49. அங்கொருத்தியா!

1005506_513913305363503_1577338198_n

அங்கொருத்தியா!

***

சொற்கள் நந்தவனத்தி லிவள்
புற்களில் புரள்வது விரகத்திலா!
கற்பனைச் சொல்லரங்கத்தில் தில்லானா
அற்புத அத்தர் வாசனை!

***

அலைக்கூட்டத் தழகு மொழி
விலையின்றிப் புரளுது கரைசேர
குலைகுலையாய்த் திராட்சை யுருளும்
குளுகுளு காட்சிச் செழுமையது.

***

அவதி யாற்றாமை அழகியலாக
அன்பு அணைப்பு முத்தமாகி
இன்பக் காதல் சுவராகி
அரண் எழுகிறது மொழியாகி.

***

தனை விலக்கியதை யேற்காத
தலைவணங்காத் தன்மை
தொலையாக் காதலாய்க் கரைபுளுது.
அலையுமவன் மனதில் அங்கொருத்தியா!

***

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
24-7-2014

 

Divider_Pink_Heart_001

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  ஜூலை 25, 2014 @ 17:26:44

  அழகாய் வடித்தீர்கள் கவிதையை ,எங்கே பிடித்தீர்கள் அழகான ஓவியத்தை ?

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 25, 2014 @ 18:26:22

   எங்கே நல்ல படம் வந்தாலும் உடனே பதுக்கிடுவேன்.
   தேவைக்குப் பாவிப்பேன்.
   எனக்கே நினைவில்லை எங்கு எடுத்ததென்று.
   சில 3-4 வருடத்திற்கு முன் எடுத்ததாகவும் இருக்கும்.
   கருத்திடலிற்கு மிக்க நன்றி சகோதரா.
   மனமகிழ்ந்தேன் தங்கள் தட்டிக் கொடுப்பிற்கு.

   மறுமொழி

 2. சீராளன்
  ஜூலை 27, 2014 @ 16:20:16

  இரந்தும் இணையா திரவைத் தொலைக்கும்
  விரகத்தீ உண்ட விழி !

  படத்திற்கு ஏற்ற கவிதை அழகு !
  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  ஆக 09, 2014 @ 14:10:32

  நந்தவனமாய் திகழும் அழகிய கவிதை..பாராட்டுக்கள்.!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: