32. மொழி.

big_conch2-kl

மொழி.

மொழியொரு சமூகக் கருவி.
வாய்மொழிப் பாடல் பழமொழிகளென
படங்கு விரிப்பு ஏராளம்.
சடங்குப் பாடல்கள் பண்பாட்டின்
தடங்களில்லா அற்புதக் கையளிப்பு.

வாடலற்ற மொழியின் அழகியல்
ஆடல், நாடகம், இலக்கியம்
பாடல், பண்பாடு, அறிவு,
ஆன்மீகம், அனுபவ அலசல்கள்.
ஆதனம் தேசியம் கட்டியெழுப்ப.

தேசிய வரலாற்றுத் தொடர்பு
தேசிய முன்னேற்றம் உருவாக்கும்
ஆசி நிறைந்தது மொழி.
ஓசைகளினொரு வடிவம் மொழி
கருத்துப் பரிமாற்றச் சாதனம்.

உணர்வு சிந்தனைப் பரிமாற்ற
உருவிற்கு மொழி பாலம்.
நாகரிக நாகர்வின் கடையாணி.
சேகரிக்கவும் பண்பாட்டை அழிக்கவும்
மீகாமனாவது மொழிச் செங்கோல்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
29-8-2014.

T  23.9.2014.

green line-2

17 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஆக 29, 2014 @ 08:08:53

  Mani Kandan :_
  மீச்சிறப்பு.. வணக்கம்

  Vetha ELangathilakam :-
  mikka nanry sakothara……லைக் போடுமுலகில் வரி தருவது கொடை. நன்றி…நன்றி…..

  மறுமொழி

 2. kowsy2010
  ஆக 29, 2014 @ 09:08:54

  அதனாலேயே மொழியின் மனித இனம் முன்னேற்றம் காண்கிறது. வாழ்க தமிழ்

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  ஆக 29, 2014 @ 10:04:39

  அச்சாணியான தமிழ் பற்றி
  இச்சையாய் அழகுக்கவிதை..!

  இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 4. இளமதி
  ஆக 29, 2014 @ 10:06:00

  மொழியிலா விட்டால் முகமிழந்தோ மன்றோ!
  வழிசொன்னீர் வாழ்த்தினேன் வந்து!

  அருமை! வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 5. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஆக 30, 2014 @ 00:45:25

  வணக்கம்
  சகோதரி
  செப்பிய வரிகள் கண்டு மகிழ்நதேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 6. karanthaijayakumar
  ஆக 30, 2014 @ 01:47:03

  மொழி நமது பண்பாட்டின் அடையாளம்
  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 7. Bagawanjee KA
  ஆக 30, 2014 @ 03:33:20

  விழியைக் காப்பதுபோல் மொழியைக் காப்பது நம் கடமையாச்சே !

  மறுமொழி

 8. sujatha
  ஆக 31, 2014 @ 06:56:30

  தமிழிற்கு அழகு கொடுத்த கவிநயம். அருமை.
  உணர்வு சிந்தனைப் பரிமாற்ற
  உருவிற்கு மொழி பாலம்.
  நாகரிக நாகர்வின் கடையாணி.
  சேகரிக்கவும் பண்பாட்டை அழிக்கவும்
  மீகாமனாவது மொழிச் செங்கோல்.

  மறுமொழி

 9. கோவை கவி
  செப் 01, 2014 @ 18:35:07

  You, யதார்த்தவாதி விஸ்வாமித்ரர், Sivakumary Jeyasimman, Paramasivam Ponnampalam and 7 others like this.

  சிறீ சிறீஸ்கந்தராஜா:_
  வாடலற்ற மொழியின் அழகியல்
  ஆடல், நாடகம், இலக்கியம்
  பாடல், பண்பாடு, அறிவு,
  ஆன்மீகம், அனுபவ அலசல்கள்.
  ஆதனம் தேசியம் கட்டியெழுப்ப.

  Sivakumary Jeyasimman :_
  மொழியொரு சமூகக் கருவி.
  வாய்மொழிப் பாடல் பழமொழிகளென
  படங்கு விரிப்பு ஏராளம்.
  சடங்குப் பாடல்கள் பண்பாட்டின்
  தடங்களில்லா அற்புதக் கையளிப்பு.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: