15. சவர்க்காரக் குமிழிகள்….

mine3 083

சவர்க்காரக் குமிழிகள்….

சவர்க்காரக் கரைசல் குப்பி
சமர்த்தாகக் கையிலேந்தியொரு
சின்னச் சிரிப்போடு பேரனார்
சின்ன அடியெடுத்து வருகிறார்.

அப்பப்பா அப்பம்மா உதவுங்கள்
அமைதியாயெம்மிடம் நீட்டுகிறார்.
சொல்லாமற் சொல்லும் ஆசை
சோப்புக் குமிழி ஊதுங்களென்று.

(அப்பப்பா ஊதுகிறார்…)

ஆரவாரக் கைதட்டல் ரசிப்பு
ஆகா என்ன ஆனந்தம்!
ஆனந்தக் கூத்தாடுகிறார் சவர்க்காரக்
குமிழிகளைத் தட்டியூதி உடைத்தார்…
10-8-2014
mine3 084

mine3 090

1653344_615174351888104_825373005_n

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. iniya
  ஆக 10, 2014 @ 22:02:14

  இனிமையான அருமையான தருணம் தோழி. ஆஹா இப்போ புரிகிறது அம்மையார் எவ்வளவு busy என்று ஹா ஹா மகிழ்ச்சி பொழுதுகளை நன்றக அனுபவிக்க என் வாழ்த்துக்கள் தோழி …..!

  மறுமொழி

 2. தி தமிழ் இளங்கோ
  ஆக 10, 2014 @ 23:52:49

  சவர்க்காரம் (சவுக்காரம்) – இந்த சொல்லை உங்கள் கவிதையில் கண்டவுடன் மிக்க மகிழ்ச்சி. சின்ன வயதில் கிராமத்தில் கேட்டது. இப்போது அதனை விட்டுவிட்டு, எல்லோரும் ” சோப்பு “ என்றே சொல்கிறார்கள். பேரப் பிள்ளைகளோடு விளையாடும் போது உண்டான உள்ள மகிழ்வும், குமிழிகளைக் கண்டவுடன் குழந்தையாய் மாறிய உள்ளக் கிளர்ச்சியும் கவிதை வரிகளாய் மலர்ந்துள்ளன. வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 3. Bagawanjee KA
  ஆக 11, 2014 @ 02:39:30

  தாத்தா பேரன் விளையாட்டில் பாட்டியின் மகிழ்ச்சியை கவிதையில் கண்டேன் !

  மறுமொழி

 4. Rajarajeswari jaghamani
  ஆக 11, 2014 @ 02:53:43

  ஆரவாரக் கைதட்டல் ரசிப்பு
  ஆகா என்ன ஆனந்தம்

  மகிழ்ச்சியின் ஆரவாரம்..!

  மறுமொழி

 5. தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
  ஆக 11, 2014 @ 08:36:48

  ‘சவுக்காரம்’ என் சிறு வயதில் கேட்டிருக்கிறேன்.. பேரனோடு விளையாடும் இனிய தருணங்கள் கவியாகின்றனவா? அருமை! வாழ்த்துக்கள் சகோதரி..

  மறுமொழி

 6. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஆக 11, 2014 @ 10:14:56

  வணக்கம்
  குழந்தையின் மகிழ்ச்சியில் பிறந்த கவிகண்டு மகிழ்ந்தேன்நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 7. Dhavappudhalvan
  ஆக 11, 2014 @ 16:43:13

  ஆகா என்ன ஆனந்தம்

  மறுமொழி

 8. கோவை கவி
  ஆக 11, 2014 @ 20:57:57

  சவர்க்காரக் குமிழிகள்….

  சவர்க்காரக் கரைசலை
  குப்பியதில் கையிலேந்தி,
  சந்தோச நிலையுடன்
  மென்னடையிட்ட பேரனார்
  அருகில் வந்தார் குமிழெழுப்ப.

  அப்பப்பா கையிலேந்தி
  குமிழ்களிட்டார் நிறைவாக.
  சவர்க்காரக் கரைசலோ
  குமிழ்களாய் மேலெழும்ப,

  ஆனந்தத்தில் பேரனார்
  கைக்கொட்டி குமிழுடைக்க,
  ஆர்பரித்த குடும்பமது
  அமிழ்ந்ததே மகிழ்விலே

  ‪#‎கவியரசி‬ வேதா இலங்கதிலகம் அவர்கள் ” வேதா வலை” எனும் வலைதளத்தில் வெளியிட்டுள்ள , ” சவர்க்காரக் குமிழிகள்….”
  என்ற கவிதையை, அவர் கைப்பிடித்து நடக்க முயன்றிருக்கிறேன் எம் நடையில்.

  ‪#‎நன்றியம்மா‬. அருமையான தலைப்பில், நிகழ்வான தகவலை உணர்வோடு வடித்தமைக்கும், அனுமதி அளித்தமைக்கும்.

  Dhavappudhalvan Badrinarayanan A M likes this..

  Vetha ELangathilakam:-
  இதை அப்படியே எடுத்து எனது வலையிலேயே கீழே ஒட்டுகிறேன்;.
  ஆயினும் 5-6 பேர் கருத்திட்டுவிட்டனர். இடாதவர்கள் பார்ப்பார்கள் எனும் நம்பிக்கையில்.
  மிக்க நன்றி தங்கள் ஆர்வத்திற்கு.
  மகிழ்ச்சி.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: