327. நட்பு வாழ்க!

imagesCADSX4DM

நட்பு வாழ்க!

விரும்பி மனதில் தளிர்க்கும்
அருத்தமுடன் துளிர்க்கும் நட்பு.
அருட்சோதியாய் ஒளி தரும்.
கருத்தோடு அந்தமின்றி நீளும்.

நினைக்கும் தோறும் இனிக்கும்
நீங்குதலற்ற நிறையுறவு இது.
நல்லவை கெட்டவை அளவோடு
நவிலுதல் நன்மை நல்கும்.

வட்டமிட்டு வட்டமிட்டு நாளும்
ஒட்டியுறவாடும் தருணம் மனதால்
கொட்டும் கருத்து நிறைந்து
கேட்டுக் கோணலாவார் சிலர்.

சட்டென்று நானே விரும்பிக்
கேட்டதும் மனமுவந்து அன்பால்
இட்டமுடன் இசைந்துதவியதை
திட்டினும் மறவேன் மறவேன்.

மாணவனாய் நான், ஆசிரியனாய்
மாருதியாய் மகிழ்துதவினாய்
மாபெரும் சபையிலு மிந்த
மனிதநேய உதவியை மொழிவேன்.

மறக்கேன் என்றும் நண்பா
மறக்கேன் மறக்கேன் நன்றியை.
சிறப்பு உன்னாலுமே நீயும்
சிறக்க வாழ்ந்திடு என்றும்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-8-2014

நட்பு. 6-6-2010

இன்பத்தில் இணைந்து
இரசிப்பவரை விட
இன்னலுக்கு இதமானவரை
துன்பத்தில் துணையாகும்
துணிவுடையோரை நட்பாக்கு.
துடிப்புடன் துவாலையாவார்.
துடுப்பாக இருந்து
துருவித் துருவித்
துன்பத்தைக் குறைத்திடுவார்.

Vetha. Langathilakam.

imagesCAPD2LKB

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோமதி அரசு
  ஆக 06, 2014 @ 01:47:17

  நினைக்கும் தோறும் இனிக்கும்
  நீங்குதலற்ற நிறையுறவு இது.
  நல்லவை கெட்டவை அளவோடு
  நவிலுதல் நன்மை நல்கும்.//

  நட்பு கவிதை அருமை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  ஆக 06, 2014 @ 03:08:37

  நினைக்கும் தோறும் இனிக்கும்
  நீங்குதலற்ற நிறையுறவு இது.
  நல்லவை கெட்டவை அளவோடு
  நவிலுதல் நன்மை நல்கும்

  அழகான நட்பு .. வாழ்த்துகள்..!

  மறுமொழி

 3. கீதமஞ்சரி
  ஆக 06, 2014 @ 08:35:47

  நட்பின் ஆழத்தை… நேசக்கரங்களின் பலத்தை… அன்பின் வரையறையை அழகாய்ப் புலப்படுத்துகின்றன வரிகள். பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 4. karanthaijayakumar
  ஆக 06, 2014 @ 14:21:50

  நட்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

  மறுமொழி

 5. Bagawanjee KA
  ஆக 06, 2014 @ 15:47:43

  தங்கள் நட்பின் இலக்கணம் அருமை !

  மறுமொழி

 6. sujatha anton
  ஆக 07, 2014 @ 19:55:03

  நல்ல நட்புள்ளங்கள் என்றும் நெஞ்சில் பசுமையானது. அதிலும் நிறைந்த மனம், பாசப்பிணைப்பு, தங்களின் கவித்துவம் மேலும் புரியவைக்கின்றது.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: