14. திருவாளர் சண்முகநாதன்(சண்)முருகேசுவின் ஆத்ம அஞ்சலி

10458552_10154452658280451_6595503953298129569_n

திருவாளர் சண்முகநாதன்(சண்)முருகேசுவின் ஆத்ம அஞ்சலி

தோற்றம்:- 16-3-1950 மறைவு:- 21-7-2014

உறங்குவது போலும் சாக்காடு
உணர்ந்து கூறினார் திருவள்ளுவர்
சண்டிலிப்பாய் சண்முகநாதன் முருகேசுவும்
மண்ணிலே துணைவி சிவனேஸ்வரி(மலர்)
மக்கள் சனுசா, நிருசா, டெனிசன்
பக்கமின்றி உயிர் பறவை
அக்கரை சென்றது ஆறாத் துயர்.
இக்கரையில் நாம் கண்ணீருடன்.

அப்பாவெனும் பேராதரவு பெரும் இழப்பு.
எப்போ இனிக் காண்போம் உங்களை!
அரிய உயிர்த்துணை கணவன் இழப்பு
எரியும் மனம் ஆற்றுவார் யார்!
உரிமையாய் உறவாடிய உடன் பிறப்புகள்,
உறவுகள், உற்ற நண்பர்கள் யாவரும்
மறக்க முடியாது மனம் கலங்குகிறோம்.
சிறந்த உங்கள் உறவு மறைந்ததே!

நீர்வேலி, கோசன்ஸ் இனிய வாழ்வு
நீளாது குறுகியதே வேதனையோடு.
பாசமான நற்பண்பாளனே அழகுருவே!
நேசமான ‘சண்’ என்ற பெயர்
நினைவாக மட்டும்! – உயிர்க்கூடு
அக்கினிக்குச் சமர்ப்பணமாக நாம்
விக்கித்து நிற்கிறோம் புலம்பலுடன்!
விடைதருகிறோம் உங்களாத்துமா சாந்தியடையட்டும்!

சாந்தி!…..சாந்தி!……..சாந்தி!

அஞ்சலிப்போர்
மனைவி பிள்ளைகள், உற்றார் உறவினர் நண்பர்கள்
கோசன்ஸ். 28-7-2014

Written by me.(Vetha)

anjali-2

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோமதி அரசு
  ஜூலை 30, 2014 @ 07:01:35

  திருவாளர் சண்முகநாதன் அவர்களுக்கு எங்களின் அஞ்சலிகளும்.
  அவரை பிரிந்து வாடும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

  மறுமொழி

 2. kowsy
  ஜூலை 30, 2014 @ 07:47:40

  ஆழ்ந்த அனுதாபங்கள்

  மறுமொழி

 3. karanthaijayakumar
  ஜூலை 30, 2014 @ 14:30:46

  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: