22. கவி கண்ணதாசன்

puthusu1

எண்ணங்களை கவி எண்ணங்களை
கண்ணதாசன் வளர வைக்கிறான்.
வண்ண வண்ணக்கவிதைகள் உதயம்.
மண்ணிலே இதை மறுப்பாரில்லை.
பின்னிய அவன் பாடல்களே
பொன்னான பதிகங்களாக தினந்தினம்.

sunburst

Advertisements

14. திருவாளர் சண்முகநாதன்(சண்)முருகேசுவின் ஆத்ம அஞ்சலி

10458552_10154452658280451_6595503953298129569_n

திருவாளர் சண்முகநாதன்(சண்)முருகேசுவின் ஆத்ம அஞ்சலி

தோற்றம்:- 16-3-1950 மறைவு:- 21-7-2014

உறங்குவது போலும் சாக்காடு
உணர்ந்து கூறினார் திருவள்ளுவர்
சண்டிலிப்பாய் சண்முகநாதன் முருகேசுவும்
மண்ணிலே துணைவி சிவனேஸ்வரி(மலர்)
மக்கள் சனுசா, நிருசா, டெனிசன்
பக்கமின்றி உயிர் பறவை
அக்கரை சென்றது ஆறாத் துயர்.
இக்கரையில் நாம் கண்ணீருடன்.

அப்பாவெனும் பேராதரவு பெரும் இழப்பு.
எப்போ இனிக் காண்போம் உங்களை!
அரிய உயிர்த்துணை கணவன் இழப்பு
எரியும் மனம் ஆற்றுவார் யார்!
உரிமையாய் உறவாடிய உடன் பிறப்புகள்,
உறவுகள், உற்ற நண்பர்கள் யாவரும்
மறக்க முடியாது மனம் கலங்குகிறோம்.
சிறந்த உங்கள் உறவு மறைந்ததே!

நீர்வேலி, கோசன்ஸ் இனிய வாழ்வு
நீளாது குறுகியதே வேதனையோடு.
பாசமான நற்பண்பாளனே அழகுருவே!
நேசமான ‘சண்’ என்ற பெயர்
நினைவாக மட்டும்! – உயிர்க்கூடு
அக்கினிக்குச் சமர்ப்பணமாக நாம்
விக்கித்து நிற்கிறோம் புலம்பலுடன்!
விடைதருகிறோம் உங்களாத்துமா சாந்தியடையட்டும்!

சாந்தி!…..சாந்தி!……..சாந்தி!

அஞ்சலிப்போர்
மனைவி பிள்ளைகள், உற்றார் உறவினர் நண்பர்கள்
கோசன்ஸ். 28-7-2014

Written by me.(Vetha)

anjali-2

75. கவிதை பாருங்கள்(photo,poem

வேதாவின் மொழிகள் என்று அனுபவ மொழிகள், தத்துவ மொழிகளாக
என்சிந்தனையில் வந்தவற்றை
22 பதிவுகளாக வலையில் இட்டேன்
அவற்றை மறுபடி வாசிக்கும் போது நானா இவைகளை எழுதினேன் என்று
ஆச்சரியமாக உள்ளது. அப்படி எழுதிய இரண்டு பட வரிகளைத்தான் இங்கு நீங்கள் பார்ப்பது

525281_10200162743208496_469315393_n

(சவடால் -இடம்பம், பகட்டு
ஆய்மை – ஆராயும் தன்மை)

0722

இங்கு 75 வது படவரிகள் இலக்கம் முடிவுறுகிறது.
இதே ஆங்கிலப் படவரிகள் Photo poem பெயரில் மேலும்
இலக்கம் ஒன்றிலிருந்து தொடர்கிறது.
பிரிவுகள் தலைப்பின் கீழ் பாருங்கள். Nanry.

imagesCACSXL03

Advertisements

49. அங்கொருத்தியா!

1005506_513913305363503_1577338198_n

அங்கொருத்தியா!

***

சொற்கள் நந்தவனத்தி லிவள்
புற்களில் புரள்வது விரகத்திலா!
கற்பனைச் சொல்லரங்கத்தில் தில்லானா
அற்புத அத்தர் வாசனை!

***

அலைக்கூட்டத் தழகு மொழி
விலையின்றிப் புரளுது கரைசேர
குலைகுலையாய்த் திராட்சை யுருளும்
குளுகுளு காட்சிச் செழுமையது.

***

அவதி யாற்றாமை அழகியலாக
அன்பு அணைப்பு முத்தமாகி
இன்பக் காதல் சுவராகி
அரண் எழுகிறது மொழியாகி.

***

தனை விலக்கியதை யேற்காத
தலைவணங்காத் தன்மை
தொலையாக் காதலாய்க் கரைபுளுது.
அலையுமவன் மனதில் அங்கொருத்தியா!

***

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
24-7-2014

 

Divider_Pink_Heart_001

Advertisements

326. விந்தை….

kovai 017

விந்தை….

பகலின் பளிங்கு ஒளியிலும்
பயந்தருமிரவிருட்டிலும்
வியந்திட எழுதுவேன் விரட்டும்
விக்கினவுலக விசனங்களை,
வியக்கும் காதலை, கருணையை.

வியர்வையால் நன் நேரம்
விரயமாக்கி விரிக்கும் என்
வித்தை எழுத்துக்களை விட
விசிறும் எனது புகைப்படங்கள்
விலை கொள்கிறது அதிகமாக.

விலையற்ற அறிவுப் பெறுமதியை
வியர்த்தமாக்கும் மானிட எத்தனமான
விந்தையோ இது! விசித்திரமே!
விநோதமன்றி வேறு எது!
விரிவாயெழுதுவேன்! விவேகமாயெழுதுவேன்!

அறிவை அற்பமாய்க் கருதி
குறி தவறும் மானிடரோ!
சிறியது அறிவென்று சினப்பவரோ!
பறிக்க முடியாச் சொத்தை
வறிதென்று கருதல் அறியாமை!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
23-7-2014

Technique_Tuesday_Stamp_Set_Borderline_Vintage_Lace-4

Advertisements

325. பசுமை உலகில் படர்…..

1150716_592120140839988_263894995_o

பசுமை உலகில் படர்…..

பசுமை உலகில் படரன்பு
விசுவாசம், விசுவரூபமசுர சக்தி
அசுவமாயசைந்து உசுப்பு துலகை.
அசுத்த மதில் கலந்திடிலதி துயர்

பசுமை உலகில் படர் துன்பம்
வசுந்தரை வெறுந் தரையாக்கு மபாயம்.
பேசுதலெளிது வாதை விலக்குதல் கடினம்.
மூசும் துன்ப மின்பத்தின் மறுபாகம்.

பசப்பு மனிதர் பசுமை உலகை
கசப்பு நிலைக் கசைப்ப துண்மை
விசப் பூவாகப் பித்தலாட்டம் பொய்மை
தசபாகமும் பரவுதல் மகா கொடுமை.

படர் வாழ்வு துன்பம் தொடர்
இடர் மேடு பகையென வொருவிடர்
சுடரிட வமைத்தலெம் வினைத் தொடர்
அடரிடு மின்பமும் அவரவரூக்கத் தொடர்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
19-7-2014

butterfly- 3

Advertisements

74. கவிதை பாருங்கள்(photo,poem)

Padmini-ll

அற்றைப் பதுமை செம்மை
உவமை இன்மைத் திறமை.
புலமை வர்ணனை இல்லை.
பெருமை கைப்படை சதங்கை.
வித்தைச் சலுகை தேனடை.
இடிமை உரிமை உவகை.
நரைமை நன்கொடை எல்லை.

(அற்றை – அன்றைய. செம்மை – அழகு.
கைப்படை – ஆயுதம். சலுகை – செல்வாக்கு.
இடிமை – உலகு. நரைமை – மூப்பு.)

1012951_539196699586653_1527715385_n-pp

-gold-dividers

Advertisements

Previous Older Entries