320. நட்பு!…. (நீரவர் நட்பு தரளம்)

1526795_809877189038615_1864734769_n-llநட்பு!…. (நீரவர் நட்பு தரளம்)

சட்டமின்றிப் பிறையாய் ஒரு
கட்டின்றி ஓங்கி வளரும்
நட்பு நிறை நட்பாம்
அட்சயம் வாழ்விற்கு அணிகலம்.

நீரவர் நட்பு உயர்வு,!
சேரவர் வரிசையில்! அனுபவம்
தரளம் சேமிக்கும் தரமுடைத்து!
தூரவர் போயினும் சுகந்தம்!

மட்டமான உறவு தொடர்பை
வெட்டிடும். தூர விலகும்.
கட்டும் கூட்டிற்குள் தனையடக்கும்.
ஓட்டடையாகுமங்கு பட்டு நட்பு.

சர்வமும் தானெனும் பாரத்துடன்
கர்வம் நிறை இதயம்
தர்மம் நீதி பார்க்காது
ஆர்வம் இழக்கும் நட்பிற்கு.

வல்லவரெனும் எண்ணமேற ஏற
வில்லத்தனம் மெல்ல அரங்கேறும்.
நல்ல நட்பும் அறுபடும்.
பொல்லா மனதின் தராதரமிது.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
4-6-2014
(நீரவர் .அறிவுடையார். தரளம் – முத்து)

12965393-set-of-gold-dividers

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜூன் 07, 2014 @ 11:10:03

  வணக்கம்
  கருத்து மிக்க வரிகள் …. வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 2. T.N.MURALIDHARAN
  ஜூன் 07, 2014 @ 12:24:31

  கவிதை நன்று. சில புதிய வாரத்தைகளை தெரிந்து கொண்டேன்.

  மறுமொழி

 3. karanthaijayakumar
  ஜூன் 07, 2014 @ 15:53:19

  நட்பின் பெருந்தக்க யாவுள
  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 4. sujatha
  ஜூன் 07, 2014 @ 19:11:46

  வல்லவரெனும் எண்ணமேற ஏற

  வில்லத்தனம் மெல்ல அரங்கேறும்.

  நல்ல நட்பும் அறுபடும்.
  பொல்லா மனதின் தராதரமிது.

  அருமை…..நல்ல நட்புள்ளங்கள் மனம் திறக்கும் பெட்டககங்கள்.
  அதாவது பரிமாறும் விஷயங்களை பாதுகாப்பதுடன், கரம் கொடுப்பவர்கள். வளர்க தமிழ்ப்பணி.!!!

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜூன் 07, 2014 @ 21:29:13

  Sutha Hari, Anand Raj and Rajini Sri, Shenbaga Jagatheesan, Anand Raj, சி.வெற்றிவேல் சாளையக்குறிச்சி, சக்தி குமரன், Kannan Sadhasivam like this…in FB.
  Sayee Ram:-
  நாராய் நான்
  பூவே உன்னோடு
  சேர்ந்த பின்னே மன(ண)க்கிறேன்..

  யதார்த்தவாதி விஸ்வாமித்ரர்:-
  அருமை தரளம் ….உடைத்து வரிகள் வசந்தம் சகோ

  Vetha ELangathilakam:-
  mikka nanry Sayee Ram , யதார்த்தவாதி விஸ்வாமித்ரர் and likers…

  மறுமொழி

 6. கீதமஞ்சரி
  ஜூன் 08, 2014 @ 02:35:48

  நட்புநெறிகளை அழகாக விளக்கும் அழகுத்தமிழ்ப் பாடல். \\வல்லவரெனும் எண்ணமேற ஏற
  வில்லத்தனம் மெல்ல அரங்கேறும்.\\
  ஈகோ தலைதூக்கினால் நட்பு அழிந்துபோய்விடும். உண்மையான கருத்து. பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 7. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 08, 2014 @ 03:45:56

  /// சர்வமும் தானெனும் பாரத்துடன்
  கர்வம் நிறை இதயம்
  தர்மம் நீதி பார்க்காது
  ஆர்வம் இழக்கும் நட்பிற்கு ///

  100% உண்மை…

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜூன் 29, 2014 @ 18:25:48

  Dear DD மிக்க நன்றியும் மகிழ்வும் தங்கள் கருத்து
  கண்ணுற்று.

  மறுமொழி

 9. கோவை கவி
  ஆக 02, 2014 @ 07:39:02

  You, Rasiah Sharatha, Mageswari Periasamy, James Gnanenthiran and 12 others like this..

  Sivakumary Jeyasimman:-
  சர்வமும் தானெனும் பாரத்துடன்
  கர்வம் நிறை இதயம்
  தர்மம் நீதி பார்க்காது…
  ஆர்வம் இழக்கும் நட்பிற்கு.

  Sakthi Sakthithasan :-
  அன்புநிறை சகோதரி அருமையான கவிதை வாழ்த்துக்கள்

  James Gnanenthiran:-
  Nanraaga irukkirathu kavithai. Natpaniyaith thodarungal.

  Vetha ELangathilakam:-
  OH! James…well come…ha!..ha!…. தங்கள் சித்தம் (எண்ணம்- வேணடுகோள்)
  கவிதை சத்தம்.( ஓன்றிலிருந்து ஒன்று பிறந்தது.)…

  Vetha ELangathilakam:-
  sis Uthaya karen! glad….always well come….Thank you.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: