14. ஒரு வருட நிறைவு அஞ்சலி..

/>தோற்றம்:- 3-3-1993 மறைவு:-13-6.2013.

திருமகளே தாரணி! நீ
அருவ(ம்) உலகு சென்று
ஒரு வருட நிறைவம்மா
திருப்புகழ், திருவாசகம், திருமந்திரமாக
ஒரு கணமேனும் நீயெம்
அருகின்றி விலகவில்லை மகளே!
பெருவமைதி பெறட்டும் உன்னாத்துமா
ஒருமித்த எம் அஞ்சலிகள்!
அண்ணன் மறக்கவில்லை உன்னை
அருமை உறவுகள், நண்பர்கள்
அனைவரும் உன்னரிய உறவை
அனுதினம் எண்ணிக் கொள்கிறோம்.
நோயின் கொடுமையை எதிர்த்த
நோன்பாம் உன் விடாமுயற்சி
தென்பு தந்துன்னை எம்மொடு
நீண்டு வாழ வைத்தது.
அமைதி அடைவாய் மகளே!
ஆண்டவனருகில் ஆறதலாய் இரு!
என்றுமுன்னை மறவோம்! ஏம்
மனதில் அழியாச் சித்திரம்
அன்பான பதுமை நீ!
அண்ணன், உறவுகள், நண்பர்கள்
அனைவரும் அஞ்சலிக்கிறோம் உன்னை!
ஆறுதலடைவாய் மகளே!…சாந்தி!
சாந்தி

அஞ்சலிப்போர் அருமை அம்மா, அப்பா
ஆசை அண்ணா
றீய – டென்மார்க்.
7-6-2014
written by :- Vetha.Elangathilakam.
Denmark.

இவரது மரண அஞ்சலி இது.ltr-1

untitled125

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தி தமிழ் இளங்கோ
  ஜூன் 17, 2014 @ 23:24:34

  ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கண்ணீர் அஞ்சலி! திருமகள் தாரணிக்கு தரணியிலே வந்த வேதனை. இறைவா ஏன் இந்த சோதனை.? நானும் உங்கள் கண்ணீர் அஞ்சலியில் கலந்து பிரார்த்திக்கிறேன்! தரணியின் ஆன்மா அமைதியாக உறங்கட்டும்!

  மறுமொழி

 2. T.N.MURALIDHARAN
  ஜூன் 18, 2014 @ 01:13:52

  நெஞ்சம் கலங்குகிறது, உருக்கமான வார்த்தைகளால் கண்ணீரை வரவழைத்து விட்டீர்கள்.பெற்ற மகளின் பேரிழப்பு ஈடு செய்ய முடியாதது என்பதை உணர முடிகிறது.. காலமும் நினைவுகளும்
  தாரணிக்கு ஆறுதல் அளிக்கட்டும்

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 18, 2014 @ 02:00:36

  ஆழ்ந்த இரங்கல்கள்…

  மறுமொழி

 4. Rajani
  ஜூன் 18, 2014 @ 18:52:47

  ஓராண்டு ஆனாலும் உங்கள் நினைவுகள் எம்மைவிட்டு நீங்காது…

  மறுமொழி

 5. கீதமஞ்சரி
  ஜூன் 23, 2014 @ 07:37:22

  கவிதை வாசித்து கண்கள் கலங்குகின்றன. அருமையான பெண்ணை இழந்து தவிக்கும் அன்புள்ளங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: