323. ஆட்டம், தேட்டம் – ஒருநோட்டம்.

 

Classic-Style-2zxDa-280Li-print

ஆட்டம், தேட்டம் – ஒருநோட்டம்.

 

ஆட்டம் ஆட்டம் அடங்கும் வாழ்வில்
ஓட்டம் ஓட்டம் மரண ஓட்டம்
தேட்டம் என்று தேடிக் கொண்டால்
திட்டம் போட்டு வட்டம் சேர்ப்பார்.
பட்டம் வேண்டாம் பட்டயம் வேண்டாம்
சட்டம் கூட பட்டுப் போகும்.

 

மொட்ட விழ்ந்த வட்டப் பூவை
கிட்டச் சென்று பட்டாம் பூச்சி
நோட்ட மிட்டு எட்டுதல் போல்
நாட்டமுடனெட்டுத் திசையில் வாட்டமின்றி
ஈட்டம் செய்வார் – நோட்டுக்
கட்டை பெட்டகத்தில் பூட்டுவார்.

 

எட்டப் போகும் நல் கட்டுப்பாடு.
கட்டம் போட்டுக் காய்கள் ஆடும்.
திட்டமாய் மதுப் புட்டியும் சேரும்.
ஆட்டம் பாட்டும் அமர்களமாகும்.
பட்டப் பகலிலும் விட்டில் பூச்சியாய்
மட்டமாக மதுப் புட்டம் கொள்வார்.

 

(புட்டம் – மனநிறைவு)

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
20-9-1999.

 

butterfly...

72. கவிதை பாருங்கள்(photo,poem)

37094_342163842566081_1348306582_n

உயர்வென்று எண்ணுவது
உயர் நிலை இழக்கும்.
அயர்வென்று எண்ணுவது
நயர் செயலன்று.
மயர் விலக்கு!
வியரற்ற முயற்சி
வியர்த்தம் தொலைக்கும்
துயர் கலைக்கும்!
– வேதா-

உலகில் எல்லாமே மாறும் தன்மையுடைத்து.
உறவுகளும் அதே போன்று. இன்று உயர்வென்று எண்ணுவது
அவர்களின் கீழான செயல்களால் உயர் நிலை இழக்கும்.
இதை சோர்வாக எடுக்காது நாம் நம் பாதையில்
செல்லலே அறிவுடைமை. செல்லும் பாதையில் நம் சோர்வற்ற முயற்சி
பயனுடை நிலையடையும். துன்பத்தை அழிக்கும்.
தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து செல்லலே வாழ்வின்
தகைமையுடை செயலாகும். அனுபவப் பாறையில் மோதி
தெறிக்கும் முத்துக்கள் இவை.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-7-2014

bordertrans

21. நாட்டியப் பேரொளி பத்மினி.

312847_243304089052929_124832310900108_630202_1083883452_n

(இது எனது 1000 வது பதிவு.)

நாட்டியப் பேரொளி பத்மினி.

சேரநாடாம் கேரளப் பதியின் திருவானந்தபுரத்தின்
ஆரணங்கு அரச பரம்பரையில் உதித்தாள்.
பேரளந்த கோகினூர் வைரம் இவள்.
ஆரத்தினாள் நாட்டியக் கலையை வாழ்நாளில்.
காரணன் தங்கப்பன் பிள்ளை தந்தையார்.
தாரம் இலட்சுமி அம்மையார் தாயார்.
தாரகைச் செல்வம் மழலை பத்மினியை,
பரதப் புதையலை தாராட்டினார் 6-2-1932ல்.

நாட்டியம் நான்கு வயதில் பயிற்சியாம்.
ஊட்டம் கதகளி வரிசையில் ஆரம்பம்.
ஆட்டம் அரங்கேற்றம் பத்தாம் வயதிலாம்.
கூட்டாகச் சகோதரியரோடு அரங்குகள் ஏறினர்.
நாட்டியப் பேரொளி என்று விரிந்தார்.
பெருமையுடன் பிறப்புகள் லலிதா, ராகினியார்
‘ திருவாங்கூர் சகோதரிகள் ‘ பெயரை ஆண்டனர்.
பெரும் தகவு எல்லையறு நடனத்தில் பெற்றனர்.

பருவம் பதினாறில் இந்திப்பட இசைவு.
திருவுடை நடனத்தால் கல்பனாவில் நுழைவு.
ஒருமித்து இந்தியில் இருபத்தைந்து நிறைவு.
வேதாளஉலகம் பாம்பாட்டி நடன வளைவு
வேள்வியாய்த் தமிழ் முதற்பட நுழைவு (1948ல்.)
மணமகள் தமிழ் நடிப்பில் முதலானது (1951ல்.)
பணம் சிவாஜியுடன் கதாநாயகி யாக்கியது (1952ல்.)
மணம் வீசியது சிவாஜியிணைந்த 59 படங்கள்.

நூற்றைம்பது படங்களில் நடனத் தோகையை
நளினமாய் விரித்தார் நர்த்தக நூன்மடந்தை.
தமிழ், மலையாளம், இந்தி கன்னடம்
தெலுங்காம் ஐம்மொழிப் படங்கள் 250 பூரணம்.
அலுக்காது நடித்தார் பரதக்கலை பர்வதம்.
இந்தி-ரஷ்யமொழி பரதேசியிலும் நடித்தார்.
இவருருவின் முத்திரையை சோவியத் அரசார்
பெருமையாக வெளியாக்கி கௌரவம் கொடுத்தார்.

பத்மினியின் செல்லப் பெயர் பப்பிம்மா.
உத்தமபுத்திரன் இவருக்கொரு மகன் பிரேமானந்.
பாட்டிம்மா, வெள்ளையம்மா, பார்த்தால் ராணி
சம்யுக்தா தான். பரதப் பேரொளியின்
சம்பூரண நடனம், கற்சிலை உயிர்ச்சிலையாகும்
”மன்னவன் வந்தானடி ” திருவருட் செல்வரில்.
தில்லானா மோகனாங்கி 1961-5-25ல்
கல்யாணம் புரிந்தார் வைத்தியர் இராமசந்திரனை.

பேரழகி முத்திலகங்களுடனும் நடித்தார் இணைந்து.
சிறந்த நடிகை விருது 4முறையானது. (1954-59-61-66)
1958 தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது.
1985ல் பூவேபூச்சூடவா பிலிம் பெயர் விருது.
1970ல்அமெரிக்க நியூயெர்சி வாழ்வானது.
பரதத்தைத் தேங்கவிடாது கங்கையாய்ப் பெருக்கியது
1974ல் நியூயெர்சியில் நடனப் பள்ளியாரம்பமானது.
1981ல் மங்கையர் திலகம் இராமச்சந்திரன் மறைவு.

பரதக்கலை பர்வதம் பத்மினியின் ஆடல்
பன்னாட்டுத் தமிழ்நடுவ விழாவில் 72 வயதில்.
பாடல் திருமதி சுதா ரகுநாதனாகிப்
பதிவானது நியூயோர்க்கில் 2003ல் இறுதி.
வியக்கும் மொழி ஆளுமை நர்த்தகி.
மயக்கும் பரத ஆளுமை வித்தகி.
தயக்கமற்ற நிரூபணம் வஞ்சிக்கோட்டை வாலிபன்.
” கண்ணும் கண்ணும் கலந்து ” வைஜைந்தியுடனாடல்.

அரசிளங்குமரியின் நினைவின்று வியட்நாம் வீடு
மீண்ட சொர்க்கமான தேனும் பாலுமே.
இமயமளவான பரதக் கலாப மயில்
அரசகுமாரியுருவான அழகு மயில் தங்கப்பதுமை.
மாதவப் பெண் மயிலாள் 24-9-2006ல்
அமரதீபமானார். என்மனதிலிவர் ஆடற் காவேரி.
இன்னொரு பத்மினியாக இன்று சோபனா.
பரதத் தலைமுறை தொடரட்டும் தொடரட்டும்.

(ஆரத்தி – தீபஆராதனை. தாராட்டினார் – தாலாட்டுதல்.
தாரகைச் செல்வம் – கண்மணிச் செல்வம்.
நூன் மடந்தை – கலைமகள். இசைவு – இணக்கம்.)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22-6-2014.
(இலண்டனுக்கு தொண்ணூறுகளில்  நாட்டியப் பேரொளி பத்மினி  ஓரு நடன அரங்கேற்றத்திற்கு வந்த போது எமது மகள் இலண்டன் தமிழ்வானோலி அறிவிப்பாளராகப் பணி புரிந்த போது எடுத்த பேட்டியின் போது எடுக்கப்பட்ட படம் இது.) 188847_10200228612615190_2097902116_n

 

13346564_1867964049896585_4531687876141509918_n

 

திருவாங்கூர் சகோதரிகள் (லலிதா-பத்மினி- ராகினி)

நாட்டியப் பேரொளியுடனான நேர்காணல் 1: http://youtu.be/Rh1TaM09hdw
2: http://youtu.be/sbzd0XwWqDA

p – sep-14

wordpress-2
16161859-vector-set-of-vintage-calligraphic-ornaments

Next Newer Entries