323. ஆட்டம், தேட்டம் – ஒருநோட்டம்.

 

Classic-Style-2zxDa-280Li-print

ஆட்டம், தேட்டம் – ஒருநோட்டம்.

 

ஆட்டம் ஆட்டம் அடங்கும் வாழ்வில்
ஓட்டம் ஓட்டம் மரண ஓட்டம்
தேட்டம் என்று தேடிக் கொண்டால்
திட்டம் போட்டு வட்டம் சேர்ப்பார்.
பட்டம் வேண்டாம் பட்டயம் வேண்டாம்
சட்டம் கூட பட்டுப் போகும்.

 

மொட்ட விழ்ந்த வட்டப் பூவை
கிட்டச் சென்று பட்டாம் பூச்சி
நோட்ட மிட்டு எட்டுதல் போல்
நாட்டமுடனெட்டுத் திசையில் வாட்டமின்றி
ஈட்டம் செய்வார் – நோட்டுக்
கட்டை பெட்டகத்தில் பூட்டுவார்.

 

எட்டப் போகும் நல் கட்டுப்பாடு.
கட்டம் போட்டுக் காய்கள் ஆடும்.
திட்டமாய் மதுப் புட்டியும் சேரும்.
ஆட்டம் பாட்டும் அமர்களமாகும்.
பட்டப் பகலிலும் விட்டில் பூச்சியாய்
மட்டமாக மதுப் புட்டம் கொள்வார்.

 

(புட்டம் – மனநிறைவு)

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
20-9-1999.

 

butterfly...

Advertisements

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  ஜூலை 10, 2014 @ 01:03:48

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 10, 2014 @ 02:02:49

  மட்டமான மனநிறைவு தேவையில்லையே…

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  ஜூலை 10, 2014 @ 11:16:54

  சிறப்பான சட்டம் தானா அது?/

  மறுமொழி

 4. yarlpavanan
  ஜூலை 12, 2014 @ 17:04:47

  ஆட்டம் ஆட்டம் அடங்கும் வாழ்வில்
  ஓட்டம் ஓட்டம் மரண ஓட்டம்

  உண்மை தான் அறிஞரே!

  மறுமொழி

 5. sujatha
  ஜூலை 13, 2014 @ 03:41:04

  வாழ்க்கையில் நாம் எதிர்பார்த்து நடப்பது எதுவும் இல்லை. இதில்
  ஆட்டமும் பாட்டமும் ஒரு பகுதியாக கடக்கின்றது.நிஐத்தை கவிநயத்தில் வெளிப்படுத்தியமை அருமை..

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜூலை 18, 2014 @ 18:45:18

  Sujatha இனிமையுடன் வந்து கருத்திட்டமைக்கு மகிழ்கிறேன்
  இனிய நன்றி உரித்தாகட்டும்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: