326. விந்தை….

kovai 017

விந்தை….

பகலின் பளிங்கு ஒளியிலும்
பயந்தருமிரவிருட்டிலும்
வியந்திட எழுதுவேன் விரட்டும்
விக்கினவுலக விசனங்களை,
வியக்கும் காதலை, கருணையை.

வியர்வையால் நன் நேரம்
விரயமாக்கி விரிக்கும் என்
வித்தை எழுத்துக்களை விட
விசிறும் எனது புகைப்படங்கள்
விலை கொள்கிறது அதிகமாக.

விலையற்ற அறிவுப் பெறுமதியை
வியர்த்தமாக்கும் மானிட எத்தனமான
விந்தையோ இது! விசித்திரமே!
விநோதமன்றி வேறு எது!
விரிவாயெழுதுவேன்! விவேகமாயெழுதுவேன்!

அறிவை அற்பமாய்க் கருதி
குறி தவறும் மானிடரோ!
சிறியது அறிவென்று சினப்பவரோ!
பறிக்க முடியாச் சொத்தை
வறிதென்று கருதல் அறியாமை!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
23-7-2014

Technique_Tuesday_Stamp_Set_Borderline_Vintage_Lace-4

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  ஜூலை 23, 2014 @ 07:40:24

  ஏனிந்த கோபம் ?யாரோ செய்த தவறை கெட்ட கனவாய் மறந்து ,வளமைப் போல எழுதுங்கள் மேடம் ,ரசிக்க நாங்கள் இருக்கிறோம் !

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 09, 2014 @ 12:16:49

   எழுதுவதை நிறுத்த மாட்டேன்.
   கோபத்தைக் கவிதையெழுதித் தீர்ப்பேன்.
   இது முகநூலில் வந்த கோபம்
   உ´ங்கள் யாரோடும் அல்ல.

   கருத்திற்கு தங்கள் ஆதரவிற்கு நன்றி.

   மறுமொழி

 2. கீதமஞ்சரி
  ஜூலை 23, 2014 @ 08:28:23

  விலையற்ற அறிவுப் பெறுமதியை அடையாளங்கண்டுகொண்டு அனுபவித்து ரசிப்பவர்கள் அநேகம் பேர் இருக்கையில் அறியாதோர் பற்றிய ஆதங்கம் எதற்கு? தொடர்ந்து எழுதுங்கள்… துய்க்கக் காத்திருக்கிறோம் தோழி.

  மறுமொழி

 3. seeralan
  ஜூலை 23, 2014 @ 18:13:36

  ஏற்பார் எவரோஇவ் ஏக்கவரி காட்டுகின்ற
  நூற்போரின் உள்ளே நுழைந்து !

  அழகான அர்த்தமுள்ள கவிதை
  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  மறுமொழி

 4. karanthaijayakumar
  ஜூலை 24, 2014 @ 00:45:53

  ///வியர்வையால் நன் நேரம்
  விரயமாக்கி விரிக்கும் என்
  வித்தை எழுத்துக்களை விட
  விசிறும் எனது புகைப்படங்கள்
  விலை கொள்கிறது அதிகமாக.///
  தங்கள் எழுத்தின் வலிமையறியாதவரைப் பற்றிக் கவலை ஏன்?
  கண்ணிருந்தும் குருடர்களாய் வாழ்பவர் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். அவர்களை விட்டுத் தள்ளுவோம்

  தங்கள் கவியைப் படிக்க நாங்கள் இருக்கிறோம்
  தொடருங்கள் சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 24, 2014 @ 01:25:55

  நம்மைப் பற்றி நாம் அறிந்தால்… உணர்ந்தால் போதும்…

  தொடர்க… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 6. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜூலை 24, 2014 @ 03:32:28

  வணக்கம்
  அற்புதமான கவி வரிகண்டு மகிந்தேன்… பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 7. இளமதி
  ஜூலை 24, 2014 @ 08:27:27

  வணக்கம் சகோதரி!

  ஏற்பவர்களையும் பார்ப்பவர்களையும் எண்ணினால்
  எமது உள்ள உணர்வுகளுள் ஊறும்
  படைப்புகளை நாம் பகிர முடியாது…
  மனச் சோர்வு வேண்டாம் சகோதரி!
  மகிழ்வோடு தொடருங்கள் உங்கள் பதிவுகளை…

  அருமையான கவிதை! வார்த்தைகளின் ஆழம் அளப்பரியது!

  நல விசாரிப்புக்கு மிக்க நன்றி சகோதரி!
  தாங்களும் நலமோடிருக்க வேண்டுகிறேன்.
  அன்பு நன்றியும் வாழ்த்துக்களுடனும்..

  மறுமொழி

 8. sujatha
  ஜூலை 25, 2014 @ 05:17:14

  அறிவை அற்பமாய்க் கருதி
  குறி தவறும் மானிடரோ!
  சிறியது அறிவென்று சினப்பவரோ!
  பறிக்க முடியாச் சொத்தை
  வறிதென்று கருதல் அறியாமை!
  நிறைந்த கருத்து. அருமை..

  மறுமொழி

 9. Rajarajeswari jaghamani
  ஜூலை 25, 2014 @ 09:29:00

  விந்தையோ இது! விசித்திரமே!
  விநோதமன்றி வேறு எது!
  விரிவாயெழுதுவேன்! விவேகமாயெழுதுவேன்

  தன்னம்பிக்கை தெறிக்கும் வரிகள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: