332. நிலையற்ற வாழ்வு

ShifaNaturopathicHealingCentreMumbai_1494 (1)

 

நிலையற்ற வாழ்வு

 

தற்காக ஒன்றைப் பற்றுகிறோம்!
எதற்காக ஒன்றை நேசிக்கிறோம்!
எதற்காக ஒன்றைப் பறிகொடுக்கிறோம்!
இதற்காக ஒரு உலக வாழ்வா?

துடிக்கத் துடிக்க உயிர் பிரிவதும்
வெடித்து வெடித்து மனம் அழுவதுவும்
படித்துப் படித்துப் பலர் கூறியும்
நடிப்பு நடிப்பே இவ் வாழ்வு.

ல்லாம் பொய்யெனும் வாழ்வில்
எல்லாம் மெய்யெனும் நீள்வு.
கல்லான இதயமில்லாததால் வாழ்வு
பொல்லாத வேதனைகளில் ஆழ்வு.

ழிகின்ற உடலிற்கும் உயிரிற்கும்
பொழிகின்ற கருத்தும் கவனமும்
விழிகளால் பொழிகின்ற கண்ணீரும்
அழிவதில்லை ஒழிவதில்லை என்றும்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
18-11-2004…ல் ஏதோ ஒரு துன்பமான நேரத்தில் எழுதியது.

 

0032

Advertisements

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோமதி அரசு
  செப் 03, 2014 @ 01:05:09

  துடிக்கத் துடிக்க உயிர் பிரிவதும்
  வெடித்து வெடித்து மனம் அழுவதுவும்
  படித்துப் படித்துப் பலர் கூறியும்
  நடிப்பு நடிப்பே இவ் வாழ்வு.//

  உண்மை.
  நிலையற்ற வாழ்வு என்று தெரிந்தும் வாழ்கிறோம்.

  மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  செப் 03, 2014 @ 03:12:34

  அழிகின்ற உடலிற்கும் உயிரிற்கும்
  பொழிகின்ற கருத்தும் கவனமும்
  விழிகளால் பொழிகின்ற கண்ணீரும்
  அழிவதில்லை ஒழிவதில்லை என்றும்.

  வாழ்வே நிலையற்றது ..!
  இதில் துன்பம் மட்டும் நிலையாகவா இருக்கும்?

  துன்பமும் இன்பமாக மாறும்..!

  மறுமொழி

 3. chandra
  செப் 03, 2014 @ 04:04:39

  Arumai sister

  மறுமொழி

 4. கவிஞா் கி. பாரதிதாசன்
  செப் 04, 2014 @ 21:25:43

  வணக்கம்!

  அலையுற்று நெஞ்சம் மலைதுன்பம் ஏற்கும்
  நிலையெற்ற வாழ்வில் நெளிந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  மறுமொழி

 5. iniya
  செப் 05, 2014 @ 03:08:18

  உண்மை தான் பூஜ்ஜியதிற்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்போம். இல்லையா மிக நல்ல பதிவு வாழ்த்துக்கள் தோழி …!

  மறுமொழி

 6. KILLERGEE Devakottai
  செப் 05, 2014 @ 06:28:06

  வணக்கம் சகோதரி…
  18-11-2004…ல் ஏதோ ஒரு துன்பமான நேரத்தில் எழுதியது,

  இதை தாங்கள் என்றோ எழுதியிருந்தாலும் எனது ”மௌன மொழி” க்குபதில் கொடுப்பதுபோல் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது நன்றி.

  சகோதரி கவிதைப்போட்டிக்கு அனுப்பி எனது இருகவிதைகளை காண அன்புடன் வேண்டுகிறேன்.

  மறுமொழி

 7. yarlpavanan
  செப் 14, 2014 @ 07:21:01

  வாழ்வில் காணும் உணர்வுகள்
  தொடருங்கள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: