325. பசுமை உலகில் படர்…..

1150716_592120140839988_263894995_o

பசுமை உலகில் படர்…..

பசுமை உலகில் படரன்பு
விசுவாசம், விசுவரூபமசுர சக்தி
அசுவமாயசைந்து உசுப்பு துலகை.
அசுத்த மதில் கலந்திடிலதி துயர்

பசுமை உலகில் படர் துன்பம்
வசுந்தரை வெறுந் தரையாக்கு மபாயம்.
பேசுதலெளிது வாதை விலக்குதல் கடினம்.
மூசும் துன்ப மின்பத்தின் மறுபாகம்.

பசப்பு மனிதர் பசுமை உலகை
கசப்பு நிலைக் கசைப்ப துண்மை
விசப் பூவாகப் பித்தலாட்டம் பொய்மை
தசபாகமும் பரவுதல் மகா கொடுமை.

படர் வாழ்வு துன்பம் தொடர்
இடர் மேடு பகையென வொருவிடர்
சுடரிட வமைத்தலெம் வினைத் தொடர்
அடரிடு மின்பமும் அவரவரூக்கத் தொடர்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
19-7-2014

butterfly- 3

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜூலை 21, 2014 @ 09:36:28

  வணக்கம்

  சிறப்பான கவிகண்டு மகிழ்ந்தேன்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 2. karanthaijayakumar
  ஜூலை 22, 2014 @ 00:34:27

  பசுமை உலகு
  கவி அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 22, 2014 @ 03:27:47

  அருமை சகோதரி…

  மறுமொழி

 4. kowsy
  ஜூலை 23, 2014 @ 11:44:15

  பசுமை உலகில் படரட்டும் அவரவர் ஊக்கத் தொடர். பசுமை உலகில் படர் துன்பம் கண்டு துவளாது தொடரட்டும் ஊக்கத்தொடர். தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை

  மறுமொழி

 5. seeralan
  ஜூலை 23, 2014 @ 18:06:23

  பசுமை உலகும் பயன்கொள்ளும் எம்முள்
  பிசுனன் மடிந்த பிறகு !

  அழகான அர்த்தமுள்ள கவிதை
  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  மறுமொழி

 6. கோவை கவி
  ஆக 04, 2014 @ 19:43:17

  Seeralan சகோதரா அன்பான வரவும், கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்
  இனிய நன்றிகள் உருத்தாகுக

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: