31. கொள்முதலில்லாக் கொடை

 

537604_4574824085833_1364190056_n-aaa

கொள்முதலில்லாக் கொடை

 

எடுத்துக்காட்டான எம் எழிலுடைத் தமிழே
எடுத்தாட்சி வழக்கின் எடுப்பான தமிழே
எடுத்தெறியாப் பண்போடு எடுத்தேற்றி யெழுதுங்கள்.
எடுத்தெழுதுங்கள் எழுத்துப் பிழையற

 

தன்னிகரில்லாத் தமிழே! அமுதின் உயர்வே!
தன்மானம் காக்கும் தகவுடைத் தமிழே
முன்னோர்கள் முயன்று வளர்த்திட்ட தமிழே
முன்னோடித் தமிழின் முன்னேற்றம் உயர்வே!

 

இலக்கிய இலக்கணம் இறைந்த தமிழே
இலக்கமற்ற பாக்கள் நிறைந்த தமிழே
இலங்கும் கருத்தாழம் சொல்லழகு நிறைவே
இலயிக்கும் இலாகிரி குறைவிலாத் தமிழே

 

பொருளாழம் பொன்னின் நிகருடை எழிலே!
சொல்லாழம் உலகோர் சொக்கும் தரமே!
சுவையாழச் சுவை சுகமான சுமை.
சுவையணியும் பன்னூறு நிறை தமிழே!

 

கொள்ளையின்பக் கொழுந்து விரித்த தமிழ்
கொள்ளையடிக்கும் பூந்தாது கொழித்த தமிழ்
கொள்ளுப் பூட்டனிற்கும் மூத்த தமிழ்.
கொள்முதலில்லாக் கொடை கொற்றத் தமிழ்!

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
12-7-2014

 

green line-2

23 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. sharatha
  ஜூலை 12, 2014 @ 08:02:49

  arumaiyana nenchai negila vaikkum varikal

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 25, 2014 @ 07:22:50

   மிக நன்றி சாரதா வலைக்கு வந்து கருத்திட்டமைக்கு.
   நல்லதென்று கண்டு தட்டிக் கொடுக்கும் தங்கள் பண்பிற்கு தலை வணங்குகிறேன்.
   மகிழ்ந்தேன். இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 2. தி தமிழ் இளங்கோ
  ஜூலை 12, 2014 @ 08:24:50

  தமிழைத் தமிழால் தாலாட்டிய தமிழ்க் கவிஞருக்கு நன்றி!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 25, 2014 @ 07:24:14

   மிக நன்றி ஐயா வந்து கருத்திட்டமைக்கு.
   தட்டிக் கொடுக்கும் தங்கள் பண்பிற்கு தலை வணங்குகிறேன்.
   மகிழ்ந்தேன். இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 3. கோமதி அரசு
  ஜூலை 12, 2014 @ 11:24:43

  அருமையான கவிதை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 25, 2014 @ 07:25:13

   மிக நன்றி சகோதரி வந்து கருத்திட்டமைக்கு.
   தட்டிக் கொடுக்கும் தங்கள் பண்பிற்கு தலை வணங்குகிறேன்.
   மகிழ்ந்தேன். இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 4. Rajarajeswari jaghamani
  ஜூலை 12, 2014 @ 11:40:03

  அழகு தழிழ் கவிதை..! வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 25, 2014 @ 07:25:47

   மிக நன்றி சகோதரி வந்து கருத்திட்டமைக்கு.
   தட்டிக் கொடுக்கும் தங்கள் பண்பிற்கு தலை வணங்குகிறேன்.
   மகிழ்ந்தேன். இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 5. கோவை கவி
  ஜூலை 12, 2014 @ 12:09:19

  Vetha ELangathilakam:-
  இடையறா முயற்சியில்
  தடையற எழுதல்
  நடைபெற வேண்டும்
  மேடையுறு தமிழ்.

  Karthikeyan Singaravelu :-
  தாங்களின் தமிழ் கன்டு அஞ்சிகிறேன் காரனம் தமிழனாய் பிறந்து பிழையின்றி தமிழ் எழுததெறியாததால் வருந்துகிறேன்

  Yousuf MOhamed :-
  தமிழின் பெருமை கவிதை நன்று!, — பொருளாழம் பொன்னின் நிகருடை எழிலே! சொல்லாழம் உலகோர் சொக்கும் தரமே! சுவையாழச்சுவை சுகமான சுமை! சுவையணியும் பன்னூறு நிறை தமிழே! — அருமை!,

  Sivakumary Jeyasimman:-
  தமிழின் பெருமையை அழகாக தந்திருக்கின்றீங்கள் அக்கா . தன்னிகரில்லாத் தமிழே! அமுதின் உயர்வே!
  தன்மானம் காக்கும் தகவுடைத் தமிழே
  முன்னோர்கள் முயன்று வளர்த்திட்ட தமிழே
  முன்னோடித் தமிழின் முன்னேற்றம் உயர்வே!

  Kamaraj Mariyappan :-
  அன்புத் தோழமைக் கவிதாயினி பா.வானதி வேதாவின் தமிழார்வத்திற்கு என் தலை தாழ்த்தியப் பணிவுகள்! ‘நீராரும் கடலுடுத்த நிலமடந்தை!’ எனும் தமிழ்த்தாயின் வாழ்த்து என் மனதில் நிழலாடியது! என் இனிய நல்வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 12, 2014 @ 12:10:26

   Vetha ELangathilakam:-
   மிக அருமையான கருத்துகள் தந்த கார்த்திகேயன் சிங்காரவேலு (தெரியாததால்)
   யூசுவ்ஃ மொகமட்
   சிவகுமாரி யெ
   காமராஜ் மாரியப்பன் அனைவருக்கும் எனது மகிழ்வையும்
   நன்றியையும் தெரிவிக்கிறேன். ஒவ்வொரு தடவையும் தமிழில்
   எழுத்துப் பிழைகள் வரும் போது மனம் வேதனைப்படுகிறது.
   அதை எழுதிக் காட்டுகிறேன்.

   மறுமொழி

 6. karanthaijayakumar
  ஜூலை 12, 2014 @ 14:15:03

  தங்களின் கைவண்ணத்தில்
  கவிதை அருமை
  சகோதரியாரே

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 25, 2014 @ 07:26:46

   மிக நன்றி ஐயா வந்து கருத்திட்டமைக்கு.
   தட்டிக் கொடுக்கும் தங்கள் பண்பிற்கு தலை வணங்குகிறேன்.
   மகிழ்ந்தேன். இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 7. yarlpavanan
  ஜூலை 12, 2014 @ 17:01:44

  எடுத்தாட்சி வழக்கின் எடுப்பான தமிழே
  எடுத்தெழுதுங்கள் எழுத்துப் பிழையற
  என்றுரைப்போம் அறிஞரே
  என்றும் எம்மவர் நினைவில் கொள்ளட்டும்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 25, 2014 @ 07:53:19

   மிக நன்றி ஐயா வந்து கருத்திட்டமைக்கு.
   தட்டிக் கொடுக்கும் தங்கள் பண்பிற்கு தலை வணங்குகிறேன்.
   மகிழ்ந்தேன். இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 8. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜூலை 12, 2014 @ 18:04:00

  வணக்கம்
  சகோதரி

  அழகிய கவிகண்டு மனம் இன்புற்றேன் பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 25, 2014 @ 07:54:08

   மிக நன்றி Rupan வந்து கருத்திட்டமைக்கு.
   தட்டிக் கொடுக்கும் தங்கள் பண்பிற்கு தலை வணங்குகிறேன்.
   மகிழ்ந்தேன். இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 9. கோவை கவி
  ஜூலை 12, 2014 @ 18:49:28

  Sutha Hari :-
  கொள்ளையின்பக் கொழுந்து விரித்த தமிழ்
  கொள்ளையடிக்கும் பூந்தாது கொழித்த தமிழ்
  கொள்ளுப் பூட்டனிற்கும் மூத்த தமிழ்.
  கொள்முதலில்லாக் கொடை கொற்றத் தமிழ்! —- அருமை தமிழே அழகு..

  சிறீ சிறீஸ்கந்தராஜா:-
  தன்னிகரில்லாத் தமிழே! அமுதின் உயர்வே!
  தன்மானம் காக்கும் தகவுடைத் தமிழே
  முன்னோர்கள் முயன்று வளர்த்திட்ட தமிழே
  முன்னோடித் தமிழின் முன்னேற்றம் உயர்வே!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 25, 2014 @ 07:55:01

   மிக நன்றி Sutha – Sri கருத்திட்டமைக்கு.
   தட்டிக் கொடுக்கும் தங்கள் பண்பிற்கு தலை வணங்குகிறேன்.
   மகிழ்ந்தேன். இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 10. sujatha
  ஜூலை 13, 2014 @ 03:33:52

  இன்பத்தமிழ் கவிநயத்தில் இனிமையாய் தவழ்ந்து நம்மையும்
  கொள்ளை கொள்ள வைக்கின்றது. அழகான சொற்றொடர்கள். அருமை…அருமை வளர்க தமிழ்ப்பணி!!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 25, 2014 @ 07:55:34

   மிக நன்றி sijatha வந்து கருத்திட்டமைக்கு.
   தட்டிக் கொடுக்கும் தங்கள் பண்பிற்கு தலை வணங்குகிறேன்.
   மகிழ்ந்தேன். இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 11. கீதமஞ்சரி
  ஜூலை 13, 2014 @ 11:02:28

  முக்கனிச்சுவையில் தோய்த்தெடுத்த முத்தமிழ்ப்பா! வாசிக்கையில் மனம் இனிக்கிறது. பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 25, 2014 @ 07:56:01

   மிக நன்றி Geetha வந்து கருத்திட்டமைக்கு.
   தட்டிக் கொடுக்கும் தங்கள் பண்பிற்கு தலை வணங்குகிறேன்.
   மகிழ்ந்தேன். இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 12. கோவை கவி
  ஆக 03, 2014 @ 18:00:47

  Ramesh Manivasagam:-
  பொருளாழம் பொன்னின் நிகருடை எழிலே!
  சொல்லாழம் உலகோர் சொக்கும் தரமே! ——-< இலங்காதிலகம் இயம்பும் இணையங் கண்டேன்

  இன்பங் கொண்டேன் ஈடில்லா தமிழ் சுவைத்தேன்

  இன்னும் இன்னும் தமிழெனும் அமுதம் தருவாய்

  இன் இதயங்களை நின் இன்பத்தமிழால் இளக்குவாய்

  வாழ்க நலம்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: