331. இது உனக்கு மட்டுமல்ல

148700_10202517447566652_3348039103144023209_n-words

இது உனக்கு மட்டுமல்ல

பொதுமைச் சொத்து உலகில்
மதுரமாக ஏராளம் ஏராளம்
மதுவமாம் மதுரசத் தமிழ்
மதுகைப் புயலாகும் திறமை
ஒதுக்காத அரும் முயற்சி
முதுமை வழமைக் கனி.

பதுக்க முடியாது உனக்கென்று
புதுமை! இதை மறந்தால்
கேதுவாய்ச் சுற்றும் கருவம்
முதுகாட்டு மனம் இதை
மெதுவாகவும் ஏற்காது! வதை!
ததும்பும் அறிவுள்ளமிதை மகிழ்ந்தேற்கும்.

(மதுரம் -இனிமையாக. மதுவம் -தேன், கள். மதுரசம் – கரும்பு, சாராயம் இன்னும் பல. மதுகை – அறிவு, வலிமை. முதுகாட்டு – பழங்காடு, சுடுகாடு.)

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
30-8-2014

 

தமிழ் என்றால், திறமை என்றால் சிலர் நினைக்கிறார்கள் அது தங்களிற்கு மட்டும் தான் சொந்தமென்று.
ஏதோ மற்றவர்கள் எல்லாம் தங்கள் கால் தூசி என்கிற மாதிரி சிந்திக்கிறார்கள்.
தங்களிற்குத் தான் எல்லாம் தெரியும் , தங்களால் தான் எல்லாம் முடியுமென்று ஒரு நினைவு.
அது பொய்யான எண்ணம்! மாயை!.
நிறையத் திறமைசாலிகள் உலகம் முழுதும் நிறைந்துள்ளனர்.
அதை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு வரும் திறமைசாலிகளே ஒவ்வோரு வகையில் என்பதை மறத்தல் அழகல்ல.

 

u.line

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  ஆக 31, 2014 @ 08:09:36

  இதைதான் நமது முன்னோர்கள் அழகாய் நிறைகுடம் தளும்பாதுன்னு சொல்லி இருக்கிறார்களோ ?

  மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  ஆக 31, 2014 @ 09:58:18

  ததும்பும் அறிவுள்ளம் மகிழ்ந்தேற்கும்.
  சீர்மிகு ஆக்கம் .பாராட்டுக்கள்.!

  மறுமொழி

 3. kowsy2010
  ஆக 31, 2014 @ 11:29:43

  ஆம். ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு திறமை மறைந்திருக்கிறது. சிறிய குழந்தையிடமும் நாம் கற்றுக் கொள்ள ஏராளமான விடயங்கள் இருக்கின்றன

  மறுமொழி

 4. karanthaijayakumar
  செப் 01, 2014 @ 00:34:41

  திறமை எங்கிருந்தாலும் போற்றப்படவேண்டும்
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 24, 2014 @ 07:40:46

   ஆம் திறமை போற்றலுக்குரியதே
   அன்பினிய சகோதரா தங்கள் அன்பான கருத்துக் கண்டு மகிழ்ந்தேன்.
   இனிய நன்றியைத் தெரிவிக்கிறேன்.

   மறுமொழி

 5. yarlpavanan
  செப் 01, 2014 @ 22:39:49

  “ஒவ்வொரு வரும் திறமைசாலிகளே
  ஒவ்வோரு வகையில் என்பதை
  மறத்தல் அழகல்ல.” என்பதை
  ஏற்றுக்கொள்கிறேன்!
  சிறந்த பாவரிகள்
  தொடருங்கள்!

  மறுமொழி

 6. கோவை கவி
  செப் 02, 2014 @ 07:12:38

  Mani Kandan :-
  மீச்சிறப்பான வரிகள்.. அருமை

  Vetha Langathilakam:-
  Mikka nanry sakothara.

  மறுமொழி

 7. கோவை கவி
  செப் 02, 2014 @ 08:09:05

  Madhu Ganga:-
  sirappu

  Vetha Langathilakam:-
  Mikka nanry…sakothara..M.Ganga.

  மறுமொழி

 8. sujatha
  செப் 04, 2014 @ 10:41:20

  என்றும் திறமைசாலிகள் படிக்கும் புத்தகங்களை போன்றவர்கள்.
  அருமை. கவித்துவம் கருத்தாக வெளிப்பட்டுள்ளது. வாழ்க தமிழ்.

  மறுமொழி

 9. chandra
  செப் 05, 2014 @ 10:27:44

  அருமை தேர்ந்தெடுத்த வார்த்தை ஜாலங்கள் வாழ்த்துக்கள் சகோதரி

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: