327. நட்பு வாழ்க!

imagesCADSX4DM

நட்பு வாழ்க!

விரும்பி மனதில் தளிர்க்கும்
அருத்தமுடன் துளிர்க்கும் நட்பு.
அருட்சோதியாய் ஒளி தரும்.
கருத்தோடு அந்தமின்றி நீளும்.

நினைக்கும் தோறும் இனிக்கும்
நீங்குதலற்ற நிறையுறவு இது.
நல்லவை கெட்டவை அளவோடு
நவிலுதல் நன்மை நல்கும்.

வட்டமிட்டு வட்டமிட்டு நாளும்
ஒட்டியுறவாடும் தருணம் மனதால்
கொட்டும் கருத்து நிறைந்து
கேட்டுக் கோணலாவார் சிலர்.

சட்டென்று நானே விரும்பிக்
கேட்டதும் மனமுவந்து அன்பால்
இட்டமுடன் இசைந்துதவியதை
திட்டினும் மறவேன் மறவேன்.

மாணவனாய் நான், ஆசிரியனாய்
மாருதியாய் மகிழ்துதவினாய்
மாபெரும் சபையிலு மிந்த
மனிதநேய உதவியை மொழிவேன்.

மறக்கேன் என்றும் நண்பா
மறக்கேன் மறக்கேன் நன்றியை.
சிறப்பு உன்னாலுமே நீயும்
சிறக்க வாழ்ந்திடு என்றும்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-8-2014

நட்பு. 6-6-2010

இன்பத்தில் இணைந்து
இரசிப்பவரை விட
இன்னலுக்கு இதமானவரை
துன்பத்தில் துணையாகும்
துணிவுடையோரை நட்பாக்கு.
துடிப்புடன் துவாலையாவார்.
துடுப்பாக இருந்து
துருவித் துருவித்
துன்பத்தைக் குறைத்திடுவார்.

Vetha. Langathilakam.

imagesCAPD2LKB

50. வருவானா ராமன்!…..

P6020059
(ஓவியம்:- இணையத் தோழி சகோதரி மனோ சாமிநாதன் வரைந்தது.)

வருவானா ராமன்!…..

ஒரு வசந்தம் தேட
ஒருத்திக்கு ஒருவனாகயிவள்
ஒரு மனப்பாடமைந்த
ஒரு ராமனைத் தேடுகிறாள்.

பெருவெளிப் பிரபஞ்சத்திலிவள்
இருளுலகம் காணுமொரு
திருமண வாழ்வு தவிர்க்க
ஒரு ராமனைத் தேடுகிறாள்.

அரும்பும் பொழுதிலென்னையும்
கருகும் பொழுதிலின்னொருவளையும்
இருக்கை கொண்டவனல்லாத
ஒரு ராமனைத் தேடுகிறாள்.

ஒருமைப் பாடுடைய உண்மைக்
கருத்தாளி, கருணன், கிரகபதியை
தருணனாம் திருமகனை உருத்தாக்க
வீர ராமனைத் தேடுகிறாள்.

கையல்ல இதயம் பற்றும்
வையகம் மெச்சும் கைகாரனாகத்
தைரியமாய் மீசை முறுக்கும்
வைரக்காதல் ராமனைத் தேடுகிறாள்.

(இருக்கை –குடியிருப்பு. ஒருமைப்பாடு – ஒற்றுமையுணர்வுடைய
கருத்தாளி – அறிவாளி. கருணன் – அருளுடையவன்.
கிருகபதி – வீட்டுத்தலைவன். தருணன் – இளைஞன்.)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

imagesCADKKMCK

76. கவிதை பாருங்கள்(photo,poem)

இந்தத் தலைக்கனம் மனிதனைப் பாடாய் படுத்திவிடும்.
பயங்கரத் தொல்லை தரும்.
ஓர் அனுபவம் தான் வரிகள்.
மலையிலக்கு என்பது வெளிப்படை என்ற கருத்தில் வருகிறது.

message-pour-la-fete-des-meres-source_x0q

மலைக்கனம் போல மானுடன் 
தலைக்கனம் ஏற்றி ஓர் 
உலைக்களமாகத் தன் 
மனம் கனமாக்குவதேன்! 
தானே ராசா, மந்திரியென 
தலையில் கிரீடம் சூட்டுவதேன்!

*

வலை, கனமானால் மகிழ்கிறான், 
தலை, கனமானால் தடுமாறுகிறான். 
அலைக்கனம் தாங்காத அலை 
நிலைகுலைந்து விசிறுவது காண்! 
விலையற்ற மனிதம் காப்பாற்று! 
வார்த்தைகளைச் சேமி! சக்தி கூட்டு!

*

-gold-dividers

Next Newer Entries