21. நாட்டியப் பேரொளி பத்மினி.

312847_243304089052929_124832310900108_630202_1083883452_n

(இது எனது 1000 வது பதிவு.)

நாட்டியப் பேரொளி பத்மினி.

சேரநாடாம் கேரளப் பதியின் திருவானந்தபுரத்தின்
ஆரணங்கு அரச பரம்பரையில் உதித்தாள்.
பேரளந்த கோகினூர் வைரம் இவள்.
ஆரத்தினாள் நாட்டியக் கலையை வாழ்நாளில்.
காரணன் தங்கப்பன் பிள்ளை தந்தையார்.
தாரம் இலட்சுமி அம்மையார் தாயார்.
தாரகைச் செல்வம் மழலை பத்மினியை,
பரதப் புதையலை தாராட்டினார் 6-2-1932ல்.

நாட்டியம் நான்கு வயதில் பயிற்சியாம்.
ஊட்டம் கதகளி வரிசையில் ஆரம்பம்.
ஆட்டம் அரங்கேற்றம் பத்தாம் வயதிலாம்.
கூட்டாகச் சகோதரியரோடு அரங்குகள் ஏறினர்.
நாட்டியப் பேரொளி என்று விரிந்தார்.
பெருமையுடன் பிறப்புகள் லலிதா, ராகினியார்
‘ திருவாங்கூர் சகோதரிகள் ‘ பெயரை ஆண்டனர்.
பெரும் தகவு எல்லையறு நடனத்தில் பெற்றனர்.

பருவம் பதினாறில் இந்திப்பட இசைவு.
திருவுடை நடனத்தால் கல்பனாவில் நுழைவு.
ஒருமித்து இந்தியில் இருபத்தைந்து நிறைவு.
வேதாளஉலகம் பாம்பாட்டி நடன வளைவு
வேள்வியாய்த் தமிழ் முதற்பட நுழைவு (1948ல்.)
மணமகள் தமிழ் நடிப்பில் முதலானது (1951ல்.)
பணம் சிவாஜியுடன் கதாநாயகி யாக்கியது (1952ல்.)
மணம் வீசியது சிவாஜியிணைந்த 59 படங்கள்.

நூற்றைம்பது படங்களில் நடனத் தோகையை
நளினமாய் விரித்தார் நர்த்தக நூன்மடந்தை.
தமிழ், மலையாளம், இந்தி கன்னடம்
தெலுங்காம் ஐம்மொழிப் படங்கள் 250 பூரணம்.
அலுக்காது நடித்தார் பரதக்கலை பர்வதம்.
இந்தி-ரஷ்யமொழி பரதேசியிலும் நடித்தார்.
இவருருவின் முத்திரையை சோவியத் அரசார்
பெருமையாக வெளியாக்கி கௌரவம் கொடுத்தார்.

பத்மினியின் செல்லப் பெயர் பப்பிம்மா.
உத்தமபுத்திரன் இவருக்கொரு மகன் பிரேமானந்.
பாட்டிம்மா, வெள்ளையம்மா, பார்த்தால் ராணி
சம்யுக்தா தான். பரதப் பேரொளியின்
சம்பூரண நடனம், கற்சிலை உயிர்ச்சிலையாகும்
”மன்னவன் வந்தானடி ” திருவருட் செல்வரில்.
தில்லானா மோகனாங்கி 1961-5-25ல்
கல்யாணம் புரிந்தார் வைத்தியர் இராமசந்திரனை.

பேரழகி முத்திலகங்களுடனும் நடித்தார் இணைந்து.
சிறந்த நடிகை விருது 4முறையானது. (1954-59-61-66)
1958 தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது.
1985ல் பூவேபூச்சூடவா பிலிம் பெயர் விருது.
1970ல்அமெரிக்க நியூயெர்சி வாழ்வானது.
பரதத்தைத் தேங்கவிடாது கங்கையாய்ப் பெருக்கியது
1974ல் நியூயெர்சியில் நடனப் பள்ளியாரம்பமானது.
1981ல் மங்கையர் திலகம் இராமச்சந்திரன் மறைவு.

பரதக்கலை பர்வதம் பத்மினியின் ஆடல்
பன்னாட்டுத் தமிழ்நடுவ விழாவில் 72 வயதில்.
பாடல் திருமதி சுதா ரகுநாதனாகிப்
பதிவானது நியூயோர்க்கில் 2003ல் இறுதி.
வியக்கும் மொழி ஆளுமை நர்த்தகி.
மயக்கும் பரத ஆளுமை வித்தகி.
தயக்கமற்ற நிரூபணம் வஞ்சிக்கோட்டை வாலிபன்.
” கண்ணும் கண்ணும் கலந்து ” வைஜைந்தியுடனாடல்.

அரசிளங்குமரியின் நினைவின்று வியட்நாம் வீடு
மீண்ட சொர்க்கமான தேனும் பாலுமே.
இமயமளவான பரதக் கலாப மயில்
அரசகுமாரியுருவான அழகு மயில் தங்கப்பதுமை.
மாதவப் பெண் மயிலாள் 24-9-2006ல்
அமரதீபமானார். என்மனதிலிவர் ஆடற் காவேரி.
இன்னொரு பத்மினியாக இன்று சோபனா.
பரதத் தலைமுறை தொடரட்டும் தொடரட்டும்.

(ஆரத்தி – தீபஆராதனை. தாராட்டினார் – தாலாட்டுதல்.
தாரகைச் செல்வம் – கண்மணிச் செல்வம்.
நூன் மடந்தை – கலைமகள். இசைவு – இணக்கம்.)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22-6-2014.
(இலண்டனுக்கு தொண்ணூறுகளில்  நாட்டியப் பேரொளி பத்மினி  ஓரு நடன அரங்கேற்றத்திற்கு வந்த போது எமது மகள் இலண்டன் தமிழ்வானோலி அறிவிப்பாளராகப் பணி புரிந்த போது எடுத்த பேட்டியின் போது எடுக்கப்பட்ட படம் இது.) 188847_10200228612615190_2097902116_n

 

13346564_1867964049896585_4531687876141509918_n

 

திருவாங்கூர் சகோதரிகள் (லலிதா-பத்மினி- ராகினி)

நாட்டியப் பேரொளியுடனான நேர்காணல் 1: http://youtu.be/Rh1TaM09hdw
2: http://youtu.be/sbzd0XwWqDA

p – sep-14

wordpress-2
16161859-vector-set-of-vintage-calligraphic-ornaments

37 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. yarlpavanan
  ஜூலை 02, 2014 @ 00:04:07

  நாட்டியப் பேரொளி பத்மினி பற்றிய சிறந்த தகவல் திரட்டு.
  சிறந்த பகிர்வு

  மறுமொழி

 2. karanthaijayakumar
  ஜூலை 02, 2014 @ 01:33:19

  அருமை
  தங்கள் மகள் நாட்டயப் பேரொளியுடன் எடுத்துக் கெர்ண்ட படம்
  காலப் பொக்கிஷம்

  மறுமொழி

 3. Bagawanjee KA
  ஜூலை 02, 2014 @ 02:33:17

  நாட்டியப் பேரொளி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை கவிதையில் வடித்த விதம் ,அவர் அபிநயம் போலவே மிக அழகு !

  மறுமொழி

 4. வை. கோபாலகிருஷ்ணன்
  ஜூலை 02, 2014 @ 09:17:16

  திருவாங்கூர் சகோதரிகளான லலிதா-பத்மினி- ராகினியை நம்மால் என்றுமே மறக்கவே முடியாது. அதுவும் நாட்டியப்பேரொளி பத்மினியின் நாட்டியங்களும் நடிப்பும் நெஞ்சை விட்டு என்றுமே நீங்காதவைகள் அல்லவா !

  [தில்லானா மோகனாம்பாள் : ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன? பாடலையோ அதில் பதிமினி அவர்களின் நடனத்தையோ யாரால் மறக்க இயலும்] பத்மினி நல்ல அழகோ அழகு. இங்கு Black & White போட்டோவிலேயே எவ்வளவு ஒரு அழகாகத் தோன்றுகிறார்கள் ! 😉

  தங்களின் ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துகள். தங்களின் ஸ்பெஷல் அழைப்புக்கு என் நன்றியோ நன்றிகள்.

  அன்புடன் VGK

  மறுமொழி

 5. தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
  ஜூலை 02, 2014 @ 12:44:07

  ஆயிரம் பதிவுகள் தொட்டதற்கு வாழ்த்துக்கள் சகோதரி.
  பத்மினி எனக்கும் பிடிக்கும்.

  மறுமொழி

 6. வெற்றிவேல்
  ஜூலை 02, 2014 @ 13:18:21

  வணக்கம் வேதாம்மா…

  நாட்டியப் பேரொளி பற்றிய தகவல்களை அழகாகத் தொகுத்து பா புனைந்துள்ளீர்கள்….

  பாராட்டுகள்…

  பத்மினி அரச குடும்பப் பெண் என்பதை இன்று தான் அறிந்து கொண்டேன்…

  தகவல் தொகுப்பு அருமை…

  மறுமொழி

 7. rajisivam51
  ஜூலை 02, 2014 @ 17:28:52

  உங்களின் ஆயிரமாவது பதிவிற்கு வாழ்த்துக்கள். நாட்டியப் பேரொளியைப் போலவே உங்கள் கவிதையிலும் அழகு கொஞ்சுகிறது. புகைப்படங்கள் அத்தனையும் மனதை கொள்ளையடித்தன. உங்கள் மகள் நாட்டியப் பேரொளியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் பொக்கிஷம். கருப்பு வெள்ளையில் திருவாங்கூர் சகோதரிகள் வண்ணமாய் இருக்கின்றனர்.

  மறுமொழி

 8. seeralan
  ஜூலை 02, 2014 @ 21:27:06

  ஆயிரமாம் நற்பதிவில் அற்றைக் கனவொன்று
  தூயதமிழ் தொட்டு துலங்கிடுதே – ஆயகலை
  புத்தகமாம் ஆட்டத்தின் பேரொளியாம் இவ்வுலகின்
  பத்மினிஎன் றோர்பவள முத்து !

  மறுமொழி

 9. seeralan
  ஜூலை 02, 2014 @ 21:29:38

  ஆயிரம் பதிவென்ன ஆண்டாண்டு தோறும் பதிவெழுத நெஞ்சார வாழ்த்துகிறேன் ..! பத்மினியின் ஆடல்போல வார்த்தைகள் அழகாக கோர்த்து இருக்கீங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  மறுமொழி

 10. கீதமஞ்சரி
  ஜூலை 02, 2014 @ 23:38:46

  அபிநயங்களால் நம்மை ஆட்கொண்ட அற்புத நடனவித்தகி திருமதி பத்மினி அவர்களைப் பற்றிய அரிய தகவல்களோடு அருமையானதொரு ஆக்கத்தை ஆயிரமாவது ஆக்கமாய் அளித்து சிறப்பித்துள்ளீர்கள். பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 11. ramani
  ஜூலை 03, 2014 @ 02:07:30

  ஆயிரம் பிறை காணுவது மட்டுமல்ல
  ஆயிரம் பதிவு படைத்தலும்
  அத்தனை எளிதானதில்லை
  இளமைத் துடிப்போடும் அனுபவ முதிர்ச்சியோடும்
  தொடரும் தங்கள் பதிவுகள் இன்னும்
  ஆயிரம் ஆயிரமாய்த் தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 12. sujatha
  ஜூலை 03, 2014 @ 15:41:39

  நாட்டியப் பேரொளி ஆயிரத்தை தொட்ட பதிவில் தங்கள் பதிவு
  மேலும் பேரொளியாக மிதந்து நிற்கின்றது. மிகுந்த மகிழ்ச்சி.
  வாழ்க தமிழ்ப்பணி!!!! வளர்க தமிழ்!!!

  மறுமொழி

 13. Rajarajeswari jaghamani
  ஜூலை 03, 2014 @ 16:35:30

  ஆயிரமாவது பதிவுக்கு இனிய வாழ்த்துகள்..

  நளினமான நாட்டியப்பேரொளி பற்றிய
  சிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  மறுமொழி

 14. சசிகலா
  ஜூலை 04, 2014 @ 04:52:24

  ஆயிரமாவது பதிவிற்கு வாழ்த்துக்கள். அழகானவரின் பகிர்வோடு அசத்தல் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 15. கோமதி அரசு
  ஜூலை 04, 2014 @ 05:07:50

  ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
  நாட்டியப்பேபேரொளி அவர்களுடன் உங்கள் மகள் பேட்டியும் , படமும் அருமை.

  மறுமொழி

 16. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜூலை 04, 2014 @ 08:58:02

  வணக்கம்
  சகோதரி
  நாட்கள் எல்லாம் கண் விழித்து
  இரவு பகலாக மாறிபகலும் இரவாக மாறி
  கண்கள் உறங்க மறுத்தபொழுது
  எழுத்தே மேன்மை என்று வாழும் தங்களுக்கு
  1000 வது பதிவுக்கு இருகரம் கூப்பி
  ஆயிரம் மலர்கள் தூபி வாழ்த்துகிறேன்
  இன்னும் பலஆயிரம் பதிவுகள் மலரட்டும்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 17. Balaji
  ஜூலை 06, 2014 @ 06:04:26

  padmini rare photos super madam

  மறுமொழி

 18. Krishnan
  ஜூலை 06, 2014 @ 06:05:21

  nice madam

  மறுமொழி

 19. Sharmila Dharmaseelan
  ஜூலை 09, 2014 @ 03:20:23

  அழகும் .. அறிவு பூர்வமான உங்களின் ஆயிரமாவது சிறப்பான பதிவிற்கு வாழ்த்துக்கள்..மேலம் மேலும் உங்கள் பதிவுகள் வலைப்பூவில் மலர்ந்து மனம் பரப்ப என் வாழ்த்துக்கள்..அதனை மணந்து அனுபவிக்க சந்தர்ப்பம் தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: