335. புகை யெனும் பகை.

smoke_texture2803

புகை யெனும் பகை.

ன்னும் கொஞ்ச நேரம் இழுத்தால்
தான் என்ன! இழு!
புகை பகையென்று பலர் ஓதுகிறார்
புகை வகையாக ஊதுகிறார்.
புகையெனும் கொடிய வேது பிடிப்பதால்
திகைத்திட வருவான் யமசிதுரன்.
உள்ளுறுப்பில் நிக்கோட்டின் படிவு ஆபத்து
கருத்தரிப்பு வாய்ப்பும் நழுவுமே!….. (இன்னும் கொஞ்சநேரம் )

னித இறப்புத் தோற்றுவாய் பல
கணிப்பில் முக்கிய இடத்துக்
காரணியாக இரண்டாம் இடம் புகையிலைக்கு.
உலக புகைத்தல் எதிர்ப்பு நாள்
வைகாசி 31. புற்று நோயிற்கு
புகையால் 80விகித வாய்ப்பு.
வதம் செய்கிறான் மனிதன் தன்னை
சுதம் அணைக்கிறான் வீணே…..(இன்னும் கொஞ்சநேரம் )

தமாய்க் கூடும் இருமல் புகைக்கு
மிதமாய் நடுங்கும் தேகம்-
இதயநோய் இறுக அணைத்துத் தழுவும்
இரைப்பால் உடல் மெலியும்
மகா மயக்கம் மனிதனைச் சூறையாடும்
தகா உறவு புகைப்பகை.
சகாவல்ல புகை! சகுனி! விலக்கு!
சுகாசனத்தோடு சகானா பாடு!…… (இன்னும் கொஞ்சநேரம் )…

(சிதுரன் – பகைவன், தீயவன். சுதம் – அழிவு. சுகாசனம் – 9 ஆசனத்தில் ஒன்று)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
11-9-2014

48176-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Border-Of-Rainbow-Lines

Advertisements

21 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Rajarajeswari jaghamani
  செப் 12, 2014 @ 12:12:23

  தகா உறவு புகைப்பகை.
  சகாவல்ல புகை! சகுனி! விலக்கு!
  சுகாசனத்தோடு சகானா பாடு!……

  விழிப்புணர்வு தரும் ஆக்கம்..

  மறுமொழி

 2. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  செப் 12, 2014 @ 12:24:22

  வணக்கம்
  நல்ல விழிப்புணர்வு கவிதை பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 3. Bagawanjee KA
  செப் 12, 2014 @ 12:37:29

  புகைப்பவர்கள் இதைப் படித்து ப்ப்ப்பூ என்று ஊதித் தள்ளாமல் இருந்தால் பிழைச்சுக்கலாம் !

  மறுமொழி

 4. karanthaijayakumar
  செப் 12, 2014 @ 14:52:20

  புகை என்றுமே பகைதான்
  அருமையான கவிதை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 5. Dr.M.K.Muruganandan
  செப் 12, 2014 @ 16:28:00

  விழிப்புணர்வு ஊட்டும் அருமையான கவிதை

  மறுமொழி

 6. chandra
  செப் 13, 2014 @ 06:54:48

  மகா மயக்கம் மனிதனைச் சூறையாடும்
  தகா உறவு புகைப்பகை.
  சகாவல்ல புகை! சகுனி! விலக்கு

  விழிப்புணர்வு ஊட்டும் அருமையான கவிதை

  மறுமொழி

 7. சிவா
  செப் 13, 2014 @ 07:14:24

  அருமையாகச் சொன்னீர்கள்… அம்மா..

  மறுமொழி

 8. கவியாழி கண்ணதாசன்
  செப் 13, 2014 @ 09:03:40

  புகை எனக்குமே பகை

  மறுமொழி

 9. yarlpavanan
  செப் 14, 2014 @ 07:25:22

  சிறந்த வழிகாட்டல்
  தொடருங்கள்

  மறுமொழி

 10. Kavignar valvai Suyen
  நவ் 13, 2014 @ 21:33:10

  புகைத்தலால் இருமல் துவங்கி இதயமதை இரைப்பால் சூறையாடும் சகாவல்ல பகை சகுனி – இதம் கொள்ளும் புகையினால் என்றோ ஒரு நாள் உன்னைச் சூது கௌவும் அருமையான விளக்கங்கள், வாழ்த்துக்கள் சகோதரி வேதா..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: