333. குருவை மதிக்கும் குணம்.

 

bi_teachersi_07_sep_4_120533

 

குருவை மதிக்கும் குணம்.

ண்புடை பெற்றவர் வளர்ப்பு
அன்புடை குருவின் கவனிப்பு
இன்புறும் சூழல் விரிப்பு
தென்புடை பண்பு முளைப்பு.

குருவை மதிக்கும் குணம்
அரும்பில் விரியும் மணம்.
விரும்பின் முயற்சியிலும் தினம்
வருமே மதிக்கும் குணம்.

டங்காத் தன்மையும் பெரும்
அகமகிழ்வற்ற நிலையும் தரும்.
அனுபவத்தில் மதியாமை வரும்.
அவமானமும் நிறைந்து வரும்.

வாழ்வுப் பாதையைச் செப்பனிடும்
வயிர(வைர) வழிகாட்டிகள் உயர்த்திடுமெம்
வண்ணமய முகவரிக்கு ஆதாரம்
வரமாய் அமையும் நற்குருவாம்.

குருவை மதித்துப் பணிந்து
அருமை அறிவை அணிந்து
பெருமையாய் உயர்ந்து கணிப்பில்
சிகரம் தொடலாம் நற்குருவால்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
4-9-2014.

மலர்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகள்.

 

imagesCACGHBJY

Advertisements

21 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ranjani135
  செப் 05, 2014 @ 09:05:19

  //சிகரம் தொடலாம் நற்குருவால்// அருமையான வரிகள். இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள், சகோதரி.

  மறுமொழி

 2. chandra
  செப் 05, 2014 @ 10:58:22

  அருமை அருமை

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  செப் 05, 2014 @ 11:08:30

  “இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.”:

  மறுமொழி

 4. கவிஞா் கி. பாரதிதாசன்
  செப் 05, 2014 @ 11:15:33

  வணக்கம்!

  குருவின் திருவருள் கூடுமெனில், வாழ்வில்
  பெருகும் இனிமை பிணைந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  மறுமொழி

 5. Bagawanjee KA
  செப் 05, 2014 @ 17:06:36

  குருவுக்கு நீங்கள் தந்த காணிக்கைக் கவிதையை ரசித்தேன் !

  மறுமொழி

 6. karanthaijayakumar
  செப் 06, 2014 @ 01:41:16

  ஆசிரியர் தினத்தில் ஓர் அருமைக் கவிதை
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 7. வே.நடனசபாபதி
  செப் 06, 2014 @ 05:41:56

  ஆசிரியர் தினத்தன்று தங்கள் யாத்த கவிதை அருமை. வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 8. கோவை கவி
  செப் 06, 2014 @ 08:06:34

  Gowry Sivapalan :-
  மாதா, பிதா, குரு அதன் பின்தான் தெய்வம் . இன்று அவசியம் தேவையான கவிதை

  Vetha Langathilakam:-
  Mikka nanry sis….

  மறுமொழி

 9. விமலன்
  செப் 07, 2014 @ 06:30:50

  ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 10. sujatha
  செப் 07, 2014 @ 19:00:45

  குருவை மதிக்கப் பழகுவதற்கும் மனப்பக்குவம் தேவை. கவிநயம்
  அருமையாக தெளிவு படுத்தியுள்ளது. வளரட்டும் தமிழ்ப்பணி.!!!

  மறுமொழி

 11. yarlpavanan
  செப் 14, 2014 @ 07:22:32

  ஆசிரியருக்கு நன்றி கூறல் பேணப்படவேண்டும்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: