330. புற்றுநோயெனும்…….

anti-cancer-superfurits

புற்றுநோயெனும்…….

கற்றுணர்தவனை கல்லாதவனையும்
புற்றுநோயெனும் ஆட்கொல்லி நோய்
இற்றுப் போதலாய் வாழ்வின்
பற்றறுத்துப் பயமுறுத்தி வாட்டும்.
உற்ற உறவுகளின் கண்ணீர்
வற்றக் கலக்கிக் குளப்பும்.

அழுகிய வெங்காயம் அரிதலாய்
பழுதுடை பகுதிகள் அரியவரிய
தொழுது தொழுதுறவுகள் உயிர்
விழுது நிலைத்திடப் போராட்டம்.
அழுந்தும் வாழ்வெனு முண்மை
அழுத்திப் பதித்தால் ஆசையறும்.

பற்றற்ற வாழ்வையொரு மனசு
ஏற்றால் வாழ்வு சுகமாகும்.
ஆழ்ந்து ஊறி ஆசைகளில்
வீழ்ந்து புரண்டு தாழ்ந்து
தாழ்ப்பாளிட்டு முற்றாக மறக்கிறோம்
வாழ்வு சத்தியமான அநித்தியமென்று.

சொல்லாமல் நெருங்கும் துன்பம்
பொல்லாப் பயங்கர நோய்
அல்லல் தந்து அலைக்கழிக்கும்
வெல்ல முடியா மரணபயம்.
இல்லாதவனிற்கு இல்லாத துன்பம்
உள்ளோனிற்குப் பெருநோயே துன்பம்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
10-8-2014

T – 9.9.2014.

divisor_manos

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  ஆக 21, 2014 @ 00:27:55

  ///பற்றற்ற வாழ்வையொரு மனசு
  ஏற்றால் வாழ்வு சுகமாகும்.///
  நன்று சொன்னீர்கள் சகோதரியாரே
  அருமை

  மறுமொழி

 2. iniya
  ஆக 22, 2014 @ 04:35:15

  சொல்லாமல் நெருங்கும் துன்பம்
  பொல்லாப் பயங்கர நோய்
  அல்லல் தந்து அலைக்கழிக்கும்
  வெல்ல முடியா மரணபயம்.
  இல்லாதவனிற்கு இல்லாத துன்பம்
  உள்ளோனிற்குப் பெருநோயே துன்பம்.
  உண்மை உண்மை! எவளவு அழகாக எடுத்துரைத்தீர்கள் கவியில்
  படங்களும் பெயர்களும் இட்டு நன்றி வாழ்த்துக்கள் ….!

  மறுமொழி

 3. yarlpavanan
  ஆக 24, 2014 @ 13:01:15

  புற்றுநோயெனும் ஆட்கொல்லி நோய்
  வாட்டும் விரிப்பையே
  பாடுபொருளாகக் கொண்ட
  பாவினிலே சுட்டும் பொருள்
  பயனுள்ள தகவல்!

  மறுமொழி

 4. சீராளன்
  ஆக 25, 2014 @ 12:24:34

  விதியெனும் கோட்டில் விளையும் வலியை
  மதியால் அறுத்தல் மருந்து !

  அழகான அர்த்தமுள்ள வரிகள் ஆழ்ந்து நோக்கியே விடைகளைக் கண்டேன் அருமை அருமை

  வாழ்க வளமுடன் !

  மறுமொழி

 5. ஊமைக்கனவுகள்
  ஆக 25, 2014 @ 14:17:48

  நிச்சயமாய்,
  அது உற்றோருக்கு அளிக்கும் துயரைவிடச் சுற்றியுள்ள உறவுகளுக்கு அளிக்கும் துயர் மிகக்கொடுமையானது.
  எனது கவியீர்ப்பு மையம் எனும் பதிவு அதுகுறித்ததே!
  தங்கள் பதிவு விதையாய் வேர்முகிழ்த்து நெஞ்சிறங்குகிறது.
  அனுபவம் தொடும் படைப்பு வெற்றிபெறும் என்பதற்கு தங்களின் இந்தப் பதிவைச் சான்று காட்டுவேன்.
  நன்றி நண்பரே!

  மறுமொழி

 6. தி.தமிழ் இளங்கோ
  ஆக 27, 2014 @ 02:59:04

  சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களுக்கு வணக்கம்! நீங்கள் எழுதிய புற்றுநோய் பற்றிய இந்த கவிதையை (பதிவை) வெளியிட்ட அப்பொழுதே காலையிலேயே படித்து விட்டேன். புற்று நோயால் இறந்த எங்கள் உறவினர்கள் பற்றிய நினைவு வந்து மனதில் வந்து நிழலாடியது. எனவே கருத்துரை எழுத இயலாமல் போய்விட்டது.

  மறுமொழி

 7. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஆக 30, 2014 @ 00:50:00

  வணக்கம்

  மனதை விட்டு நீங்காத வரிகள்.. அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: