரளம் சேமிக்கும் தரமுடைத்து!
தூரவர் போயினும் சுகந்தம்!

மட்டமான உறவு தொடர்பை
வெட்டிடும். தூர விலகும்.
கட்டும் கூட்டிற்குள் தனையடக்கும்.
ஓட்டடையாகுமங்கு பட்டு நட்பு.

சர்வமும் தானெனும் பாரத்துடன்
கர்வம் நிறை இதயம்
தர்மம் நீதி பார்க்காது
ஆர்வம் இழக்கும் நட்பிற்கு.

வல்லவரெனும் எண்ணமேற ஏற
வில்லத்தனம் மெல்ல அரங்கேறும்.
நல்ல நட்பும் அறுபடும்.
பொல்லா மனதின் தராதரமிது.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
4-6-2014
(நீரவர் .அறிவுடையார். தரளம் – முத்து)

12965393-set-of-gold-dividers

14. கூட்டுக் களி தரும் கூடாரம்.

P1070673

கூட்டுக் களி தரும் கூடாரம்.

சின்னஞ் சிறிய வீடு
சின்னக் கண்ணன் கூடு.
என்ன மகிழ்வு முகத்தில்!
என்னோடு உள்ளே போக.

கண்ணன் வெற்றி விளையாடும்
வண்ண பிளாஸ்ரிக் கூடாரம்
கிண்ணம் நிறைத்த ஆனந்தம்
திண்ணம் நிறைத்து நீட்டும்.

வெளிக்காற்றில் பல்கனியில் பின்
களிப்பாக உள்ளேயும் இதை
எளிதாக இடம் மாற்ற
மிளிர்கிறார் மகிழ்வின் துள்ளலில்.

மழலையோடு நாமும் மழலையாக
அழகாய் அரவணைத்து ஆனந்தித்தல்
வழங்கிடும் குழந்தைக்கு நல்ல
தழும்பாத தன்னம்பிக்கை உணர்வை.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
5-6-2014

sd7_divider1

Previous Older Entries