50. வருவானா ராமன்!…..

P6020059
(ஓவியம்:- இணையத் தோழி சகோதரி மனோ சாமிநாதன் வரைந்தது.)

வருவானா ராமன்!…..

ஒரு வசந்தம் தேட
ஒருத்திக்கு ஒருவனாகயிவள்
ஒரு மனப்பாடமைந்த
ஒரு ராமனைத் தேடுகிறாள்.

பெருவெளிப் பிரபஞ்சத்திலிவள்
இருளுலகம் காணுமொரு
திருமண வாழ்வு தவிர்க்க
ஒரு ராமனைத் தேடுகிறாள்.

அரும்பும் பொழுதிலென்னையும்
கருகும் பொழுதிலின்னொருவளையும்
இருக்கை கொண்டவனல்லாத
ஒரு ராமனைத் தேடுகிறாள்.

ஒருமைப் பாடுடைய உண்மைக்
கருத்தாளி, கருணன், கிரகபதியை
தருணனாம் திருமகனை உருத்தாக்க
வீர ராமனைத் தேடுகிறாள்.

கையல்ல இதயம் பற்றும்
வையகம் மெச்சும் கைகாரனாகத்
தைரியமாய் மீசை முறுக்கும்
வைரக்காதல் ராமனைத் தேடுகிறாள்.

(இருக்கை –குடியிருப்பு. ஒருமைப்பாடு – ஒற்றுமையுணர்வுடைய
கருத்தாளி – அறிவாளி. கருணன் – அருளுடையவன்.
கிருகபதி – வீட்டுத்தலைவன். தருணன் – இளைஞன்.)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

imagesCADKKMCK

Advertisements

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  ஆக 03, 2014 @ 01:48:11

  அருமை சகோதரியாரே
  சகோதரி மனோ சாமிநாதன் அவர்கள் வரைந்த ஓவியம் அருமை

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 09, 2014 @ 13:59:46

   என்றோ சகோதரியார் பதிவிட்ட ஓவியம் பதுக்கி வைத்திருந்து பாவித்தேன்.
   தங்கள் கருத்திடலிற்கு மிக மிக நன்றியும் மகிழ்வும்.

   மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  ஆக 03, 2014 @ 04:08:28

  ஓவியமும் பகிர்வும் வசந்தமாய் கவர்கிறது,,பாராட்டுகள்.!

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 09, 2014 @ 14:00:08

   என்றோ சகோதரியார் பதிவிட்ட ஓவியம் பதுக்கி வைத்திருந்து பாவித்தேன்.
   தங்கள் கருத்திடலிற்கு மிக மிக நன்றியும் மகிழ்வும்.

   மறுமொழி

 3. Bagawanjee KA
  ஆக 03, 2014 @ 05:32:41

  இந்த சீதைக்கேற்ற இராமன் கிடைப்பான் என்று வாழ்த்துகிறேன் !

  மறுமொழி

 4. T.N.MURALIDHAAN
  ஆக 04, 2014 @ 13:42:14

  ராமனைத் தேடும் கவிதை அருமை
  ஓவியமும் மிக அழகு

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 09, 2014 @ 14:01:11

   என்றோ சகோதரியார் பதிவிட்ட ஓவியம் பதுக்கி வைத்திருந்து பாவித்தேன்.
   தங்கள் கருத்திடலிற்கு மிக மிக நன்றியும் மகிழ்வும்.

   மறுமொழி

 5. சரவண பாரதி
  ஆக 04, 2014 @ 15:11:26

  நல்வரவாகட்டும் அந்த காதல் ராமனின் வருகை !
  நன்று !
  இனியதோர் காத்திருப்பு
  உயர்த்தேன்தமிழில் !!
  உயிர்த்தேன்தமிழில் !!

  மறுமொழி

 6. கோவை கவி
  ஆக 05, 2014 @ 06:34:11

  Ratha Mariyaratnam:-
  அருமையான வரிகள் சகோதரி வேதா….ராமனைத் தேடி எங்கு செல்வது

  மறுமொழி

 7. கோவை கவி
  ஆக 05, 2014 @ 14:37:20

  சிவரமணி கவி கவிச்சுடர்:-
  சீதா தேவி இராமனைத்தேடி இரு விழி வாசல் திறந்து வைத்தாள். ராமன் வருவான் மயங்கிடுவாள் அருமை.

  மறுமொழி

 8. Mrs.Mano Saminathan
  ஆக 09, 2014 @ 13:12:43

  /அரும்பும் பொழுதிலென்னையும்
  கருகும் பொழுதிலின்னொருவளையும்
  இருக்கை கொண்டவனல்லாத
  ஒரு ராமனைத் தேடுகிறாள்./

  அருமையான வரிகள்!
  கவிதைக்குப் பொருந்த என் ஓவியத்தை இங்கே தேர்வு செய்திருப்பதற்கு அன்பு நன்றி வேதா!!

  மறுமொழி

 9. கோவை கவி
  ஆக 09, 2014 @ 14:04:10

  தங்கள் கருத்திடலிற்கு மிக மிக நன்றியும் மகிழ்வும்…sis.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: