319. விரல் கொஞ்சும் யாழ்.

yarl <a

jaal-ll

விரல் கொஞ்சும் யாழ்.

வேட்டைச் சமூகமென்ற மனிதனின், தமிழனின் முதற் கருவி.
வேடனின் களைப்புத் தீரக் காட்டில் வாசித்த வில்லிசை
வேடனின் வில் நாணொலியால் தேடிய இசைக் கருவி.
வில்லின் முறுக்கான நாண் சொல்லிய அம்பெறியுமிசையே யாழாதாரமாம்.

நரம்புக் கருவி யாழ் ஏழிசை தரும் அருவி.
விரல் கொஞ்சும் யாழ் விரவுமிசை வீடெல்லாம்
பரவிப் பரவசமிணைத்தல் தரம் நிறை இன்பம்.
பரவிய இசை நாண் விரித்தது யாழின் இலக்கியமாக.

இலக்கியங்களில் முத்தாய் யாழின் விரிவு இலக்கணங்களுடன்; சிதறல்.
தொல்காப்பியம் தொடங்கிப் பல காப்பியங்களில் கொட்டிக் கிடப்பது.
பெண்ணின் உடலு மொரு நற் பண்ணுடை யாழென்பர்
எண்ணிறை கலைஞர்களின் வரிகள். வண்ணச் சிற்பிகளும் விலக்கல்ல.

யாழிலிருந்து பிறந்ததாம் பண். யாழ் ஒலியதிர்வற்ற பணிவிலக்கணமாம்.
யாழ் தமிழுக்குரியது என்பதற்கு ” ழ் ” தாங்கி வருவது ஆதாரமாம்.
யாழ் இசைத்தோர் பாணர். யாழ் பாடிக்கொண்டு இசைத்தல்.
யாழ்ப்பாணம் காரணப் பெயர் யாழ்ப்பாடியினால் தான் வந்ததன்றோ!

ஏழு நரம்புகளாலான யாழில் சுத்த சுரங்களே பிறக்கும்.
யாழ் இலக்கண நூல்கள் சங்ககாலத்தின் முன்னரே பிறந்ததாம்
யாழெனும் தந்திக் கருவியின் முன்னேற்றமே வீணையின் பிறப்பாகும்.
யாழ் தரமுடை தெய்வமானதாமன்று. வழக்கொழிந்து வீணையானதாம் இன்று!

வேறு:-

விரல் கொஞ்சும் யாழ்.
(அந்தாதி.) 28-5-14)
விரல் கொஞ்சும் யாழாக யாழ் பொஞ்சும் ஒலியாக
ஒலி மிஞ்சா இசையாக இசை நெஞ்சில் நிறைவாக
நிறை மஞ்சு வானாக வானவில்லாகி சஞ்சரிக்கும்.

(பொஞ்சுதல் – இணங்குதல் செழித்தல்)

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
3-6-2014

45

Next Newer Entries