72. கவிதை பாருங்கள்(photo,poem)

37094_342163842566081_1348306582_n

உயர்வென்று எண்ணுவது
உயர் நிலை இழக்கும்.
அயர்வென்று எண்ணுவது
நயர் செயலன்று.
மயர் விலக்கு!
வியரற்ற முயற்சி
வியர்த்தம் தொலைக்கும்
துயர் கலைக்கும்!
– வேதா-

உலகில் எல்லாமே மாறும் தன்மையுடைத்து.
உறவுகளும் அதே போன்று. இன்று உயர்வென்று எண்ணுவது
அவர்களின் கீழான செயல்களால் உயர் நிலை இழக்கும்.
இதை சோர்வாக எடுக்காது நாம் நம் பாதையில்
செல்லலே அறிவுடைமை. செல்லும் பாதையில் நம் சோர்வற்ற முயற்சி
பயனுடை நிலையடையும். துன்பத்தை அழிக்கும்.
தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து செல்லலே வாழ்வின்
தகைமையுடை செயலாகும். அனுபவப் பாறையில் மோதி
தெறிக்கும் முத்துக்கள் இவை.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-7-2014

bordertrans

Advertisements

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  ஜூலை 05, 2014 @ 08:58:40

  உயர் ,அயர் ,மயர்,வியர் என்று படித்ததும் வியர்த்துக் கொட்டியது ,நல்ல வேளை உரைக்கூறி துயர் துடைத்தீர்கள் !

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 05, 2014 @ 12:25:51

   நிச்சயம் சகோதரா. நானும் இப்படி எழுதியதால் தான் படிக்கிறேன்.
   நினைக்கிறீங்களா எளக்கு எல்லாம் தெரியும் என்று!.
   முயற்சி தானையா முயற்சி. மிக்க நன்று உள்ளதை எழுதியதற்கு.
   நானும் எழுதிவிட்டேன்-. மிக்க நன்றி..நன்றி

   மறுமொழி

 2. yarlpavanan
  ஜூலை 05, 2014 @ 13:54:50

  “தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து செல்லலே வாழ்வின்
  தகைமையுடை செயலாகும்.” என்ற வழிகாட்டலை வரவேற்கிறேன்.
  இன்றைய தலைமுறை இதனைப் பின்பற்ற வேண்டும்.

  மறுமொழி

 3. karanthaijayakumar
  ஜூலை 05, 2014 @ 14:24:44

  தன்னம்பிக்கையுடன் தலை நிமிர்ந்து செல்வோம்
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 05, 2014 @ 16:28:28

  என்னத்தை சொல்ல,….? அருமை சகோதரி…

  மறுமொழி

 5. கோமதி அரசு
  ஜூலை 05, 2014 @ 16:59:56

  அனுபவ முத்து அருமை.

  மறுமொழி

 6. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜூலை 06, 2014 @ 00:33:32

  வணக்கம்
  சகோதரி

  கவிதை மிக அருமையாக உள்ளது இரசிக்கவைக்கும் வரிகள்
  பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: