339. ஓ!…இசையே!…

illustration music and waves

ஓ!…இசையே!…

சொற்கள் அமைவாய் விழ விளையும்
சொல்லோசை நயம் இயல்பாய் நுழையும்.
ஓசை (ஒலி) இராக ஒழுங்காதல் இசை.
ஓசை, லயம் இணைவு இசையோசை.

உழைப்பாளி குரலோசை தாளத்தோ டிணைந்து
களைந்தது களைப்பு, விளைவு ஆனந்தேசையானது.
நாட்டுப் பாடல், நாடோடி இசையது.
நாட்டுப்பாடல் இசை ராகத்தின் ஆணிவேர்.

ஐம்பொறிகளில் மகோன்னத இன்னதிர்வு தெளிக்கும்.
ஐயமில்லை உணர்வு கிளறி ஊக்குவிக்கும்.
ஐசுவரியம் ராகப் பிழிவின் இன்னூற்று.
ஐக்கியமாகும் இசை சீவராசிகளின் உயிர்நாடி.

இனிய ஏழு சுரங்கள் சரிகமபதநி.
இசை ஏறுமுகமாக அசைந்து ஆரோகணமாகி
இறங்க அவரோகணமாய் இசை பிறக்கிறது.
இசை யிணைவு ஆதிப் பழங்குடியிலிருந்து.

இசை மென்னலைக ளிணைந்து பேரலையாகிறது.
அசைந்து உணர்வை ஆட்டிப் படைக்கிறது.
தசையையும் நெகிழ்த்தும் ஈர்ப்புடை மாயமது.
இசை உயிரினங்களை இசையவைப்பதா லிசையானது.

(கவிதை எழுதி முடிய ஒரு ஆவலில் ”..கேளுங்கள் ஒரு கவிதை..” என்று கணவருக்கு வாசித்துக் காட்டி என்ன தலைப்பு வைக்கலாம் என்றேன்”….ஓ! இசையே!..” என்றார். நான் நினைத்தது இசை என்று மட்டுமே. ”..ஓ! இது நல்லாயிருக்கே…” என்று தலைப்பிட்டேன். அவருக்கு நன்றி.)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
30-9-2014.

15574709

45

81. கவிதை பாருங்கள் – அல்லல்லழிக்கும் +ஒருவரும் பாரதியை

703578-bigthumbnail-1

அல்லல்லழிக்கும் கிரியாவூக்கி
வெல்லமப்பிய மாத்திரைகள்
நல்ல வார்த்தைகள்
நல்ல நந்தவனம்.

543847_503818422992270_33271632_n-ll

12965393-set-of-gold-dividers

338. சாற்றுகிறான் வாசுதேவன்!

imagesCA2N2CW2

சாற்றுகிறான் வாசுதேவன்!

முடிவுறுமென்ற வாழ்வு
முடிவுறாது நீள
விடிந்ததென மனம்
மகிழ்ந்தாட
அடி விழுகிறது இது
அறுதியோவென-
எதுவோ நிரந்தரம்!
ஏற்கும் பக்குவம்
தோற்கா நிலை
ஊற்றாகிடாதோ!
ஏற்றுக் கொள்ளென்றே
சாற்றுகிறான் வாசுதேவன்!

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
25-9-2014

stock-photo-tablet-with-the-diagnosis-alzheimer-s-disease-on-the-display-185896358

peacock-feather-line[2]b

337. பனி.

51884_1599666428751_179239_o-pp

பனி.

தீ கண்டால் தீர்தல்
மீ அழகுப் பனி
வீ ஒரு வகையில்.
சீ என்பாருமுளர்.

திரவநிலை மாறிய
திண்மநிலை நீர்.
திரமாய் ஒளியூடுருவும்.
கிறீன்லாந்து, அன்டார்டிக்காவிலதிகம்.

நுனிப்புல்லில், பூக்களில்
நனியழகு வைரம்.
தனியுறைநிலை நீர்
துனி குளிர்.

ஞ்சுப் பனியாய்,
பனித்தூறலாய்,
ஆலங்கட்டி மழையாய்
ஆச்சரியப் பொலிவு.

ற்சிற்பம்,
மணற்சிற்பம்,
பனியிலும்
செதுக்கும் கலை.

றைவாய் நடப்பது
பனிப்போர் என்பார்.
மனநிலை குளம்பியோரையும்
அவருக்குப் பனியென்பார்.

(மீ – மேன்மை. வீ – மலர். திரமாய் – வலிமையாய். நனி – மிகுதி
தனி – ஒப்பின்மை. துனி – வெறுப்பு. தீர்தல் – அழிதல்)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
21-9-2014.

cloudbar550

32. நான் கொடுப்பது யாருக்கு….!!!

1455d-versatile-blogger

avarkal unmaikal

புரட்டாதி 18 அன்று இந்த விருதை- வேசற்றைல் புளோகர் விருதை இந்த – இணையத்தளமும் எனக்கு வழங்கியுள்ளது. இது எனக்கு இன்று தான் தெரிந்தது.  இரண்டாவது தடவையும் இவ் விருது.
இந்த அன்புள்ளம் 53 பேருக்கு இதைக் கொடுத்துள்ளார்..  அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழன்.  இந்த இணைய முகவரி தருகிறேன் சென்று பாருங்கள்.  இதோ…

http://avargal-unmaigal.blogspot.com/2014/09/award.html     

இந்த அன்புள்ளத்திற்கு மனமார்ந்த நன்றியை இங்கு தெரிவிக்கிறேன்.

பலர் பல பேரிற்கு இவ்விருதுகளைக் கொடுத்து விட்டனர்.
எனக்கு யாரிற்குக் கொடுப்பது என்று தெரியவில்லை.  குறைந்தது 5 பேருக்கு நான் கொடுக்க வேண்டுமாம்.
தேடித் தேடிப் பார்த்து 4 பேரை எடுத்தேன். இவர்கள் ஏற்கெனவே இவ்விருதைப் பெற்றார்களா என்று தெரியவில்லை.

1.  http://www.gowsy.com/    –   கௌரி. சிவபாலன்.

2. http://ilavenirkaalam.blogspot.dk/         மகேந்திரன்.

3.http://iravinpunnagai.blogspot.com/       சி.வெற்றிவேல்

4.http://thuruvanatchathiram.blogspot.in/         மதிப்பிற்குரிய சந்திரா

இனி என்னைப் பற்றி எழுத வேண்டும்.  

மகனிற்கு 2வது பிள்ளை பிறந்துள்ளது எங்கள் இரண்டாவது பேரன்.
மூத்தவர் இரண்டரை வயது சரியான சுட்டி. அவர் என்னோடு தான் 2 நாட்கள் தூங்கினார்.
எனக்கு ஓய்வே இல்லை. அதனாலேயே இவைகள் தாமதமாகி விட்டது. என்னைப்பற்றிய தகவல்கள் இந்த இணைப்பில் உள்ளது வாசியுங்கள்.  இதோ…

https://kovaikkavi.wordpress.com/about/

எல்லோருக்கும் வணக்கம்.

இலங்கை,யாழ்ப்பாணம் கோப்பாய் நாவலர் பாடசாலை முன்னாள் ஆரம்பகர்த்தாவும் தலைமையாளரும், யாழ் அரச குடும்ப இரண்டாவது பரராஐசேகரன் (எதிர்மன்னசிங்கன்) வம்சாவழி வந்த முருகேசு சுவாமிநாதர் -சிவகாமிப்பிள்ளையின் இரண்டாவது மகன் நகுலேஸ்வரர் எனது தந்தையார்.

புத்தூர் மாளிகைப் பொன்னம்பலம்-தெய்வானைப் பிள்ளையின் இரண்டாவது மகள் எனது தாயார்.

நர்சரி ஆசிரியையாக கோப்பாயில் ஓரு வருடம் வேலை செய்தேன். திருணமாகி ஹொரண நகரத்தில்  ஒரு கிறீஸ்தவ பாடசாலையில் பிரதி ஆசிரியராகச் சிறிது காலம் பணி செய்தேன். இங்கு டென்மார்க்கிலும் சிலகாலம் பிரதி ஆசிரியராகத் தமிழ் பாடசாலையில் கடமை புரிந்துள்ளேன்.

1976ல்    இலங்கை வானெலியில் ‘பூவும் பொட்டும்’ மங்கையர் மஞ்சரிக்கு நான் எழுதியதில் இருந்து எனது எழுத்துச் சாலை ஆரம்பம்.    ( இப்படித் தெடருகிறது…தயவு செய்து  இணைப்பைச் சொடுக்கி வாசியுங்கள்) 

இரண்டாவது தடவையும் இவ் விருது.

blogaward

அனைவரிற்கும் மிக்க நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
20-9-2014

images 2356

31. எனக்கும் ஒரு பரிசு

1455d-versatile-blogger

இப்படி ஒரு தகவல் வந்தது.
ஆச்சரியமடைந்தேன்.

yarlpavanan
செப் 17, 2014 @ 06:46:54 தொகு

அன்புள்ள அறிஞரே! தங்களுக்கென வலைப்பதிவர் விருது பகிரப்பட்டுள்ளது. அதனைத் தங்கள் தளத்திலும் பதிந்து உதவுமாறு விரும்புகின்றேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்வையிடுக.

வலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா?

http://wp.me/pTOfc-b9

இவர் பிரசுரித்த பதிவில் ஒரு பகுதியை இங்கு தருகிறேன். அதாவது அவர் எனக்கும் இவ்விருதைத் தந்துள்ளார்.
அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
வீட்டில் நேரமற்ற நிலைமையால் மேலும் எழுத முடியவில்லை.
இதைத் தெரிவிப்பதற்காக இதைப் பதிகிறேன்.
சகோதரருக்கு மனமார்ந்த நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
18-9-2014

எனக்களித்த விருது…
தம்பி ரூபன் அவர்கள் இரு விருதுகளை என்னுடன் பகிர்ந்தார். அதில் ஒன்று தான் கீழே தரப்பட்டிருக்கிறது.

எனது விருதைக் கீழ்வரும் பதிவர்களுடன் பகிருகிறேன்…
வலைப்பதிவர்களின் தமிழ்ப்பக்கங்கள் (http://tamilsites.doomby.com/) தளத்தில் இருந்து எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்ட சிலருடன் பகிருகிறேன்.

http://chollukireen.wordpress.com/
http://mahalakshmivijayan.wordpress.com/
http://ramanans.wordpress.com/
https://kovaikkavi.wordpress.com/
http://www.geevanathy.com/
http://www.anbuthil.com/
http://iravinpunnagai.blogspot.com/
http://dbs1205.blogspot.in/
http://kavithaivaasal.blogspot.in/
http://vijaykavithaigal.blogspot.in/

1653344_615174351888104_825373005_n

336. வகையின்றி வாழ்தல்..

imagesCAMC2V0Z

வகையின்றி வாழ்தல்…

நினைவெனும் பகலில்
நனையும் இன்பத்தில்
அனைத்தும் உருவாகுதல்
கனைதல் பாக்கியம்.

நிறை நித்திரை
குறைந்து களைப்பை
இறைத்து ஆரோக்கியம்
அறைகூவல் இழப்பு.

மிகையாகும் களைப்பு
முகையவிழும் இராத்தூக்கம்.
வகையாய் மலரும்
நகை நிம்மதி.

கையாகும் பாறையென
புகையாகும் புன்னகை.
சிகை சிலிர்த்துத்
தசைகளை இயக்கு!

வாழ்வுக் கூத்தில்
வகையின்றி வாழ்தல்
தாழ்வுனை நெருங்குதல்
இகழ்வு! மாற்றிடு!

பா ஆக்கம வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14.9.2014
(கனைதல் – நெருங்குதல்)

reflection-swirl-2

335. புகை யெனும் பகை.

smoke_texture2803

புகை யெனும் பகை.

*

ன்னும் கொஞ்ச நேரம் இழுத்தால்
தான் என்ன! இழு!
புகை பகையென்று பலர் ஓதுகிறார்
புகை வகையாக ஊதுகிறார்.
புகையெனும் கொடிய வேது பிடிப்பதால்
திகைத்திட வருவான் யமசிதுரன்.
உள்ளுறுப்பில் நிக்கோட்டின் படிவு ஆபத்து
கருத்தரிப்பு வாய்ப்பும் நழுவுமே!….. (இன்னும் கொஞ்சநேரம் )

னித இறப்புத் தோற்றுவாய் பல
கணிப்பில் முக்கிய இடத்துக்
காரணியாக இரண்டாம் இடம் புகையிலைக்கு.
உலக புகைத்தல் எதிர்ப்பு நாள்
வைகாசி 31. புற்று நோயிற்கு
புகையால் 80விகித வாய்ப்பு.
வதம் செய்கிறான் மனிதன் தன்னை
சுதம் அணைக்கிறான் வீணே…..(இன்னும் கொஞ்சநேரம் )

தமாய்க் கூடும் இருமல் புகைக்கு
மிதமாய் நடுங்கும் தேகம்-
இதயநோய் இறுக அணைத்துத் தழுவும்
இரைப்பால் உடல் மெலியும்
மகா மயக்கம் மனிதனைச் சூறையாடும்
தகா உறவு புகைப்பகை.
சகாவல்ல புகை! சகுனி! விலக்கு!
சுகாசனத்தோடு சகானா பாடு!…… (இன்னும் கொஞ்சநேரம் )…

(சிதுரன் – பகைவன், தீயவன். சுதம் – அழிவு. சுகாசனம் – 9 ஆசனத்தில் ஒன்று)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
11-9-2014

*

வேறு- (புகை பற்றியே)

https://kovaikkavi.wordpress.com/2013/04/15/272-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/
_______

 

48176-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Border-Of-Rainbow-Lines

334. ஆசிரியர் நாள்

aasitpyar-2

ஆசிரியர் நாள்

ந்தியக் குடியரசுத் தலைவர்
முந்தைய சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
சிந்தையால் வந்துதித்த நாளிது.

ற்றிந்தவையை ஒரு உற்சவமாய்
மற்றவருக்குக் கொடுக்கு மெண்ணம்
அற்புதம்! ஆசிரியனதைச் செய்கிறான்.

சப்பற்ற பழக்க வழக்கங்கள்
அசடற்ற கல்வி, கலை
கசடறக் கற்பித்தலிற்குக் கௌரவம்!

ண்ணெழுத்தை யெம் கண்ணாக்கும்
அண்டத்தில் பெற்றோருக் கடுத்ததாய்
எண்ணும் குரு வணக்கம்.

ழுக்கம், குறிக்கோள், இலட்சியமெனும்
அழுக்கற்ற மாதிரியுருவான வழுக்காத
இழுக்கற்ற ஆசிரியனை வாழ்த்துவோம்!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
4-9-2014.

https://kovaikkavi.wordpress.com/2011/05/11/250-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E2%80%93-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/

div138

33. வேரோடட்டும்……

kananyuu

 

வேரோடட்டும்……

பூக்காட்டில் புகுந்து
நோக்காடின்றி உலாவ
சாக்காடும் நகர்ந்திடும்.
பூக்கூடை மனதில்
பூக்கும் கவிகள்
பூவாசமாய்க் கொட்டட்டும்!
பூங்காற்றும் இன்கவிப்
பூக்களை விசிறட்டும்.

பூவிதையான தமிழ்ப்
பாவிதை முளைக்கக்
கவிதை செய்கிறேன்.
கவித்துவம் பவித்திரம்!
நவியம் விவிதம்!
பவிகம் சிலிர்ப்பை
நவிலுங்கள் நாளும்
நானும் உயர்ந்திட!

ணர்வை உள்ளதைப்
புணர்கிறது தமிழ்.
உணர்த்துகிறேனுள்ளபடி
உயிராகச் சுமந்து.
வானத்து நிலவாக
வையகத்திலொளிர
நானேத்தும் கவி
வேரோடட்டுமுள்ளங்களில்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
7-9-2014
(நவியம் -புதுமை. விவிதம் -பலவிதம். பவிகம் – சிறப்பு.)

 

16161859-vector-set-of-vintage-calligraphic-ornaments

Previous Older Entries