319. விரல் கொஞ்சும் யாழ்.

yarl <a

jaal-ll

விரல் கொஞ்சும் யாழ்.

வேட்டைச் சமூகமென்ற மனிதனின், தமிழனின் முதற் கருவி.
வேடனின் களைப்புத் தீரக் காட்டில் வாசித்த வில்லிசை
வேடனின் வில் நாணொலியால் தேடிய இசைக் கருவி.
வில்லின் முறுக்கான நாண் சொல்லிய அம்பெறியுமிசையே யாழாதாரமாம்.

நரம்புக் கருவி யாழ் ஏழிசை தரும் அருவி.
விரல் கொஞ்சும் யாழ் விரவுமிசை வீடெல்லாம்
பரவிப் பரவசமிணைத்தல் தரம் நிறை இன்பம்.
பரவிய இசை நாண் விரித்தது யாழின் இலக்கியமாக.

இலக்கியங்களில் முத்தாய் யாழின் விரிவு இலக்கணங்களுடன்; சிதறல்.
தொல்காப்பியம் தொடங்கிப் பல காப்பியங்களில் கொட்டிக் கிடப்பது.
பெண்ணின் உடலு மொரு நற் பண்ணுடை யாழென்பர்
எண்ணிறை கலைஞர்களின் வரிகள். வண்ணச் சிற்பிகளும் விலக்கல்ல.

யாழிலிருந்து பிறந்ததாம் பண். யாழ் ஒலியதிர்வற்ற பணிவிலக்கணமாம்.
யாழ் தமிழுக்குரியது என்பதற்கு ” ழ் ” தாங்கி வருவது ஆதாரமாம்.
யாழ் இசைத்தோர் பாணர். யாழ் பாடிக்கொண்டு இசைத்தல்.
யாழ்ப்பாணம் காரணப் பெயர் யாழ்ப்பாடியினால் தான் வந்ததன்றோ!

ஏழு நரம்புகளாலான யாழில் சுத்த சுரங்களே பிறக்கும்.
யாழ் இலக்கண நூல்கள் சங்ககாலத்தின் முன்னரே பிறந்ததாம்
யாழெனும் தந்திக் கருவியின் முன்னேற்றமே வீணையின் பிறப்பாகும்.
யாழ் தரமுடை தெய்வமானதாமன்று. வழக்கொழிந்து வீணையானதாம் இன்று!

வேறு:-

விரல் கொஞ்சும் யாழ்.
(அந்தாதி.) 28-5-14)
விரல் கொஞ்சும் யாழாக யாழ் பொஞ்சும் ஒலியாக
ஒலி மிஞ்சா இசையாக இசை நெஞ்சில் நிறைவாக
நிறை மஞ்சு வானாக வானவில்லாகி சஞ்சரிக்கும்.

(பொஞ்சுதல் – இணங்குதல் செழித்தல்)

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
3-6-2014

45

Advertisements

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. மகேந்திரன்
  ஜூன் 04, 2014 @ 00:41:10

  இனிய வணக்கம் வேதாம்மா…
  யாழ் என்ற சொல் கேட்டவுடனே
  செவியெல்லாம் இனிக்கிறது..
  சொல்லுக்கே இவ்வளவு மகிமை என்றால்..
  அதன் இசைக்கு கேட்கவா வேண்டும்….
  அருமையான தகவல்களுடன் அமைந்த பதிவு…
  நெஞ்சம் இனிக்கிறது வேதாம்மா…

  மறுமொழி

 2. karanthaijayakumar
  ஜூன் 04, 2014 @ 00:49:11

  யாழ்
  இந்தச் சொல்லில்தான் எவ்வளவு இனிமை

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 04, 2014 @ 02:19:59

  /// யாழ்ப்பாணம் காரணப் பெயர் யாழ்ப்பாடியினால் தான் வந்ததன்றோ! ///

  ஆகா…! அருமை சகோதரி…

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜூன் 04, 2014 @ 07:38:19

  :-
  Lakshmi Thassan :-
  தமிழை படிக்க படிக்க யாழிசை கேட்ட இன்பமன்றோ…அடைந்தேன்.

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜூன் 04, 2014 @ 07:45:46

  Bknagini Karuppasamy:-
  யாழ் குறித்த அரிய தகவல் தாங்கிய கவிதை .. அருமை சகோதரி

  மறுமொழி

 6. kowsy2010
  ஜூன் 04, 2014 @ 13:10:17

  யாழ் கண்டு மீட்டிய கவிதை அருமை

  மறுமொழி

 7. sujatha
  ஜூன் 05, 2014 @ 19:44:53

  விரல் மீட்டும் யாழின் பெருமை தேடி கவியிலே இசைமீட்டிய
  கவித்துவம் அதைவிட இனிமை பேசுகின்றது.
  அருமை..அருமை…..தமிழில் இசைமீட்டிய யாழின் கவிதேடிய
  பெருமையும் தங்களின் ஆர்வமான தமிழ்ப்பணிக்கு அர்ப்பணம்.

  மறுமொழி

 8. சரவண பாரதி
  ஜூன் 08, 2014 @ 07:19:59

  அருமையான பதிவு !
  யாழின் மகத்துவத்தை உணர்த்தும் பதிவு !
  வீணையின் தாய் யாழ் எனும் வில் அருமை !!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: