322. கனவு தேசம்.

 

aaaaaaaaaaaaa

கனவு தேசம்.

 

கவிஞனாகும் கனவு தேசமது
கவித்துவமற்று சிலவிடத்தில் சில்லறையாகிறது
மகத்துவம் இழந்து மல்லாடுது.
பச்சைப் பிழைகள் கக்கும்
கொச்சைக் கவி ஆக்கம்
நச்சு விதையாகத் தேக்கம்!.

 

பற்பல இலக்கணப் புதைவு
சொற்களின் சுக வளைவு
கற்கள் அடுக்கல்ல கவிதை!.
கனவு தேசமாய்க் கவி
புனைதல் இன்று மேவி
வினைத் தூய்மையிழத்தல் கேலி.

 

கவிஞன், கவிதாயினியடை மொழி
பவித்திரமான பிறர் அங்கீகாரம்!
வித்துவமல்ல சுய இணைப்பு.
கவிதை வனைதல், உயர்
பாவிதை விதைத்தல் தவம்!
நோவிதை இங்கு எடுத்துரைத்தல்.

 

பொதிகைத் தமிழ் கவிதை
எதுகை, மோனை சீருடை
மதுகைப் பாக்களாக உதிரட்டும்!
வித்தகப் பா ஆரம்
மத்தாகும், மனம் கிளர்த்தும்!
கொத்தட்டும் புது வரிக்கு!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-6-2014

 

DecorativeLine1-2

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 14, 2014 @ 09:45:43

  கற்கள் அடுக்கல்ல கவிதை…! – அப்படிச் சொல்லுங்க…!

  வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 2. ramani
  ஜூன் 14, 2014 @ 20:24:03

  அருமையான விளக்கம்
  என் கருத்தும் அதுவே
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. karanthaijayakumar
  ஜூன் 15, 2014 @ 02:25:34

  சொற்களின் சுக வளைவு

  அருமை
  அருமை
  சகோதரியாரே

  மறுமொழி

 4. தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
  ஜூன் 15, 2014 @ 11:31:47

  //கற்கள் அடுக்கல்ல கவிதை!.// உண்மை
  அருமை சகோதரி.

  மறுமொழி

 5. sujatha
  ஜூன் 17, 2014 @ 10:07:26

  தமிழ் கவிநயம், பற்று தமிழ் உணர்வின் வெளிப்பாடு. என்றும்
  தங்கள் பணி குறையின்றி வெளிப்படும் போது நிறைவு பொங்கி
  வளரும். வளர்க தமிழ்ப்பணி.!!!!!

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜூன் 18, 2014 @ 05:39:11

  Si Va :-
  அருமையுடன் அழகாக சாடியிருக்கிறீர். உண்மே…

  ELangathilakam:_
  உரிமமானவர் புரிந்து திருந்தினால் நன்று.
  நன்றி சகோ.

  மறுமொழி

 7. கீதமஞ்சரி
  ஜூன் 23, 2014 @ 07:40:22

  தமிழின்பால் பற்றும் பாசமும் கொண்ட உள்ளமது தவறு கண்டவிடத்து ஆதங்கம் கொண்டு அரற்றும் வரிகள். தவறிழைப்போர் தத்தம் தவறுகளை உணர்ந்து திருந்(த்)தினால் நல்லது.

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜூன் 28, 2014 @ 21:13:53

  யதார்த்தவாதி விஸ்வாமித்ரர்:-
  கவிஞனாகும் கனவு தேசமது
  கவித்துவமற்று சிலவிடத்தில் சில்லறையாகிறது
  மகத்துவம் இழந்து மல்லாடுது.
  பச்சைப் பிழைகள் கக்கும்
  கொச்சைக் கவி ஆக்கம்
  நச்சு விதையாகத் தேக்கம்!….!!

  ராதை கண்ணனின் ராதை:-
  கவிதைகள் கனவு தேசமது கவிதை பாட கவிஞனாய் மறுபிறவி கிடைக்கும் உன்னத தேசமன்றோ உயிர்கொடுப்போம் எழுத்து வடிவில் கலம் இறங்கி வாருங்கள்!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: