14. கூட்டுக் களி தரும் கூடாரம்.

P1070673

கூட்டுக் களி தரும் கூடாரம்.

சின்னஞ் சிறிய வீடு
சின்னக் கண்ணன் கூடு.
என்ன மகிழ்வு முகத்தில்!
என்னோடு உள்ளே போக.

கண்ணன் வெற்றி விளையாடும்
வண்ண பிளாஸ்ரிக் கூடாரம்
கிண்ணம் நிறைத்த ஆனந்தம்
திண்ணம் நிறைத்து நீட்டும்.

வெளிக்காற்றில் பல்கனியில் பின்
களிப்பாக உள்ளேயும் இதை
எளிதாக இடம் மாற்ற
மிளிர்கிறார் மகிழ்வின் துள்ளலில்.

மழலையோடு நாமும் மழலையாக
அழகாய் அரவணைத்து ஆனந்தித்தல்
வழங்கிடும் குழந்தைக்கு நல்ல
தழும்பாத தன்னம்பிக்கை உணர்வை.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
5-6-2014

sd7_divider1

Advertisements

14 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. yarlpavanan
    ஜூன் 05, 2014 @ 23:14:09

    “மழலையோடு நாமும் மழலையாக
    அழகாய் அரவணைத்து ஆனந்தித்தல்
    வழங்கிடும் குழந்தைக்கு நல்ல
    தழும்பாத தன்னம்பிக்கை உணர்வை.” என்பது.
    உண்மையே
    குழந்தைகளுக்கு ஊக்குவிப்பே
    முக்கிய தேவை – அதுவே
    தன்னம்பிக்கை உணர்வை எற்படுத்தும்

    மறுமொழி

  2. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
    ஜூன் 05, 2014 @ 23:39:32

    வணக்கம்
    ரசித்தேன் அழகிய மெட்டில் அழகிய பாடல்

    மறுமொழி

  3. ramani
    ஜூன் 06, 2014 @ 00:17:55

    மழலையோடு நாமும் மழலையாக
    அழகாய் அரவணைத்து ஆனந்தித்தல்
    வழங்கிடும் குழந்தைக்கு நல்ல
    தழும்பாத தன்னம்பிக்கை உணர்வை.//

    அற்புதமான கருத்தைச் சொல்லும் வரிகள்
    புரிந்து வாழ்வோரே பாக்கியவானகள்
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    மறுமொழி

  4. திண்டுக்கல் தனபாலன்
    ஜூன் 06, 2014 @ 02:17:04

    அருமை… ரசித்தேன் சகோதரி…வாழ்த்துக்கள்…

    மறுமொழி

  5. Rajarajeswari jaghamani
    ஜூன் 06, 2014 @ 06:36:25

    தன்னம்பிக்கை தரும் விளையாட்டு அருமை..

    மறுமொழி

  6. raveendran sinnathamby
    ஜூன் 06, 2014 @ 11:50:57

    அருமையான சிறுவர் பாடல். சந்தம்,மொழியாட்சியும்
    சேர்ந்தால் பேசவா வேண்டும்!

    மறுமொழி

  7. karanthaijayakumar
    ஜூன் 06, 2014 @ 15:31:57

    அருமை
    சகோதரியாரே
    அருமை
    நன்றி

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: