30. பத்துக் கேள்வி பதில்கள் (தொடர் ஆக்கம்)

mine2 139

பத்துக் கேள்வி பதில்கள் (தொடர் ஆக்கம்)

1. உங்கள் 100வது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?.

எனக்கு இவ்வளவு காலம் வாழ ஆசையில்லையே. என் வலையில் 180வது கவிதையை வாசியுங்கள். இதோ அதன் இணைப்பு. முதுமைப் பட்டயம். (இக் கேள்வியை என் கணவரிடம் கேட்டேன். பொல்லுப் பிடித்துக் கொண்டு கொண்டாடுவேன் என்றார்.) https://kovaikkavi.wordpress.com/2011/03/26/238-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/

2. என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?

கணனி தொழில் நுட்பம். எல்லாமே கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும். தெரிந்தவைகளைக் கூட இன்னும் கற்றுக் கொள்ள ஆசை. கற்றலிற்கு ஏது எல்லை!

3. கடைசியாகச் சிரித்தது எப்போது எதற்காக?

பேரனிடம் நேற்று போயிருந்தேன். லீகோ கட்டைகளை வைத்து பாரம் தூக்கி விளையாட்டு (கிறெயின்) விளையாடினோம். ஓவ்வொரு சாமானாகக் கொழுக்கியில் மாட்டி சுற்றி விளையாடினார். நான் முழுக்க முழுக்கத் தமிழில் அவருடன் பேசுவேன். அவருக்கு வாயில் வருவதெல்லாம் டெனிஸ் தான். காரணம் பாலர் நிலையம் போகிறார். அவரது தாயார் கூடுதலாகக் கலப்பது ஆங்கிலம். இன்று விளையாடும் போது ‘ இற் கானொட் It can not- இற் கான்’ It can சொன்னார். ஓ கெட்டிக்காரனாக உள்ளாரே என்று எண்ணினேன் இதை வந்து கணவரிடம் கூறிச் சிரித்தேன். சிறிது நேரத்தால் மகள் இலண்டனிலிருந்து பேசினார். அவளிடமும் கூறிச் சிரித்தோம். மகளும் விழுந்து விழுந்து சிரித்தாள். 2 வயதுப் பேரனின் குறும்பு தான். மேலே படம் தான் அவரது கிறெயின் (பாரம் தூக்கி)

4. 24 மணிநேரம் பவர் கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

இங்கு டென்மார்க்கில் அப்படி வராதே. ஆயினும் மெழுகுதிரி எடுத்துப் பற்ற வைத்து அதையும் இன்பமாக அனுபவிக்கலாம். (ஊர் வாழ்வு நினைவுக்கு வரும்.) ஆனால் இங்கு சாப்பாடு விடயங்கள் கடினமாக இருக்கும் சமைப்பது சூடு பண்ணிச் சாப்பிடுவது எல்லாமே.

5. உங்கள் குழந்தைகளின் திருமணநாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?

எங்களுக்கே அவர்கள் புத்திமதி கூறுவார்கள். தங்களுக்கு அனைத்தும் தெரியும் எனும் சுயஆளுமை கொண்டவர்கள். நல்வாழ்த்துக் கூறுவோம். மகிழ்ந்து கொண்டாடுவோம். புகைப்படங்கள் எடுத்து வைப்போம். (என் கணவரின் பதில் சந்தோசமாக வாழுங்கள் என்பது தான். வேறு என்ன!)

6. உலகத்திலுள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்க முடியுமென்றால் எந்தப் பிரச்சளையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்?

எமது நாடே பிரச்சனையாக உள்ளது பிறகு உலகத்தை எப்படிப் பார்ப்பது! திருத்துவது!. இருக்குமிடமன்றோ முதலில் இன்பமாக வேண்டும்!
பேசாமல் முடிந்தளவு தமிழைக் கவனித்துக் கொள்வேன். (என் கணவரின் பதில் பசி)

7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

கணவரோடு பிள்ளைகளோடு பேசுவேன். நல்ல நண்பர்களிடம் பேசுவேன். எனது சகோதரர்களிடம் பேசுவேன். ( என் கணவர் கூறுவது அட்வைசைப் பொறுத்தது. நோயானால் டாக்டர். வழக்கானால் அட்வகேட் அந்த மாதிரி என்கிறார்)

8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
உண்மை வெளியே வரும் நாளுக்காகக் காத்திருப்பேன். சந்தர்ப்பம் அமைந்தால் நைசாகவும் சூடாகவும் கேட்டிடுவேன். ( என் கணவரின் பதில் கோ ரு கெல் ( go to hell) என்று இருப்பேன்)

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

அன்பாக அமைதியடைய வார்த்தைகள் பேசி வேண்டியபடி உதவுவேன். (இதற்கு என் கணவரின் பதில் இன்னொருத்தியைத் திருமணம் செய் என்பது.)

10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

நெடு நாட்களாகத் தள்ளிப் போட்ட வேலைகளைச் செய்வேன் (வீட்டை அழகாக்கும்).
பூக்கன்றுகளைக் கவனிப்பேன். தையல், பெயின்ரிங், புகைப்பட வேலைகளை ஒழுங்கு படுத்துவேன். (என் கணவரின் பதில் கூரையைப் பார்த்துக் கொண்டு இருப்பேன்.) வலையில் 275 -276ம் கவிதைகள் தனிமை பற்றி உண்டு. இதுவே லிங்க். 275.https://kovaikkavi.wordpress.com/2013/05/12/275-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf/
276. https://kovaikkavi.wordpress.com/2013/05/15/276-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88/

மிக நன்றி சகோதரி கிரேஸ் இந்த அழைப்பிற்கு. அநேகமாகப் பலர் பலருக்கு அழைப்பு விட்டுள்ளனர். இந்தத் தகவல்கள் முழுமையாகத் தெரியாததால் எனக்கு யாரை அழைப்பது என்று தெரியவில்லை.

விரும்பியவர்கள் எழுதலாமே!.

சுவைதானே வாசிப்பது.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
26-6-2014

11497627-vintage-dividers-and-borders-set-for-ornate-and-decoration

29 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 26, 2014 @ 01:08:26

  /// இருக்குமிடமன்றோ முதலில் இன்பமாக வேண்டும்! /// ஆகா…!

  அனைத்து பதில்களும் சுவாரஸ்யம்…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 26, 2014 @ 06:40:46

   டிடி நான் மிக எளிமையாகப் பதில் தந்தேன்.
   அவரவர் குறளும், இரு வரியென்றும் அசத்தும் போது
   .ஆயினும் பிடித்திருந்தால் மகிழ்வே. மிக்க நன்றி…நன்றி டிடி.

   மறுமொழி

 2. கீதமஞ்சரி
  ஜூன் 26, 2014 @ 01:10:52

  எல்லாக் கேள்விகளுக்கும் ஆழ்ந்து சிந்தித்து விடையளித்துள்ளீர்கள். பேரனுடன் செலவழிக்கும் ஒவ்வொரு நொடியும் உண்டாகும் மகிழ்வுக்கும் சிரிப்புக்கும் சொல்லவா வேண்டும்? தங்கள் பதில்களோடு கூடவே தங்கள் கணவரின் பதில்களையும் வெளியிட்டிருப்பது சிறப்பு. பல பதில்களில் யதார்த்தம் முகத்தில் அறைகிறது. முதல் பதிலில் பொல்லுப் பிடித்துக்கொண்டு கொண்டாடுவேன் என்றிருக்கிறதே… அப்படியென்றால் என்ன என்று அறிந்துகொள்ள ஆவல். இருவருக்கும் இனிய வாழ்த்துக்கள் தோழி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 26, 2014 @ 06:44:07

   பொல்லு – தடி, ஊன்றுகோல் என்று கருத்து வருகிறது.
   எங்கள் ஊரில் பொல்லு மிக சர்வ சாதாரணமாகப் பாவிப்போம்.
   கீதா! மிக நன்றி உடன் வரவிற்கு, கருத்திற்கு, மகிழ்ச்சி.

   மறுமொழி

 3. Bagawanjee KA
  ஜூன் 26, 2014 @ 02:36:19

  பதில்களை ரசித்தேன் .அதென்ன பொல்லு ?சீக்கிரம் சொல்லுங்க ,மண்டை வெடித்து விடும் போலிருக்கு !

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 26, 2014 @ 06:59:56

   பொல்லு – தடி, ஊன்றுகோல் என்று கருத்து வருகிறது.
   எங்கள் ஊரில் பொல்லு மிக சர்வ சாதாரணமாகப் பாவிப்போம்.
   சகோதரா மிக நன்றி உடன் வரவிற்கு, கருத்திற்கு, மகிழ்ச்சி.
   கவனியுங்கள்!…நேற்று இரவு 9 மணிக்கு எங்கே இவரைக் காணோம் என்று
   சீராளன் பக்கத்திலிருந்து தங்கள் பெயரை அழுத்தினேன்.
   அவ்வளவு தான் தங்கள் கூகிள் பக்கம் வந்தது. மனைவி இல்லாத நேரத்தில்
   தலைப்பை அழுத்தினேன். என் கணனியில் 3 பக்கங்கள் திறந்தபடி
   அப்படியே நின்றுவிட்டது கணனி. மூடவும் முடியவில்லை.
   11 மணிக்கு இந்த ஆக்கம் வலையேற்றும் திட்டம்.
   அப்படீயே திறந்தபடி விட்டேன் தானே சுழன்றபடி இருந்து மூடியது.
   பின் இரவு 12மணிக்கு கணனியைத் திறக்க எல்லாம் தன்னியங்கியாகச் சரியாகியிருந்தது.
   பிழை என்னிடமா-சீராளனிடமா- தங்களிடமா தெரியவில்லை.
   இப்போது பார்த்தால் நீங்கள் கருத்திட்டிருக்கிறீர்கள் இங்கு.
   என்னே காத்திராத நிகழ்வு! ” கோஇன்சிடன்ட்”…
   வருவேன் அங்கு இன்றே……..

   மறுமொழி

   • கோவை கவி
    ஜூன் 26, 2014 @ 07:02:37

    அப்பாடா! மண்டை வெடிக்காமல் காப்பாத்திட்டேன்!!!!!…
    பிறகு எப்படி இந்த நகைச்சுவை லொள்ளுகளை நாம் ரசிப்பது.!!!!!
    ha!,,,,Ga!……

 4. Rajarajeswari jaghamani
  ஜூன் 26, 2014 @ 02:41:43

  அருமையான பதில்கள்..பாராட்டுக்கள்.

  மறுமொழி

 5. தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
  ஜூன் 26, 2014 @ 03:04:44

  என் அழைப்பை ஏற்று பதிவிட்டதற்கு முதலில் என் நன்றி. பேரக்குழந்தையுடன் படம் அழகு. பதில்களும் ஒவ்வொன்றும் மனதில் இருப்பதைச் சொல்வதாக யதார்த்தமாக இருக்கின்றன. உங்கள் பதில்களோடு கணவரின் பதில்களையும் தந்தது சிறப்பு. இருக்குமிடம் தான் முதலில் நன்கு அமையவேண்டும் என்பது சரியே. தமிழைப் பார்த்துக் கொள்வேன் என்று சொன்னது அருமை. மொத்தத்தில் அனைத்தும் அருமை சகோதரி. நீங்கள் கொடுத்துள்ள இணைப்புகளையும் பார்க்கிறேன். நன்றி.

  மறுமொழி

 6. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜூன் 26, 2014 @ 03:50:18

  வணக்கம்
  சகோதரி.

  கேள்விகளுக்கு பதிலை மிக அருமையாக சொல்லி அசத்தி விட்டீர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 7. கோமதி அரசு
  ஜூன் 26, 2014 @ 08:18:09

  உங்கள் பதில்கள் அருமை.
  உங்கள் கணவர் அவர்களிடமும் விடைகளை வாங்கி அளித்தமை சிறப்பு.
  பேரன் வெற்றியின் மழலை பேச்சில் குடும்பம் களித்து இருப்பது மகிழ்ச்சி.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 8. yarlpavanan
  ஜூன் 26, 2014 @ 14:10:14

  சிந்திக்கவைக்கும்
  சிறந்த பதில்கள்

  மறுமொழி

 9. Bagawanjee KA
  ஜூன் 27, 2014 @ 01:53:57

  நீங்கள் சொல்லும் அந்த நேரத்தில் இணையத்தின் முன் நானில்லை …ஒருவேளை பொல்லுக்கு நீங்கள் அர்த்தம் சொன்ன நேரம் பொல்லாத நேரமா கிவிட்டதோ ?

  மறுமொழி

 10. வை. கோபாலகிருஷ்ணன்
  ஜூன் 27, 2014 @ 07:43:15

  அருமையான பதில்கள்..பாராட்டுக்கள். அன்பான அழைப்புக்கும் நன்றிகள். – vgk

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 29, 2014 @ 20:07:44

   பதில்கள் பிடித்துதா!
   அப்படியானால் சந்தோசமே!
   கருத்து வரிகளிற்கு மிக்க நன்றி.
   ஐயா வரவேண்டும். கருத்தத் தர வேண்டும்.

   மறுமொழி

 11. கோவை கவி
  ஜூன் 27, 2014 @ 14:32:15

  Jeyaseelan Arulananthajothie Saraswathyammah:-
  நல்ல சிந்தனைகள். தேவை இல்லாமல் வாழும் காலத்தை வீணடிக்காமல், சிலவற்றைச் சிந்திக்கிறீர்கள். இப்படி எதையாவது ஆழ்ந்து சிந்தித்தால் தான் அறிவு விசாலமாகும், மூளைக்கும் நல்லது.

  சிலர் நினைக்கக்கூடும், இதெல்லாம் தேவையற்றது என்று.
  இப்படி சிந்தித்திராவிட்டால் மனிதன் மிருகமாகத்தான் இன்றும் இருந்திருப்பான்.

  Vetha ELangathilakam:-
  unmai sakothara……

  மறுமொழி

 12. பி.தமிழ் முகில்
  ஜூன் 27, 2014 @ 16:11:38

  அனைத்து பதில்களும் மிக அருமை கவியே !

  மறுமொழி

 13. T.N.MURALIDHARAN
  ஜூன் 28, 2014 @ 01:12:42

  அன்பும் அனுபவமும் மின்னும் பதில்கள்

  மறுமொழி

 14. sujatha
  ஜூன் 28, 2014 @ 04:27:21

  உற்சாகத்தை தேடுவது நாமாக இருந்தால் முதுமை ஒரு பொருட்டல்ல. இன்று 90 வயதிலும் போட்டி போட்டு விளையாடி
  வெற்றிக்கிண்ணத்தை தட்டும் முதியோர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். தற்போது நீங்கள் போட்டிருக்கும் கேள்வி பதில்கள் கூட உங்களையே உற்சாகப்படுத்துவதுன் இளமையை தட்டிக்கொடுக்கின்றது. வளர்க தமிழ்ப்பணி.!!!

  மறுமொழி

 15. சசிகலா
  ஜூன் 28, 2014 @ 04:52:01

  வெகு சுவார்யஸ்மாக இருந்தது தங்கள் பதில்கள். கணவரின் பதில்களையும் இணைத்து தந்தது சிறப்பு.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: